Thursday, August 03, 2023

இந்தியா கூட்டணி - (INDIA – INDIAN NATIONAL DEMOCRATIC INCLUSIVE ALLIANCE)

 2024 மக்களவைத் தேர்தலுக்கான பரபரப்பு தொடங்கி விட்டது. எதிர்க்கட்சிகள் 26 கட்சிகள் சேர்ந்த கூட்டணியை அமைத்துள்ளனர்கூட்டணியின் பெயர் தான் ஸ்டாலின் மற்றும் திருமாவளவனுக்கு நினைவில் வைத்துச் சொல்லவே கடினமாக உள்ளது.  (INDIA – INDIAN NATIONAL DEMOCRATIC INCLUSIVE ALLIANCE)


முதலெழுத்துகளை ஒன்று சேர்த்து இந்தியா என்று வரும்படி அமைத்துள்ளனர்.

கூட்டணியில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். பேச எழுத மக்களிடம் கொண்டு செல்ல எளிமையாக இந்தியா என்ற பெயர் நமக்கு பெரிய வெற்றியைத் தந்துவிடும் என்று நம்புகின்றனர்.

கடந்த பத்து வருடமாக அதிகாரமின்றி அமலாக்கத்துறையினரால் தூக்கம் மறந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்தியா என்ற பெயர் சற்று ஆறுதல் தந்துள்ளது.

தங்கள் வாழ்க்கையை வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தல் மாற்றும் என்று நம்புகின்றார்கள்.  காரணம் கூட்டணியின் பெயர் இந்தியா.  இது நிஜ இந்தியா அல்ல. புள்ளி வைத்த இந்தியாஅதாவது இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி  என்பது இதன் விளக்கமாகும்இந்த புள்ளிங்கோ மன்னிக்கவும் இந்த புள்ளிக்குள் சேர்ந்து இருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விதங்களில் பிரபல்யமானதுசுருக்கமாக நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டும்.

கடந்த ஜூலை மாதத்தில் அந்தமான் நிகோபார் தீவின் தலைநகரமான போர்ட் பிளேயரில் வீர் சாவர்க்கர் விமான நிலையத்தில் புதிய முனையத்தைக் காணொளி வாயிலாக திறந்து வைத்து பேசிய நம் பிரதமர் மோடி அவர்கள் எதிர்க்கட்சிகள் குறித்து சொன்ன வாசகம் மிக முக்கியமானது'குடும்பத்துக்காக, குடும்ப நலனுக்காக, குடும்பத்தால் என்ற கோட்பாட்டுடன் செயல்படும் ஊழல் கட்சிகள் அடங்கியது எதிர்க்கட்சி கூட்டணி'.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு தலைவர்களும் மொத்த இந்தியாவும் தங்கள் கையில்  வந்து விட்டது. ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைத்து விட்டது. எந்த அமைச்சகத்தை யார் வைத்துக் கொள்வது போன்ற பகல் கற்பனையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஊடகங்களில் பேட்டியளிப்பதை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் உருவாக்கியுள்ள கூட்டணி எப்படிப்பட்டது?

கேளராவில் காங்கிரஸ் கம்யுனிஸ்ட் கட்சி எதிர்க்கின்றது. மேற்கு வங்களாளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சோனியா காங்கிரஸை எதிர்க்கின்றது.

கம்யுனிஸ்ட் கட்சி காங்கிரஸை கேரளாவில், மேற்கு வங்கத்திலும் எதிர்கின்றது. 

இதுபோல இதுவரையிலும் காணக்கிடைக்காத அரிய காட்சிகளை வரப் போகின்ற மாதங்களில் நாம் பார்க்கப் போகின்றோம்.

கூட்டணிக்கு யார் தலைவர்?  தெரியாது.

யார் பிரதமர் வேட்பாளர்? தெரியாது.

இவர்கள் மேல் உள்ள கடந்த கால கறைகள் தான் என்ன?  ஒவ்வொருவர் மேலேயும் ஏராளமான ஊழல் புகார்கள்  உள்ளது. இவர்களை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வார்களாஇந்த கூட்டணியின் சிறப்புகளைக் கொஞ்சம் விரிவாகவே பார்த்து விடுவோம். 

எந்தந்த கட்சிகள் இந்த கூட்டணியில் உள்ளது? 

இதில் உள்ள இரண்டு தேசிய கட்சிகள் என்ற பெயரில் இருப்பவை ஒன்று காங்கிரஸ் மற்றொன்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்

காங்கிரஸ் இறுதி மூச்சில் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றதுகம்யுனிஸ்ட்க்கு அந்தப் பிரச்சனையில்லைஇந்தியா முழுக்க துடைத்து எறியப்பட்ட போதும் கூச்சமில்லாமல் மாநில கட்சிகளிடம் பெரிய உண்டியல் ஏந்தி வசூல் செய்து தங்கள் வயிற்றுப்பாட்டைப் போக்கிக் கொண்டு வாழும் அரிய உயிரினமாக உள்ளது. மக்கள் நிராகரித்தாலும் கம்யுனிஸ்ட் தலைவர்கள் வாழும் ஆடம்பர வாழ்க்கைக்குப் பஞ்சமில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் காந்தியின் ஆதரவு காரணமாக மட்டுமே நேரு பிரதமராக அமரும் வாய்ப்பு அமைந்தது. அன்று இந்தியாவில் இருந்த அனைத்து மகாணங்களின் முழுமையான ஆதரவினைப் பெற்று இருந்த வல்லபாய் பட்டேல் காந்தி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்த காரணத்தால் இந்திய வரலாறு மாறி அமைந்தது. பட்டேல் அமர வேண்டிய பிரதமர் இருக்கையில் நேரு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்கிற வகையில் அமர்ந்தார்.

காஷ்மீர் பிரச்சினை முதல் சீனப் பிரச்சனை வரை வெளியுறவில் நடந்த நிகழ்ந்த குழப்பங்கள் அனைத்தும் நேரு பாணியில் சொல்லப் போனால் அது ஒரு விதமான செக்குலர் தன்மையை கடைப்பிடிப்பது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்துக் கவலைப்படாமல் தனக்குப் பின் தன் மகள் என்று நீண்ட கால திட்டத்தை அன்றே உருவாக்கினார். இந்திய அரசியலில் குடும்ப வாரிசு ஆட்சி என்ற பெயரில் குடியாட்சியை முடியாட்சியாக மாற்றிய பெருமை நேருவுக்கே சேரும்.

நேரு முதல் மன்மோகன் சிங் ஆட்சி வரை ஊடகங்கள் தொடர்ந்து ஊதிக் கொண்டேயிருந்தன. இந்தியா அமைதிப் பூங்கா என்றும், சிறுபான்மையினரை மதிக்கக்கூடிய காங்கிரஸ் என்றும் ஆளுக்கொரு கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருந்தனர். சுருக்கமாகச் சொல்லப் போனால் 2013 வரை இந்தியா எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தது.  காரணம் காங்கிரஸ் மற்றும் அவற்றின் கொள்கைகள் சார்ந்த குழப்பங்கள். கடைசியில் அம்மா சோனியாவும் மகன் ராகுலும் வந்து பெங்களூரில் நடந்த கூட்டணியில் வந்து ஐக்கியமாகியுள்ளனர். நாங்கள் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலையில் கீழ் இறங்கி வந்து நிற்கின்றனர். மற்றொரு பக்கம் காங்கிரஸ் தற்காலிகத் தலைவராக அவதாரம் எடுத்துள்ள மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் நான் பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று கிச்சு கிச்சு மூட்டுகின்றார்.

இந்தியா வளராமல் இருக்க அத்தனை சாத்திய கூறுகளையும் செய்த குடும்பச் சங்கிலித் தொடரில் வந்து சேர்ந்துள்ளவர் ராகுல்.

நேரு முதல் ராஜீவ் வரை செய்ய மறந்த காரியங்களால் சர்வதேச அரங்கில் இந்தியா பெற்ற அவமானங்கள் அதிகம்.  மன்மோகன் சிங் அவர்களை முன்னால் வைத்துக் கொண்டு சோனியா செய்த கைங்கர்யங்கள் அனைத்தையும் மோடி தலையில் வந்து விழுந்தது.  பெட்ரோலுக்காக வாங்கிய கடன் பத்திரங்கள் முதல் சீனாவின் அறிவிக்கப்படாத கைக்கூலியாக மாறியது வரை.

அடுத்தடுத்து சிகிச்சையில் இருக்கின்றேன் என்று வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கிக் கொண்டு இருக்கும் லல்லு பிரசாத் யாதவ் மேல் வழக்குகளும் அவர் மகன் தேஜஸ்வி யாதவ் மேல் வழக்குகளுக்கும் பஞ்சமில்லை. இவர்கள் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தில் குடுமிப்பிடிச் சண்டைக்கும் குறைவில்லை.

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ராஞ்சி மற்றும் பூரியில் இரண்டு ஐஆர்சிடிசி ஹோட்டல்களை நடத்துவதற்கு உரிமம் பெறுவதற்குப் பதில் பாட்னாவில் 2004 ஆம் ஆண்டு தனியார் ஒருவர் மூன்று ஏக்கர் நிலத்தை வழங்கியதாகக் கூறப்படும் வழக்கு இன்னமும் நடந்து வருகின்றது 

ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் 'குரூப் டி' பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர் 

2004-09 காலகட்டத்தில் இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்குப் பதிலாக தங்கள் நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சி.பி.., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. 

அடுத்து சமாஜ்வாதி கட்சியில் வாரிசு என்ற ஒற்றைத் தகுதியில் வந்த முலாயம்சிங் மகன் அகிலேஷ் யாதவ் யோகி ஆட்சியில் மவுனியாக இருந்து வருகின்றார். அவருக்கு வேறு வழியில்லை.

இது தவிர ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம், ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டுக் கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, முஸ்லிம் லீக் காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள்   சோனியா, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் , ஸ்டாலின்.மம்தா பானர்ஜி,அரவிந்த் கெஜ்ரிவால், சித்தராமையா,லாலு பிரசாத் யாதவ்,அகிலேஷ் யாதவ், சரத்பவார்,உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

கடைசியாகத் தமிழகத்தின் திமுக, விசிக, மதிமுக.  

திமுக கடந்த தேர்தல்களில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை தன் பக்கம் கொண்டு வந்து சேர்த்து தங்கள் வெற்றியை எளிதாக்கி வைத்து வென்றனர். இனி வரும் தேர்தலில் அதற்கு வாய்ப்பில்லை. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அவர்கள் வந்து பின்பு மோடி எதிர்ப்பு இல்லை தமிழகத்தில் இல்லாமல் போனது. திமுக வின் தில்லாலங்கடி வேலைகள் எதுவும் இனி அண்ணாமலையிடம் செல்லுபடியாகாது என்பதனை தமிழக வாக்காளர்கள் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டனர்

வரப் போகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழக பாஜக  உருவாக்கப்போகும் தாக்கத்தை திமுக மட்டுமல்ல அதன் துதிபாடியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஒட்டுண்ணிக் கட்சிகளும் புரிந்து கொள்வார்கள். 

புள்ளி வைத்த இந்தியா கூட்டணியில் உள்ள கறை படிந்த கைகளுக்கு சொந்த காரர்களுக்கு கரம் நடுங்குவதைப் பார்க்க முடிகின்றது. அதுவும் 2024 க்கு பின் பேசி கொண்டு இருக்கும் குரலும் நிச்சயம் அடங்கி விடும்.

மகளிர் உரிமைத் தொகை

 

 

No comments: