Showing posts with label ஊரடங்கு சமயத்தில் ட்ரோன் காமிரா வழியாக திருப்பூர் படங்கள். Show all posts
Showing posts with label ஊரடங்கு சமயத்தில் ட்ரோன் காமிரா வழியாக திருப்பூர் படங்கள். Show all posts

Tuesday, April 28, 2020

திருப்பூரின் ஊரடங்கு கால குறுக்கு வெட்டு நீள் வெட்டுத் தோற்ற (ட்ரோன்) புகைப்படங்கள்


அந்த 42 நாட்கள் -  20
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


மிதி வண்டியை எடுத்துக் கொண்டு காலை மதியம் மாலை என மூன்று நேரமும் அருகே உள்ள இடங்களைச் சுற்றிப் பார்த்து என்ன நிலைமையில் உள்ளது? என்பதனை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

இன்று மதியம், மாலை பார்த்த வரைக்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் & Tiruppur Collector Office உழைப்பு வீணாகவில்லை என்றே தோன்றுகின்றது. அங்கங்கே கூட்டங்கள், புரியாத மக்கள் சமூக விலக்கத்தைக் கடைப்பிடிக்காத போதும் கூட ஒப்பீட்டளவில் திருப்பூர் வெற்றி தான்.