Sunday, December 26, 2010

வினவு .

கடந்த 18 மாதத்தில் என்னுடைய தேவியர் இல்லத்தை தவிர மற்றொரு தளத்திற்கென்று எழுதிய கட்டுரை சாயமே இது பொய்யடா.  திருப்பூரில் இருக்கும் சாய்ப்பட்டறைகளின் அவலங்களை எழுதி தோழர்கள் கேட்டுக் கொண்டபடி வினவு தளத்திற்கு அனுப்பி வைத்தேன்.  

கால் புள்ளி அரைப்புள்ளிகளைக் கூட மாற்றாமல் தலைப்பை மட்டும் மாற்றி வினவுத் தோழர்கள் பிரசுரம் செய்து என்னுடைய தள பெயரையும் சேர்த்து தெரிவித்து மரியாதை செய்து இருந்தார்கள்.  

இந்த கட்டுரை 2011 ஜனவரி மாதம் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று பதிப்பகம் மூலம் வெளியிடும் புத்தகங்களில் ஒரு தலைப்பில் இதுவும் வெளியாகின்றது. 


மீண்டும் தொழிலாளி வர்க்கம் என்ற புத்தகத்தில் வினவு தளத்தில் எழுதப்பட்ட பலரின் கட்டுரைகள் வெளிவருகின்றது. இந்த புத்தகத்தில் என்னுடைய கட்டுரையும் இடம் பிடித்துள்ளது.

நான் எழுதி வெளிவரவிருக்கும் டாலர் நகரம் என்ற புத்தகத்திற்கு முன்பே தோழர்களின் அக்கறையினால் வெகு ஜன புத்தக அச்சு ஊடகத்தின் வாயிலாக வெளிவருகின்றது. . 

ஓவியர் மருது. மனநல மருத்துவர் ருத்ரன் வெளியிடுகிறார்கள்.  .

இந்த புத்தகங்களின் வெளியிடு இன்று சென்னையில் நடக்கின்றது.  வினவுத் தோழர்களுக்கு தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.

என்னுடைய எழுத்துக்கள் அச்சு ஊடகத்தின் மூலமாக வருவது இதுவே முதல் முறை.  தோழர்கள் கட்டுரை எழுதிய ஒவ்வொருவரின் தளத்தையும் சேர்த்து மரியாதை செய்துள்ளார்கள். நான் செய்துள்ள வேலையை அவர்கள் செய்து முந்திக் கொண்டு விட்டார்கள். அவர்களின் புரிந்துணர்வுக்கு நன்றி.

நான் திருப்பூர் குறித்து தொடக்கம் முதல் நான் எழுதிய பல கட்டுரைகளைப் படித்த பலரும் புத்தகமாக வேண்டிய விடயங்கள் என்று தங்கள் எண்ணத்தை தெரிவித்து இருந்தார்கள்.  ஈழம் குறித்து எழுதப்பட்டுள்ள புத்தகத்திற்கு முன் இந்த டாலர் நகரம் என்ற புத்தகம் இந்த புத்தக கண்காட்சி முடிந்தவுடன் அச்சுக் கோர்ப்பிற்கு செல்கிறது.  ஒரு தனிப்பட்ட மனிதனின் சுயசரிதை மூலமாக ஒரு தொழில் நகரத்தின் நீள அகலத்தைப் பற்றி புரிந்து கொள்ள உங்களுக்கு இந்த புத்தகம் உதவக்கூடும்.

என்னுடைய புத்தகம் வெளிவருவதற்கு முன்பு வினவுத் தோழர்கள் மூலம் என்னுடைய எழுத்துக்கள் வெகு ஜன அச்சு ஊடகத்தில் வெளிவருவது அதிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது.  இந்த கட்டுரை என்னுடைய டாலர் நகரத்திலும் வெளிவருகின்றது.

என்னைப் போன்றே சமூகம் குறித்து எழுதப்பட்ட பல கட்டுரைகள் மீண்டும் தொழிலாளி வர்க்கம் என்ற புத்தகத்தின் மூலம் வெளிவருகின்றது.  சென்னையில் இருப்பவர்கள், புத்தக கண்காட்சிக்கு செல்லும் நண்பர்கள் கீழைக்காற்று வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை வாங்கிப் படித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன். 

எழுத்துலக வாழ்க்கையில் இன்று வரையிலும் எந்த திட்டமிடுதலும் இல்லாத போதும் கூட என்னை எங்கங்கோ இழுத்துக் கொண்டு சென்று கொண்டுருக்கிறது. 

திருப்பூரை விட்டு அத்தனை சீக்கிரம் வெளியே செல்லமுடியாத சாப அல்லது சந்தோஷ வாழ்க்கை (அதுவும் டிசம்பர் ஜனவரி மாதம் என்றால் ஒவ்வொருவரும் 18 மணி நேரம் உழைக்க வேண்டிய அவஸ்யத்தில் இருப்பதால்) வாழ்ந்து கொண்டுருப்பதால் வினவுத் தோழர்கள் நடத்தும் புத்தக வெளியீடு (டிசம்பர் 26 2010) விழா வெற்றியடைய வாழ்த்துக்ள். 

இந்த சாயப்பட்டறை பிரச்சனைகளின் தொடர்ச்சியாக இப்போது இங்கு கடந்த வாரங்களில் பல விசயங்கள் நடந்து முடிந்துள்ளது. அது குறித்து நாளை வெளியிடுகின்றேன்.  

ஆட்சி நிர்வாகத்தில் சில நல்ல அதிகாரிகள் வந்து அமரும் போது பல நல்ல விசயங்கள் நடக்கும் என்பதற்கு இதுவே மிகச் சிறந்த உதாரணமாகும். தமிழ்நாடு அரசாங்கத்தில் இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும் திரு இறையன்பு அவர்கள் இப்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தலைமைப் பொறுப்பில் வந்துள்ளார். 

அவரைப்பற்றி தமிழ்மண நட்சத்திர வாரத்தில் நான் எழுதிய முமு அவர்கள் மூலம் தனிப்பட்ட சில பல விசயங்களை நான் அறிவேன். 

கடந்த ஒரு மாதத்தில் இறையன்பு முயற்சியால் இங்கு பல அதிரடி சமாச்சாரங்கள் நடந்துள்ளது. நான் எழுதிய எழுத்துக்கள் வெறும் எழுத்தாக கடந்து போய் விடாமல் வினவுத் தளத்தில் எழுதி வைத்த கட்டுரைக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகின்றேன்.  

அது குறித்து நாளை வெளியிடும் கட்டுரையில் படிக்கத் தயார் தானே?

அதற்கு முன்பு இந்த சாயப்பட்டறைகள் குறித்து முழுமையான புரிந்துணர்வு கிடைக்க இந்த தலைப்பில் உள்ளே சென்று மூக்கைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்து விடுங்க.  


சாயக்கழிவு நீரின் கப்பு வாடை நம்மை கலங்கடிக்கும். காரணம் சாயக்கழிவு நீரென்பது கண்களால் பார்க்கும் போது ஜொலிஜொலிக்கும். மண்ணில் கலந்து செல்லும் போது நுரைகக்கி நகர்ந்து செல்லும். 

ஆனால் இந்த நீர் கலந்த மண்ணும் கலக்காத மண்ணும் அடுத்த ஒரு நூற்றாண்டு ஆனாலும் வெறும் மலடாகத்தான் இருக்கும்.

இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும்.  செய்தால் தான் அந்நியச் செலவாணி கிடைக்கும்.  கிடைத்தால் தான் சர்வதேச சமூகத்தில் கொடுக்கல் வாங்கல் நடக்கும். எல்லாமே மறுக்க முடியாத உண்மை தான். 

ஆனால் ஏற்றுமதி மட்டும் செய்ய வேண்டும். அதற்கு தேவைப்படும் எந்த  உள்கட்டமைப்புகளையும் செய்து தந்து விட மாட்டோம் என்று புதிய தத்துவத்தை உருவாக்கிக் கொண்டுருக்கும் இந்திய ஜனநாயக காவலர்களின் திறமையினால் இன்று திருப்பூரில் உள்ள முதலாளிகளின் பாதிப்பை விட இதை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டுருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தெருவுக்கு வந்து நாளாகிவிட்டது. பலரும் அவரவர் கிராமத்திற்கு பொழப்ப பார்க்கச் சென்று விட்டார்கள். இதன் இழப்பு மற்றும் வலிகளைக் குறித்து நாளை வெளியிடும் கட்டுரையை படித்துப் பாருங்கள்.

இந்தியாவில் உள்ள தற்போதைய மத்திய அரசாங்க அடிவருடிகள் இந்தியாவில் உள்ள விளக்குமாறுகளைக்கூட ஏற்றுமதி செய்து விட்டு தான் மறுவேலை பார்ப்போம் என்று ஆளாளுக்கு களத்தில் நின்று சேவை புரிந்து கொண்டுருக்கிறார்கள்.  

உள்ளே இருப்பவன் அழுதால் என்ன?  மயானத்திற்கு போனால் என்ன? நாம் சார்ந்திருக்கும் வெளிநாடுகளில் கெட்ட பெயர் எடுக்க முடியுமா? நமக்கு வர வேண்டிய கட்டிங் சமாச்சாரத்தை விட்டுக் கொடுக்க முடியுமா?

வாழ்க இந்திய ஜனநாயகம்.  

வளர்க பணத்தாசை என்ற மனநோய் கொண்ட அரசியல்வியாதிகள்.

33 comments:

கிரி said...

வாழ்த்துக்கள் ஜோதிஜி

உங்கள் தலைப்புகள் ரொம்ப நல்லா இருக்கு எ கா: டாலர் நகரம் :-)

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் ஜோதிஜி.

உமர் | Umar said...

வாழ்த்துகள் ஜோதிஜி.

இன்னைக்கும் இனியும் விழ இருக்கும் மாலைகளை சுமக்க கழுத்தில் வலு இருக்கா?

:-)

சென்னை பித்தன் said...

புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள்

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

வாழ்த்துகள் ஜோதிஜி !

தனசேகர் said...

புத்தகத்திற்கு முன் கட்டுரை !! வழ்த்துக்கள் ஜோதிஜி :).

அடுத்த கட்டுரைக்குக் காத்திருக்கிறோம் !!

கண்ணகி said...

வாழ்த்துக்கள் ஜி...வாழ்த்துக்கள்...

ஜோதிஜி said...

இன்னைக்கும் இனியும் விழ இருக்கும் மாலைகளை சுமக்க கழுத்தில் வலு இருக்கா?

கிரி பாத்தீகளா இந்த கும்மி நம்ம முதுகு மேலே ஏறி கும்முறத? தனசேகர் உங்கள் விமர்சனமே ஒரு தலைப்பு போல் இருக்கிறது. வாங்க கண்ணகி. கனாக்காதலன் நம்ம குருஜீ அது ஒரு கனாக்காலம் போலவே இருக்குறீகளே? சென்னை பித்தன் இது வினவு தோழர்களின் புத்தக வெளியீடு. அதில் வரும் ஒரு கட்டுரை மட்டும் என்னுடையது. ஒன்னாப்பு போறதுக்கு முன்னாடி பாலர்பள்ளிக்கு போவ்து மாதிரி? நன்றி குமார்.

ராஜ நடராஜன் said...

//இன்று திருப்பூரில் உள்ள முதலாளிகளின் பாதிப்பை விட இதை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டுருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தெருவுக்கு வந்து நாளாகிவிட்டது. பலரும் அவரவர் கிராமத்திற்கு பொழப்ப பார்க்கச் சென்று விட்டார்கள்.//

வாழ்த்துக்கள்! ஊர் சுற்றலில் அனுபவ ரீதியாக கண்டது திருப்பூரிலிருந்து சொந்த இடங்களுக்கு மீள் இடம் பெயர்தல்.

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துகள் ஜோதிஜி.. இன்னமும் பல உயரங்களை நீங்கள் தொட இருக்கிறீர்கள்..! உங்களுடைய எழுத்தாற்றல் அப்படிப்பட்டது..!

வாழ்க வளமுடன்..!

ஜோதிஜி said...

நடா இதென்ன கொடுமையா இருக்கு. இந்நேரம் ஆகாய மார்க்கமாக இருப்பீர்கள் என்று தானே நினைத்துக் கொண்டுருந்தேன். ரதியார் உங்களை தேடிக் கொண்டுருந்தார்.

ஊர் சுற்றிப் பறவைக்கு உள்ளே வர மட்டும் நேரமில்லையாக்கும்.

மாப்பு அடுத்த முறை வக்சுக்கிறேன்டி ஆப்பு.

உண்மைத்தமிழா உங்களுக்கு என்ன பதில் எழுதுவது என்றே தெரியவில்லை. நன்றி சரவணன்.

அல்லோ அல்லோ அல்லல்லோ கும்மியாரே நம்ம சரவணன் தடத்தில் இருக்கிறார்.
இந்த அழைப்பு உங்களுக்கு கடத்தப்படுகிறது. கை கால் நடுங்குவதால் தொலைபேசி நடுங்குகிறது.

சென்ஷி said...

மகிழ்வான தருணம்.. வாழ்த்துகள் ஜோதிஜி.. :))

http://thavaru.blogspot.com/ said...

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நம்முடைய நண்பர் தான் செய்து கொண்டிருந்த தொழிலை திறம்படநடத்தி வெற்றி கண்டு அடுத்து எழுத்தாளர் தொழிலுக்கு செல்ல அவரை வாழ்த்தி வழியனுப்ப அன்புடன் வேண்டுகிறோம்.

வாழ்த்துகள் அன்பின் ஜோதிஜி....

Thekkikattan|தெகா said...

ஒரே நேரத்தில எப்படிப்பா இப்படி பல அவதாரம்? இனிமே பாருங்க கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கப்பட்டு அடுத்தடுத்துன்னு பல உயரங்களை அடையப் போறீங்க.

வாழ்த்துக்கள், ஜோதிஜி! :)) Enjoy!

ஜோதிஜி said...

ஏலெய் காட்டுப் பயபுள்ள?

அவதாரமா?

இங்கே தாரம் அடித்துவிரட்டி விடுவார் போலிருக்கு?

சென்ஷி மகிழ்வாய் உணர்கின்றேன்.

தவறு என்ற முகம் தெரியாத மறைந்து கொண்டுருக்கும் மாமனிதர் விரைவில் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து இந்த மாமன்றத்தில் உரையாற்றுவார் என்பதால் அறிவுஜீவி தெகா முதல் அக்கிரம கதாநாயகன் கும்மி வரைக்கும் மழையை பொருட்படுத்தாமல் ஒரு ஓரஞ்சாரமா ஒதுங்கி நின்று கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

உமர் | Umar said...

//அல்லோ அல்லோ அல்லல்லோ கும்மியாரே நம்ம சரவணன் தடத்தில் இருக்கிறார்.
இந்த அழைப்பு உங்களுக்கு கடத்தப்படுகிறது. கை கால் நடுங்குவதால் தொலைபேசி நடுங்குகிறது.//

உங்க புத்தகம் வாங்குறதுக்காக வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன். எவ்வளவு பெரிய க்யூ? எப்பாடி, கால் கடுக்க நின்னு எனக்கு முன்னாடி இருந்த நூத்துக்கணக்கான பேரும் வாங்கி முடிக்கிற வரைக்கும் நின்னு அப்புறமா நான் வாங்குறதுக்குள்ள, அப்பப்பா. அவ்வளவு நேரம் நின்னு வாங்கினாலும் குறையில்லை. நல்லாவே இருந்துச்சு அந்த டீ.

என்னது, புத்தகமா? நான் இன்னும் அதை படிக்கவேயில்லையே. படிச்சிட்டு சொல்லுறேன்.

உமர் | Umar said...

@உண்மைத் தமிழன்(15270788164745573644)
//வாழ்க வளமுடன்..! //

என்னண்ணே, இப்படி திடீர்னு? அதுவும் சொல்லாம கொள்ளாம? அப்பன் முருகன விட்டுட்டு வேதாத்திரி மகரிஷி பக்கம் சாஞ்சிட்டீங்க?

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ஜோதிஜி, உங்கள் வெற்றிகளுக்கும் அதன் ஆதாரமாய் இருக்கும் தொடர் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.

செல்வநாயகி said...

வாழ்த்துகள் ஜோதிஜி.

தாராபுரத்தான் said...

வாழ்த்துக்கள்ங்க..

கோவி.கண்ணன் said...

//என்னுடைய எழுத்துக்கள் அச்சு ஊடகத்தின் மூலமாக வருவது இதுவே முதல் முறை.//
நல்வாழ்த்துகள், உங்கள் எழுத்துப் பயணம் வேகம் எடுத்திருக்கிறது.

ஜோதிஜி said...

இந்த நாள் இனிய நாள்.

மூன்று திசைகள்
மூன்று ஆளுமைகள்
மூன்று கோணங்கள்.

செல்வராஜ்,செல்வநாயகி,கண்ணன்

உங்கள் மூவரின் அக்கறைக்கும் ஆசிர்வதிக்கும் எண்ணங்களுக்கும் நன்றிங்க.

தாராபுரத்தான் அய்யா ரொம்ப நன்றிங்க.

சி.பி.செந்தில்குமார் said...

பிரமாதமான கட்டுரை.மலைக்க வைக்கும் எழுத்தாற்றல்

ஆனந்தி.. said...

என் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும்...இந்த பூங்கொத்தையும் பிடிங்க ஜோதிஜி சார்...ரொம்பவும் சந்தோஷம்...!!

Denzil said...

வாழ்த்துக்கள் ஜோதிஜி. உங்களை தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில் மிக மகிழ்ச்சி. வலைப்பூக்களில் பொழுதுப்போக்கு மட்டுமல்லாமல் இது போன்ற சமூக சிந்தனையும் உண்டு என்பதே பெருமை. மேலும் பல அங்கீகாரங்கள் தேடி வரட்டும்.

சக்தி கல்வி மையம் said...

வலைப்பூக்களில் பொழுதுப்போக்கு மட்டுமல்லாமல் இது போன்ற சமூக சிந்தனையும் உண்டு என்பதே பெருமை.பிரமாதமான கட்டுரை
அடுத்த கட்டுரைக்குக் காத்திருக்கிறோம் !!
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

ஜோதிஜி said...

நூல் வெளியீட்டு விழாவிற்கு வ்ந்திருந்தேன்.மிகவு பயனுள்ளதாக இருந்தது.ஒரு நூலை வாசிக்கும்போது அதை விமர்சனக் கண்ணோட்டத்துடன் வாசிப்பதும் மேலும் குறிப்பாக சமூக மாற்றத்திற்கு உதவிசெய்யும் முற்போக்கு நூல்களை வாசிக்கும்போது படைப்பாளரின் உணர்வுக்கே நாம் செல்லவேண்டும்.அந்த அளவிற்கு ஊன்றியும், அதில் ஏற்படுகின்ற கஷ்டங்களை நாம் அனுபவித்தும் படிக்கவேண்டும்.இது ஆரம்பத்தில் சாத்தியம் இல்லை என்பதும் உண்மைதான் ஆனால் இவ்வாறுதான் நாம் கற்று அதில் தேர்ச்சியும் பெற்றாகவேண்டும்.இல்லயேல் எதிரியின் நிறுவனமயமாக்கல் நோக்கத்திற்கு நாம் இறையாகிவிடுவோம்.என்கின்ற எச்சரிக்கை உணர்வை விழாவிலிருந்து பெற்றுக்கொண்டு மனநிறைவோடு வீடு திரும்பினேன்.
_சுடலை

Unknown said...

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜோதிஜி சார், உங்களுக்குள் மிகப்பெரிய எழுத்தாளர் இருக்கிறார் என்பதை உங்களை சந்தித்த போதே உணர்ந்து விட்டேன், நீங்கள் மேலும் பல உயரங்களை தொட என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், நன்றி

Bibiliobibuli said...

வந்தனங்களும், மனம்நிறைந்த வாழ்த்துக்களும் ஜோதிஜி.

தவறு, தயவு செய்து வெளியே வந்துவிடுங்கள், ஜோதிஜி Terminator ஆக மாறுமுன்பே :))

☼ வெயிலான் said...

வாழ்த்துக்கள் ஜோதிஜி!

Unknown said...

நான் புத்தக வெளியீட்டிற்கு போயிருந்தேன், ஆனால் உயிர்மை விழாவுக்கும் செல்லவேண்டியிருந்ததால் பாதியில் கிளம்பிவிட்டேன். நேற்று உங்கள் புத்தகம் வாங்கவில்லை, வாங்கி படித்துவிட்டு பேசுகிறேன்...

உங்களுக்கு என வாழ்த்துக்கள் தோழரே...

ஜோதிஜி said...

நன்றி செந்தில். அதில் பலருடைய கட்டுரையும் வந்துள்ளது. நன்றி ரதி மற்றும் வெயிலான் ரமேஷ்.

இரவு வானம் உங்கள் அன்புக்கு நன்றி ராசா.

சதிஷ் உங்கள் வலைதள பெயரையே வைத்துக் கொண்டுவிட்டீர்கள் போல?

டென்சில் நீண்ட நாட்களாக படித்துக் கொண்டுருப்பீக போல. நன்றி நண்பா.

ஆனந்தி நீங்க கொடுத்த பூங்கொத்தை கவனமாக பாதுகாப்பாக வைத்துள்ளேன்.

உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி செந்தில்.

Paleo God said...

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.//

கொடுக்கும்போது மறக்காம கையெழுத்துப் போட்டு கொடுத்துடுங்க எழுத்தாளரே!

வாழ்த்துகள்! :))