Thursday, April 23, 2020

21 நாள் ஊரடங்கு - இந்தியா - முதல் நாள்


அந்த 42 நாட்கள் -  9
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)



இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி என்கிறார்கள்.  இது பழைய கணக்கு தான்.  140 கோடியைக் கடந்து இருக்கக்கூடும்.  உலகில் மிகப் பெரிய சந்தை. மற்ற நாடுகளை விட 30 வயதுக்கு கீழ் உள்ள இளையர்களைக் கொண்ட நாடு. இந்தியா என்பது எந்த நாடுகளாலும் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த நாடு. வினோதங்களை, ஆச்சரியங்களை, அதிசயங்களைக் கொண்ட நாடு. 

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் எங்குப் பார்த்தாலும் மனித தலைகளுடன், சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருந்த இந்தியா கொரானா தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் இந்தியாவின் முகம் எப்படி மாறிப் போனது என்பதனை தினமணியில் வந்த படங்கள் நமக்கு உணர்த்துகின்றது.  

உங்கள் வயது 40 முதல் 70 வரைக்கும் எதுவாக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் இது போன்ற வித்தியாசமான சூழல் என்பது இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும். இணையத்தில், வாட்ஸ் அப் ல் பல இடங்களில் ஊரடங்கு குறித்து பலவிதமான படங்கள் பார்த்து இருக்கக்கூடும். அதிலும் இந்தப் படங்கள் சிறப்பாகவே உள்ளது.

ஊரடங்கு காரணமாக மாறிய இந்தியாவின் படங்கள் எதிர்காலத்திற்கு ஆவணமாகும். வைரஸ் க்கு உயிர் இல்லை. உணர்வு இல்லை. முகம் இல்லை. முகவரி இல்லை. உருவமா? அருவமா? என்பதனைக்கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாது.  




எல்லா மதக் கடவுள்களையும், கோவில்களையையும் அதன் தத்துவங்களையும் பூட்டுப் போட வைத்துள்ளது.  ஆண்ட சாதி, பேண்ட சாதி அத்தனை பேர்களையும் வீட்டுக்குள் முடங்க வைத்துள்ளது. கட்டுப்பட வைத்துள்ளது. உலகத்தின் போக்கையே மாற்றியுள்ளது. ஆச்சரியம் தானே? நாம் வாழ்ந்த காலத்தில் இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று சில மாதங்களுக்கு முன்பு நினைத்து இருப்போமா? 

எத்தனை எத்தனை கவலைகளைச் சுமந்து கொண்டிருந்தோம்.  இப்போது அத்தனை கவலைகளும் காணாமல் போய் நாம் உயிருடன் இருந்தால் போதும் என்கிற அளவிற்கு வைரஸ் நம்மை மாற்றியுள்ளது.

















இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழு முதல் எட்டு லட்சம் கோடி ரூபாய் அளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன.

இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியிலிருந்து மீளும் அறிகுறிகள் தெரிய தொடங்கிய போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ள சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச் அமைப்பு தற்போது 2020-21 ஆம் ஆண்டில் வளர்ச்சி மீண்டும் ஒற்றை இலக்கத்திலேயே இருக்கும் என கணித்துள்ளது.

மோடி அறிவித்த 21 நாட்கள்


3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எல்லா மதக் கடவுள்களையும், கோவில்களையையும் அதன் தத்துவங்களையும் பூட்டுப் போட வைத்துள்ளது. ஆண்ட சாதி, பேண்ட சாதி அத்தனை பேர்களையும் வீட்டுக்குள் முடங்க வைத்துள்ளது. கட்டுப்பட வைத்துள்ளது. உலகத்தின் போக்கையே மாற்றியுள்ளது. ஆச்சரியம் தானே?

ஆச்சரியம்தான் ஐயா
கடவுள் காப்பாற்ற மாட்டார் என்ற உண்மையினையும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரி...இதுவும் கடந்து போகும் எனும் நம்பிக்கையுடன் பயணிப்போம்..

திண்டுக்கல் தனபாலன் said...

ஒற்றுமைப்பாடு தழைத்திருக்கிறது - வீட்டில் மட்டும்...