Saturday, August 05, 2023

கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டிய நிறுவனங்கள் திமுக ஆட்சியில் என்ன செய்கின்றது?

 

திமுக ஆட்சிக்கு வந்து முப்பது மாதங்கள் முடியப் போகின்றது. நடந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இங்கே அரசாங்கம் ஒன்று இருக்கின்றதா? என்று பாமர மக்கள் கூட கேட்கும் சூழலில்தான் உள்ளது.

பத்து வருடமாக ஆட்சியில் இல்லாமல் இருந்த காரணத்தாலும் கருணாநிதி இல்லாத திமுக என்பதாலும் துள்ளல்களுக்கு குறைவில்லை.  ஆனால் துள்ளல் மட்டுமே நடப்பதால் தான் எல்லாப் பிரச்சனைகளும் உருவாகியிருப்பதை யாராவது ஸ்டாலின் காதுக்கு கொண்டு போவார்களா?

முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் வாக்குமூலம் கொடுக்காத குறையாக தெரிவித்த முப்பது லட்சம் கோடி என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். எவரும் அதிர்ச்சியடையவில்லை. காரணம் திமுக என்றால் அதன் மனம் திடம் குணம் அனைத்தும் தெரிந்த நிலையில் மக்கள் இப்போது படிப்படியாக சுயநினைவுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

கிராமத்து மக்களுக்குக் கூட ஆட்சி எப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்பது நன்றாக புரியும் அளவுக்கு ஸ்டாலின் ஆட்சி உள்ளது என்றால் அது தான் நிஜம்.

பொதுஜனத்தை கவர முடியவில்லை.

பொது மக்களை எந்த வகையிலும் திருப்தி படுத்தவும் முடியவில்லை.

ஊழல் தலைவிரித்தாடுகிறது.

கட்டுப்படுத்த வேண்டிய முதல்வரோ காட்சி ஊடக கதாநாயகன் போலவே செயல்படுவது தான் முக்கியப் பிரச்சனையாக உள்ளது. 

ஏழை மக்கள் குடியிருக்க வேண்டிய அடுக்கு மாடி குடியிருப்பை மணல் கொண்டு கட்டிய கொடுமையை நீங்கள் எங்கேயாவது பார்த்ததுண்டா?  அப்படி கட்டிக் கொடுத்த நிறுவனம் இன்று வரையிலும் ராஜபாட்டையாக திமக வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அடுத்தடுத்த அரசு பணி செய்து கொண்டு இருக்கின்றது என்று சொன்னால் நம்ப முடியுமா? 

"தமிழகத்தின் தொழில் வளர்ச்சியினைப் பன்மடங்கு பெருக்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடத் தமிழக அரசு முதல்வர் தலைமையில் பல்வேறு சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக சென்னை - நந்தம்பாக்கத்தில் நிதி தொழில் நுட்ப நகரம் ஒன்று அமைத்திட முடிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும்"

தமிழக அரசு சார்பாக கொடுக்கப்பட்ட இந்த அறிக்கையில் எந்தக் குறையுமில்லை. நிதி நுட்ப நகரத்தின் திறப்பு விழாவினையும் நடத்தியாகிவிட்டதுஇந்த திட்டத்தை எந்த நிறுவனத்திடம் திமுக அரசு வழங்கியது? என்பதில் தான் ட்விஸ்டே உள்ளது. 

பிஎஸ்டி என்ற கட்டுமான நிறுவனம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும்.  அதிமுக ஆட்சியில் இந்த நிறுவனம் தரமற்ற வேலைகளைச் செய்கின்றது என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். ஸ்டாலின். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை குழு அமைத்து ஆராயப்படும் என்று அறிக்கையில் தெரிவித்து இருந்த ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மீண்டும் மீண்டும் திமுக ஒப்பந்தங்களை வழங்க காரணம் என்ன? 

இதைத்தான் தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் நெற்றி பொட்டில் அடித்தது போலக் கேள்வி எழுப்பினார். 

"2009-ம் ஆண்டு, கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட நிதிநுட்ப நகரம், தற்போது, பிஎஸ்டி என்ற கட்டுமான நிறுவனம் மூலம் செயல்படுத்தி வருகின்றது. கடந்த 14 ஆண்டுகளாக ஒரு செங்கல் கூட வைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, திறனற்ற திமுக அரசு தேர்ந்தெடுத்துள்ள பிஎஸ்டி நிறுவனம், தரக்குறைவான கட்டிடங்களை கட்டியதாக இதே திமுக ஆட்சியால் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் என்பதுதான் விந்தை“.  

பிஎஸ்டி நிறுவனத்தின் தகுதி என்னவென்றால் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் என்ற இடத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு தரமற்றதாக கட்டப்பட்டதாக ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.  அதாவது மலைமுழுங்கி மகாதேவன்கள் போல ஏழைகள் வாழ வேண்டிய குடியிருப்புகளை சிமெண்ட் க்குப் பதிலாக மணல் வைத்தே கட்டி முடித்தனர் பிஎஸ்டி நிறுவனத்தினர்.  உள்ளே கட்டுப்பட்டு இருந்த சுவரை சுரண்டினாலே  மொத்தமும் உதிர்ந்து வருவதைப் பார்த்து மக்கள் அலறத் தொடங்கினர்.  இது கட்டிடம். ஆனால் கட்டிடமல்ல என்பது போலவே இருந்தது.  காரணம் கட்டிடம் கட்ட வேண்டிய நிதியை ஆளாளுக்கு பங்கு பிரித்துக் கொண்டதால் கடைசியில் மணலில் பிஎஸ்டி நிறுவனத்தினர் கட்டி முடித்த கொடுமையும் நிகழ்ந்தது 

இதைத்தான் திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை கையில் எடுத்து உண்டு இல்லை என்று ஒரு கை பார்த்து விடுவோம் என்று சவால்விட்டார் ஸ்டாலின். 

ஆனால் நடந்தது என்ன? 

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைத்த IIT ஆய்வுக்குழு அறிக்கையில், இந்த நிறுவனம் கட்டிய ஏழை மக்களுக்கான குடியிருப்புகளில் செய்யப்பட்டுள்ள பூச்சுவேலை, 90% தரமற்றது என்றும், இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்றும் சட்டசபையில் திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். இனிமேல் அரசுப் பணிகள் பிஎஸ்டி நிறுவனத்துக்கு வழங்கப்படாது என, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஊடகங்களில் தெரிவித்திருந்தார் 

சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு, இனி எந்த அனுமதியும் வழங்கப்படாது என்று திமுக அரசு உறுதியளித்திருந்தது. 

ஆனால் சென்னை நந்தம்பாக்கத்தில் 250 கோடி மதிப்பில் திறக்கப்பட்டுள்ள நிதிநுட்ப நகரத்துக்கான கட்டுமானப் பணியை, இதே பிஎஸ்டி நிறுவனம் தான் செய்து முடித்துள்ளது 

இனிமேல் அரசுப் பணிகளில் பங்கேற்க முடியாது என்று கூறப்பட்ட நிறுவனத்துக்கு, மீண்டும் அரசுப் பணி ஒப்பந்தம் வழங்கி அழகு பார்க்கிறது திமுக அரசு  


ஐஐடி ஆய்வறிக்கை என்ன ஆயிற்று? அதன் மேல் திறனற்ற திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? பொதுமக்கள் வரிப்பணத்தை, மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிடாமல், இடையில் யாரோ சம்பாதிக்க, ஏற்கெனவே தடை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிறுவனத்துக்கு வழங்குவதா? 

உடனடியாக, பிஎஸ்டி நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட நிதிநுட்ப நகரம் கட்டுமான ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தின் மீதான ஆய்வறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் 

தடதடக்கும் பாதயாத்திரை படபடக்கும் அறிவாலயம்

என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுள்ள கேள்விக்கு அமைச்சர்களும் முதல்வரும் வாயை மூடி பேசவும் என்பது போல மௌனமாய்  இருக்கின்றார்கள்.

No comments: