Tuesday, April 21, 2020

கொரானா வந்த பாதை - இந்தியா வழி கேரளா

அந்த 42 நாட்கள் -  6
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

கொள்ளை நோய்கள், உலக பேரரசுகளைச் சாய்த்துள்ளன, கட்டமைப்புகளை வீழ்த்தியுள்ளன, உலக அரசியலில் தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன. எல்லாவற்றையும் விட இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் இந்தக் கொள்ளை நோயால் நடந்தது. கத்தோலிக்க சர்ச்சுகள் தங்களுடைய ஆதிக்கத்தை இழக்கத் தொடங்கின,

நோய்த் தொற்றின் போது எதையும் செய்யமுடியாமல் போனதால், சர்ச்சும் மற்ற கட்டமைப்பைப் போல் இன்னொன்று என்கிற உணர்வு மக்களுக்கு வந்தது. “சர்வ ஞான அறிவும்” பெற்ற கடவுள் இருக்கும் போது எப்படி இப்படிப்பட்ட கொள்ளைநோய் மக்களைக் கொல்ல முடியும் என்கிற கேள்வியே மக்களைத் திருச் சபையிலிருந்து விலகி நிற்கச் செய்தது. தொடர்ச்சியாக வலுவிழந்து வந்த கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தை, 16ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற “ப்ரோட்டஸ்டண்ட் சீர்திருத்தம்” மேலும் குறைத்தது.





19ஆம் நூற்றாண்டின் இவ்வுலகத்தைத் தாக்கிய கொள்ளை நோய் “ஸ்பானிஷ் ஃப்ளு”, சுமார் 5 கோடி மக்களைக் காவு வாங்கிய இந்நோய் ஐரோப்பாவில் தோன்றி, அமெரிக்கா, ஆசியா எனப் பரவியது. முதலாம் உலகப்போரின் காரணத்தால் தொற்றிய நோய் ஜெர்மனி தோற்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது. கோவிட் 19 நோய், உலக வரைபடங்களை மாற்றி அமைக்குமா எனத் தெரியாது,

ஆனால் இந்தியாவிற்குள் முதல் முறையாக கொரானா தொற்றை உள்ளே கொண்டு வந்த பெருமை கேரளா மாநிலமே பெறுகின்றது. 

கேரளாவிற்கு ஒரு ஆண்டிற்கு பத்து லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கேரள மக்கள் தொகையில் சுமார் 67 லட்சம் பேர் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். மேலும் கேரளாவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சீனாவில் கல்வி பயில்கின்றனர். இந்தப் பிரிவினரில் எவர் வேண்டுமானாலும் வைரசைக் கேரளாவிற்குள் கொண்டுவரும் அபாயம் இருந்தது. அதுதான் நடக்கவும் செய்தது.

கேரளா திருச்சூரைச் சேர்ந்த 20 வயது மாணவி சீனாவில் வூகான் நகரில் தங்கி மருத்துவம் படித்து வந்தார். அவர் கேரளாவிற்கு வந்த போது கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்தாலியிலிருந்து திரும்பிய  96 வயது நபரும், 89 வயது பெண்மணி கோரானா தொற்று பாதிக்கப்பட்டு கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன் பிறகு மலப்புரம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பேர்களும் டெல்லியிலிருந்து வந்தவர்கள்.  இவர்களின் தொடர்பு, பயணம் இதன் மூலம் தான் இந்தியாவில் கோரானா தொற்று பரவத் தொடங்கியது.

ஜனவரி 13ம் தேதி தாய்லாந்தில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்படுகிறார். இவர் சீனாவிலிருந்து வந்தவர். ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவில் கொரோனா நோயாளி கண்டறியப்படுகிறார். இவர் சீனா சென்று திரும்பியவர்.

இது தொற்றுவியாதி என்பதால் சீன நாட்டுக்குள் தனிமைப்படுத்துதல் தொடங்கிவிட்டது. பொதுமக்கள் கூடுவதற்குச் சீனா தடை விதிக்கிறது. ஜனவரி 23ம் தேதிக்குள் சீனாவில் 9 பேர் பலியாகிவிட்டார்கள். 149 பேருக்கு இருப்பதாகச் சீனா அறிவித்தது. அதைவிட அதிர்ச்சி என்னவென்றால் இரண்டு வாரங்களுக்குள் தாய்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கும் அது பரவிவிட்டது. ஜனவரி 25ம் தேதி கொரோனா தொற்று தொடர்பாக அனைத்து நாடுகளும் கண்காணிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது.

ஜனவரி 26ம் தேதி நம்முடைய மத்தியச் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஒரு பேட்டி கொடுக்கிறார். ''சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த 11 பேருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. அவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்கள்'' என்று சொல்லி இருக்கிறார் மத்திய அமைச்சர். இதில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 7 பேர். மும்பையைச் சேர்ந்தவர் இரண்டு பேர். பெங்களூரைச் சேர்ந்தவர் ஒருவர். டெல்லியைச் சேர்ந்தவர் ஒருவர்.

அன்றைய தினம் மத்திய அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் சீனாவில் வந்த அனைவரையும் கண்காணிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை சொன்னது.

ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் வந்தவர்கள் அனைவரையும் அன்றே கண்காணித்திருந்தால்  பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விரைவாகச் செயல்படாத காரணத்தால், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உறுதித் தன்மையுடன் விமானப் பயணிகளைச் சோதிக்காமல் இந்தியாவிற்குள் அனுமதித்த காரணத்தாலும் 130 கோடி மக்களின் வாழ்வாதாரத்தையும் கொரானா என்ற வார்த்தை தலைகீழாக மாற்றத் தொடங்கியது.

அதில் மாட்டிக் கொண்ட நாம் முதல் 21 நாள் ஊரடங்கை கடைப்பிடித்து இன்று வெற்றிகரமாக ஒரு மாதத்தை கடக்கப் போகின்றோம். அடுத்த மாதத்தில் காலடி எடுத்து வைக்கப் போகின்றோம்.

கொரானா தொற்றின் அடிப்படை ஜாதகத்தை இதுவரையிலும் அலசினோம்.

இனி ஆட்டம் கண்டுள்ள இந்தியாவிற்குள் பயணிப்போம்.

சீனா - வரம் தந்த சாமி



4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அங்கு வேலை செய்யும் தமிழ் மக்களை வெளியே தள்ளிவிட்டு, தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதிலும் கேரளா மாநிலமே... சுவாமியே சரணம் ஐயப்பா...!

கரந்தை ஜெயக்குமார் said...

கோரோனா
உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது

ஜோதிஜி said...

செய்வது அனைத்தும் படு கேவலம். ஆனால் வெளியே பரப்புவது வேறொரு லெவல். அதான் கம்யூ.

ஜோதிஜி said...

ஆண்டு கொண்டிருக்கிறது.