Monday, April 20, 2020

கொரானா - குற்றச்சாட்டுகள் 3

அந்த 42 நாட்கள் -  3
Corona Virus 2020

குற்றச்சாட்டு  -  1

சீனாவில் வூகான் மாநிலத்தில் புறநகர்ப் பகுதியில் வைரஸ் ஆராய்ச்சி மையம் உள்ளது. இது ஆசியாவின் மிகப் பெரிய வைரஸ் கிருமிகளைப் பாதுகாக்கும் ஆய்வகம்.  1500க்கும் மேற்பட்ட கிருமிகளை இன்று வரையிலும் பாதுகாப்புடன் வைத்துள்ளது.  இந்த ஆய்வகத்தில் மனிதர்களுக்கு நோயை உருவாக்கும் பல கிருமிகளும், எபோலா வைரஸ் கிருமி போன்ற பல ஆபத்தான வைரஸ்களையும் பாதுகாப்புடன் வைத்துள்ள ஆராய்ச்சி நிறுவனமாகும்.  

பிரான்ஸைச் சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் அலாயின் மெரீயக்ஸின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட அந்த உயா்பாதுகாப்பு ஆய்வகம், 2015-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, தனது செயல்பாட்டை 2018-ஆம் ஆண்டில் தொடங்கியது.இந்த நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட கோவிட் 19 தவறுதலாக வெளியே வந்து விட்டது. மனிதர்களுக்குப் பரவி விட்டது.   இன்று வரையிலும் அமெரிக்கா இப்படித்தான் குற்றச்சாட்டுக்களைச் சீனா மேல் வைத்துக் கொண்டு இருக்கின்றது.  ஆனால் இது வெறும் யூகம் என்று ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டு விட்டது.

குற்றச்சாட்டு 2

சீனாவில் ஓர் இடத்தில், வானில் பறந்து கொண்டிருந்த நோய்த் தொற்று கொண்டிருந்த வௌவால் மேலிருந்து கீழே மலத்தைக் கழித்தது. அது ஒரு காட்டில் விழுந்தது. அங்கேயே இருக்கும் ஒரு விலங்கு, (ஒரு எறும்புத்தின்னி) இரையைத் தேடும்போது அந்த மலத்திலிருந்த வைரஸ் தொற்று அதற்குப் பரவியது. அது காட்டிலிருக்கும் பிற விலங்குகளுக்கும் பரவியது . அந்த விலங்கு ஒரு மனிதரிடம் சிக்கியது எனவே அந்த விலங்கின் மூலம் அந்த மனிதருக்கும் வந்திருக்கலாம்.

பிறகு அவரிடமிருந்து அவரின் வேலையாட்கள் என இப்படி உலகம் முழுவதும் பரவுவது தொடங்கியிருக்கலாம்.

குற்றச்சாட்டு 3

சீனாவின் வூஹானில் கொரோனாத்தொற்று பரவத் தொடங்கி ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சந்தையில் வன விலங்குகளின் மாமிசமும் விற்கப்பட்டன. இதில் உயிருடனும் துண்டுகளாகவும் விற்கப்பட்டன. ஒட்டகங்கள், கோலாக்கள் மற்றும் பறவைகள் ஆகியவை இருந்தன.

அமெரிக்கப் பத்திரிக்கையான கார்டியனில் வெளிவந்த செய்தியில், அந்தச் சந்தையில், ஓநாய் குட்டிகள், வண்டுகள், தேள்கள் , எலிகள், அணில்கள், நரிகள், புனுகுப்பூனைகள், முள்ளம்பன்றிகள், பல்லிகள், முதலைகள் மற்றும் ஆமைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

வௌவால்கள் மற்றும் எறும்புத்தின்னிகள் அதில் இல்லை என்றாலும் சீன உளவுத்துறை இதை விசாரித்து வருகிறது. இதில் என்னென்ன விலங்குகள் இருந்தன என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம் என்பதனை ஆராய்ச்சியாளர்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றார்கள்.  காரணம் எதிர்காலத்தில் இதே போல மற்றொரு தொற்று நோய் வராமல் இருக்க இதன் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக.


கொரானா எப்படி உருவானது?13 comments:

மகிழ்நிறை said...

ஓ!! தொடரா அண்ணா!! சூப்பர்!! தொடர்கிறேன்!

Yaathoramani.blogspot.com said...

மூலம் அறியும் ஆவலுடன் தொடர்கிறோம்..

திண்டுக்கல் தனபாலன் said...

வள்ளலார் ஞாபகமும் வருகிறது...

ஜோதிஜி said...

நன்றி மகிழ்நிறை

ஜோதிஜி said...

அருமை. நன்றி.

ஜோதிஜி said...

பழைய மாணிக்கவாசகர் பாடல் ஒன்றை இன்று ஃபேஸ்புக் நினைவு படுத்தியது. கீழே உள்ளதை படித்துப் பாருங்க.பல விசயங்கள் ஒன்றாகவே தெரிகின்றது.

ஜோதிஜி said...

மாணிக்கவாசகரின் அறிவியல் தேடலுக்கு உதாரணமாக இன்னொரு பாடலைப்பார்ப்போம். ஒவ்வொரு வசனத்தையும் கவனமாக உணர்ந்து வாசியுங்கள்

"மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்..

மாதத்திற்கு மாதம் கருவின் வளர்ச்சி நிலைகள் பற்றி மாணிக்கவாசகர் எழுதியவைகள் இவை.

அவரெழுதிவிட்டார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக இதையெல்லாம் பொய் என்று ஒருவன் மறுக்க முடியுமா?

மனிதன் கருவுயிர்ப்பின் நிலைகளில் எப்படியெல்லாம் தப்பிப்பிழைத்து பூமிக்கு விடப்படுகிறான் என்பதை யாவரும் விளங்கி கொள்ளும் எளியமொழியில் சுருக்கமாக மணிவாசகர் போற்றித்திரு அகவலில் மேற்படி சொல்லியிருக்கிறார்.

பொருள் இது தான். சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்ல வேண்டுமல்லவா?

முதல்மாதத்தில் நுண்ணியதாக இருக்கின்ற கரு, தாயின் உடலில் உள்ள கிருமிகளில் இருந்து அழியும் அபாயத்தில் இருக்கும்.

அதிலிருந்து தப்பித்தால் ஒரு கலத்தில் இருந்து இரண்டு கலங்களாக பிரிவடைந்து பின் தான்றிக்காய் வடிவிலிருந்து மேலும் விரிவடைந்து வளரும் .

இப்போது இரண்டாக பிரிவதில் சிதையும் ஆபத்து உள்ளது.

இதனை கடந்து மூன்றாம் மாதம் வந்தால் தாயின் கருப்பையில் பனிநீர் உண்டாகி கரு மிதக்க ஆரம்பிக்கும் இதனால் தாய்க்கு மசக்கை நிலை உண்டாகும் .

இவ்வாபத்துகளில் இருந்து தப்பித்து நான்காம் மாதம் வந்தால் இருட்டை உணரத்தக்க அவயங்கள் தோன்றும் .

ஆதலால் அவ்விருளில் இருந்து தப்பித்து அடுத்த நிலையை அடையும்.

ஐந்தாம் மாதம் இதயத்துடிப்பு செறிவுற்று நல்ல வளர்ச்சியை பெறும்.

அது தோன்றாமல் இருக்கும் அபாயத்தை கடந்து ஆறாம் மாதத்தின் வளர்ச்சியால் தாயின் குடல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் நெருக்கத் தொடங்கும் .

இவ்வாபத்தில் இருந்து தப்பித்து ஏழாம் மாதம் வந்தால் கருவின் கனம் தாங்காது சிசு முதிர்ச்சியடையாமல் குறைப்பிரசவம் நிகழ வாய்ப்புண்டு .

இதனில் இருந்து தப்பித்து எட்டாம் மாதம் வந்தால் நெருக்கம் தாங்காது கரு அதிக அளவில் முட்டும் . அதனால் குறைப்பிரசவம் தாய்க்கு கடுமையான வேதனை போன்ற ஆபத்தில் இருந்து தப்பித்து ஒன்பதாம் மாதத்தில் தலை தாயின் பிறக்கும் பகுதியை நெருங்குவதால் வரும் வலித்துன்பத்தில் இருந்து தப்பித்தும் பத்தாம் மாதத்தில் தாய் படுக்கையில் கிடக்கும் பொழுதும் பிரசவத்தில் தாயிலிருந்து வெளியேறும் வலித்துன்பத்தில் இருந்தும் கரு தப்பித்தும் பிறப்பு எடுக்கிறது.

நிற்க

பொதுவாக ஆபிரகாமிய மதங்களில் உயிர் என்றால் அது மனிதர்களை மட்டுமே குறிக்கும் . ஆதலால் அவர்களது படைப்பு கொள்கை நேரடியாக மனிதனில் இருந்து தொடங்குகிறது.

ஆனால் நம் திருவாசக மணிவாசகனாரினை பொறுத்த வரையில் மனிதன் என்பது உயிர் வர்க்கத்தின் ஒரு யோனி பேதம் தான் . அதாவது உடலியல் பரிணாமம், மற்றபடி புல் முதல் யானை வரை அனைத்து உயிரினங்களும் உயிர்தான். மனிதனுக்கு இணையானது தான் அறிவுடையதுதான் என்று கூறுகின்றன பாடல்கள்.

அறிவியல் கூட பெருவெடிப்பில் உண்டான இப்பிரபஞ்சத்தில் ஒருநாள் திடீரென்று மனிதன் தோன்றிவிட்டான் என்ற செய்தியை மறுக்கிறது.

முதலில் ஒரு கலம் உயிரியாக தோன்றி பிறகு அதுவே பல இலட்சம் வருடங்களாக பல்வேறு வடிவங்களில் பரிணமித்து பிறகு மனிதனாக வந்தது என்பது தானே நடைமுறையில் உள்ள அறிவியலின் முடிவு .

இயற்கைத்தேர்வில் மாறல்களோடு தக்கன பிழைக்கிற கூர்ப்புக்கொள்கையோடு கிட்டத்தட்ட மணிவாசகர் பொருந்தி போகிறார் எனலாம். ஆனாலும் அதிலும் கூட ஒரு கல உயிர் எப்படி முதலில் தோன்றியது என்பதனை விளக்க அறிவியல் தடுமாறுகிறது.

அறிவியலின் இந்த உயிரினங்கள் பலதரப்பட்டவை. அவை அறிவு பேதம் உடையவை . மனிதன் மட்டுமே இந்த உலகத்தின் பயன் நுகர்வன் இல்லை என்ற பொதுவுடைமை சூழலியல் கொள்கையையும் சிவபுராணத்தின்
"புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்" என்ற வரிகளில் விளக்குவார் பெருமான்.

அறிவியல் சார்ந்து திருவாசகம் சொல்கின்றவைகளை இவ்வாறு பந்தி பந்தியாக எழுதிக்கொண்டே போகலாம். இப்போதைக்கு இவ்வளவும் போதும் என்றே நினைக்கின்றேன்.

என்ன செய்வது?

சமூக வலைத்தளங்களில் அறிவுடையவர்கள் என்று தங்களை நம்புபவர்கள் காட்டிக்கொள்வதற்காக ஆராய்வதை விடுத்து ஆராயப்போகிறவனையும் பிற்போக்காளனாக்கி தான் தங்களை அவர்களை அறிவாளியாக்க வேண்டியிருக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

தொடருங்கள் ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

https://www.youtube.com/watch?v=QFajlsnWJ-g

G.M Balasubramaniam said...

நம்மால் ஏதும்செய்ய இயலாதபோது நம்மிலும் மீறிய சக்தி மீது நம்பிகை கொள்வ்தே நலம்பயக்கலாம் பயம்போக்கலாம்

ஜோதிஜி said...

அருமை

ஜோதிஜி said...

நன்றி ஆசிரியரே.

ஜோதிஜி said...

எதார்த்தம் இதுவே.