Wednesday, April 29, 2020

தப்லீக்கி மாநாடு


அந்த 42 நாட்கள் -  22
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

Thablighi Jamaat Tipping Point in COVID-19 


இந்தியாவில் நடைபெறும் இஸ்லாமிய மத ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் 'தப்லீக் ஜமாத்தார் (மதப் பிரச்சாரகர்கள்)’ என்றழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு 'மர்கஸ்’ எனும் பெயரில் டெல்லி நிஜாமுதின் தர்கா அருகே தலைமையகம் அமைந்துள்ளது.

கடந்த மார்ச் 15-ம் தேதி டெல்லி நிஜாமுதினில் மத ஆலோசனை மாநாடு நடைபெற்றது. இதில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டோரில் சுமார் 30 சதவீதம் பேருக்கு டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டால் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாநாடு காரணமாக 17 மாநிலங்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாடு காரணமாக கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில் உள்ள மற்றொரு முஸ்லிம் மதப் பிரிவான ஷுரா இ ஜமாத்கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது. 

ஆனால் ஆலோசனைகளைப் புறந்தள்ளி தப்லீக் ஜமாத் மாநாட்டை முகமது சாத் நடத்தியுள்ளார்.

********

தமிழ் நாட்டிலிருந்து 1500 பேர் டெல்லி தப்லீக்கி மாநாட்டில் கலந்து கொண்டு அதில் 1100 சொச்சம் பேர் ஊர் திரும்பியிருக்கின்றனர். இன்று சம்பவம் நடைபெற்ற நிஜாமுத்தீன் மர்கஸ் கொரோனா hotspot ஆக அறியபட்டவுடன் ஊர் திரும்பியவர்களை கொரோனா screening செய்ய அரசு எந்திரம் முயற்சிகிறது. ஆனால் அதில் 600 சொச்சம் பேர் மாயம்.இது மீடியாவில் பெரிய coverage பெற்றவுடன் பல முஸ்லீம்கள் பதற்ற குஞ்சுகளாக மாறி சோசியல் மீடியாவில், 'ஜக்கியும் சிவராத்திரி கூட்டம் நடத்தினான்', 'திருப்பதியில் கூடினார்கள்', 'திருச்சியில் தேரிழுத்தார்கள்', அங்கெல்லாம் சோதனை போட்டுட்டு எங்கட்ட வா' என்ற ரேஞ்சில் பிதற்ற ஆரம்பித்து விட்டார்கள். இதில் மிதவாத, நியாயமான முஸ்லீம்களாக அறியப்பட்டோரும் இருந்தது தான் அதிர்ச்சி.

1. பிறப்பால் இந்துவான இடதுசாரிகளும், திராவிடம் பேசுவோரும் வலதுசாரிகளுக்கு எதிராக அவ்வாறு எதிர்வாதம் செய்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்க போவதில்லை . அதையே முஸ்லீம்கள் செய்தால் பாதிப்பு யாருக்கு என்பது விளங்கவில்லையா?

2. தொற்று உறுதியான, மரணங்கள் நிகழ்ந்திருக்கிற தப்ளிக்கி கேஸ் பற்றி செய்திகள் வரும்போது, அதற்கு எதிர்வினையாக திருப்பதியையும், திருச்சியையும், ஈசாவையும் நோக்கி கைகாட்டுவது 'அங்கிகிருந்தும் கொஞ்சம் covid positive வந்தா நல்லாயிருக்கும் என்று ஏங்குகிறீர்கள்' என்ற தோற்றத்தை அளிக்கும் என்ற பிரக்ஞை கூடவா இல்லை? உங்க whataboutism க்கு இதுவா நேரம்?

3. ஊர்திரும்பியோரில் அறுநூற்றி சொச்சம்பேர் அரசாங்க ராடாரில் இல்லை என்பது வெடிக்க காத்திருக்கும் அல்லது ஏற்கனவே வெடிக்க துவங்கிவிட்ட வெடிகுண்டு. அது வெடித்தால் நமக்குதான் முதல் பாதிப்பு என்ற உணர்வுகூட இல்லாமல் அப்படியென்ன அவசர முட்டுகொடுப்பும் விரல் சுட்டலும் வேண்டிகிடக்கிறது? இவர்கள் மூலம் பெரிய அளவிற்கு நோய் பரவினால் அது முஸ்லீம்கள் மீது தீவிரமான வெறுப்பு பரவ காரணாமா அமையும் என்பது விளங்கலியா?

'அடுத்தவன் தவறை சுட்டுவதற்கு முன் தன் தவறை கவனிப்பது' என்பது தனி மனித பண்பாடு மட்டுமல்ல. பன்மைத்துவ சமூகத்தில் வாழும் சமூகங்களின் பொறுப்பும் கூட.

எல்லாவற்றிற்கும் எப்போதும் லபோதிபோன்னு எதிர்வினையாற்ற வேண்டியதில்லை. குறிப்பாக தவறு நம் பக்கம் இருக்கும்போது நிதானம் தேவை. அரசின் கட்டுபாடுகளை மதித்து, முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பளித்து, பதுங்கிக்கொண்டிருக்கும் அந்த 600 சொச்சம் பேர்கள் பற்றிய தகவலறிந்தால் அளித்து, சமூக வலைதளங்களில் மார்க்க மார்தட்டல்களையும், விரல் சுட்டல்களையும் விடுத்து அமைதி காத்தாலே focus உங்க மீதிருந்து விலகிவிடும்.

01/04/2020

#Covid19 #StayCalmStayHome 

முட்டாள்களுக்கு நாள் குறிக்கும் தினம்


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஒவியம் நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா

அத்தனை பழமும் சொத்தைகள் தானே ஆண்டவன் படைப்பினிலே
அத்திப் பழத்தை குற்றம் கூற யாருக்கும் வெட்கமில்லை
மூடர்களே சிலர் குற்றத்தை மறந்து முதுகை பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனை கழுவுங்கள்

சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினை காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள்

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால் அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை
இப்போது இந்த உலகம் முழுவதும் எவனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் எமனுக்கும் வெட்கமில்லை