அந்த 42 நாட்கள் - 22
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 3 வரை)
Thablighi Jamaat Tipping Point in COVID-19
இந்தியாவில் நடைபெறும் இஸ்லாமிய மத ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் 'தப்லீக் ஜமாத்தார் (மதப் பிரச்சாரகர்கள்)’ என்றழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு 'மர்கஸ் ’ எனும் பெயரில் டெல்லி நிஜாமுதின் தர்கா அருகே தலைமையகம் அமைந்துள்ளது.
கடந்த மார்ச் 15-ம் தேதி டெல்லி நிஜாமுதினில் மத ஆலோசனை மாநாடு நடைபெற்றது. இதில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டோரில் சுமார் 30 சதவீதம் பேருக்கு டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டால் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாநாடு காரணமாக 17 மாநிலங்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாடு காரணமாக கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில் உள்ள மற்றொரு முஸ்லிம் மதப் பிரிவான ஷுரா இ ஜமாத் , கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது.
ஆனால் ஆலோசனைகளைப் புறந்தள்ளி தப்லீக் ஜமாத் மாநாட்டை முகமது சாத் நடத்தியுள்ளார்.
********
தமிழ் நாட்டிலிருந்து 1500 பேர் டெல்லி தப்லீக்கி மாநாட்டில் கலந்து கொண்டு அதில் 1100 சொச்சம் பேர் ஊர் திரும்பியிருக்கின்றனர். இன்று சம்பவம் நடைபெற்ற நிஜாமுத்தீன் மர்கஸ் கொரோனா hotspot ஆக அறியபட்டவுடன் ஊர் திரும்பியவர்களை கொரோனா screening செய்ய அரசு எந்திரம் முயற்சிகிறது. ஆனால் அதில் 600 சொச்சம் பேர் மாயம்.
