Wednesday, August 02, 2023

மகளிர் உரிமைத் தொகை

 

“சமூக நீதி” என்ற வார்த்தையை தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளை விட அதிகம் உச்சரிக்கும் கட்சி திமுக.   அதுவே பலமுறை திமுக விற்கு பிரச்சனையாகவும் மாறி விடுகிறது

அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னைப்பார்க்க வந்த திருமாவளவனை பிளாஸ்டிக் சேரில் அமர வைத்த புகைப்படத்தை நாம் அனைவரும் பார்த்தோம்.

அத்துடன் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தன்னை சந்திக்க வந்த இஸ்லாமிய பெரியவர்களை நிற்க வைத்தபடியே பேசுவதையும் பார்த்தோம்இது தான் ஸ்டாலினுக்கு பெரிய தலைவலியை உருவாக்குகின்றது.

பலமுறை அவரை புலம்பும் நிலைக்கு ஆளாக்கி வருகிறார்கள்இப்போது மற்றொரு திட்டம் பாதியில் நிற்பதை எப்படி எடுத்துச் சொல்வது?

"மகளிர் உரிமைத் தொகை" என்ற வார்த்தையை முதலில் தொடங்கி வைத்தவர் நடிகர் கமல்ஹாசன்அவர் தன் 2021 சட்டமன்றத்தேர்தல் வாக்குறுதியில் “வீட்டில் குடும்ப வேலைகள் செய்யும் பெண்களும் பணிபுரியத் தானே செய்கிறார்கள். அவர்களுக்கென்று உரிமைத் தொகை வழங்க வேண்டும்”

என்று சுபயோக சுப தினத்தில் முழங்கினார்ஸ்டிக்கர் ஒட்டுவதில் திமுக கெட்டிக்காரர்கள் ஆச்சே. அதை கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள்

திமுக தன் 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாகதமிழகத்தில் ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்” என்றது.

இது தேர்தலில் பேசு பொருளாக மாறியது.

திமுக ஆட்சிக்கு வந்தது. உரிமைத் தொகை கோப்பு காணாமல் போய்விட்டதுபேச்சு மூச்சே காணோம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக சொன்ன தேர்தல் வாக்குறுதியை, நிறைவேற்றாமல் இருப்பதை புள்ளி விபரத்துடன் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசத் தொடங்கினார்

திமுக முதல் இரண்டு வருடங்கள் வாயே திறக்கவில்லை. அசைந்து கொடுக்கவில்லைதிமுக கொண்டு வந்த பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பது பெண்கள் மத்தியிலே எதிர்ப்பலையை உருவாக்கியது. பேருந்தில் அமர்ந்தால் பெண்கள் நடந்துநர் பேசும் பேச்சினை பொறுத்துக் கொள்ள முடியாமல் கொந்தளிக்க தொடங்கினர்.

பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பெண்கள் ஒவ்வொரு பேருந்துக்கும் நீண்ட நேரம் காத்திருந்தால் தான் இலவச பயணம் செய்ய முடியும் என்ற நிலையைப் பார்த்து ஏசத் தொடங்கினர்.

பெண்களுக்கு அதிக எரிச்சலை உருவாக்கியது. தொலைக்காட்சி ஊடகங்கள் வராத இது போன்ற மக்களின் ஆதங்கங்கள் சமூக வலைதளங்களில் வரத் தொடங்க திமுக விழித்துக் கொண்டதுகாரணம் 2024 மக்களவைத் தேர்தல் விரைவில் வர இருப்பதால் மகளிர் உரிமைத் தொகையை தூசி தட்டத் தொடங்கினர்.

கூடவே அண்ணா பிறந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்பதனை ஆறு மாதத்திற்கு முன்பே ஸ்டாலின் அறிவித்து டுவிஸ்ட் வைத்தார். 

இப்போது கலைஞர் நூற்றாண்டு நினைவு மகளிர் உரிமைத் தொகை என்று பெயர் மாற்றப்பட்டது. தகுதியான நபர்களுக்கு மட்டும் என்று சுருக்கப்பட்டதுகாரணம் வருடத்திற்கு இந்த திட்டத்திற்கு 7000 கோடி தேவை என்ற எதார்த்தத்தை உணர்ந்த அதிகாரிகள் என்ன செய்வது என்பது அறியாமல் தகவலை முதல்வர் அலுவலகத்திற்கு பாஸ் செய்தனர்.

கூடவே சில நடைமுறை பிரச்சனைகள் உருவானது

எப்படி வழங்குவது?

வங்கி மூலமாக கொடுப்பதா?

இல்லை ரேசன் கடையில் மாதப் பொருட்கள் வாங்கும் போது வழங்குவதா?

என்ற குழப்பம் வர தலையைச்சுற்றி மூக்கைத் தொடும் நடைமுறைகளை உருவாக்கியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றதுஅதாவது இதற்கென தனி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் நேரிடையாக ரேசன் கடைக்கு வரும் பெண்களுக்கு வழங்கப்படும் என்பதாக சொல்கின்றனர்ஆனால் இன்னமும் அதிகாரப் பூர்வமாக இந்த தகவல் இன்று வரை வெளியாகவில்லை

கடந்த சில நாட்களில் பரபரப்பு செய்தியாக மகளிர் உரிமைத் தொகைக்கு தேவைப்படும் வேறொரு திட்ட நிதியில் இருந்து எடுக்கப்பட உள்ளது என்ற செய்தி மெது மெதுவாக உலா வரத் தொடங்கியது.

காரணம் திமுக அரசு உண்மையிலேயே செய்துள்ள காரியங்கள் இப்போது பொதுவெளியில் அம்பலப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் SCSP நிதியில் இவர்கள் கைவைத்திருப்பதும் திட்டமே தடை செய்யப்படலாம் என்கிற ரீதியில் அறிவாலய வட்டாரமே ஆடிப்போய் உள்ளதுஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களைக் கல்விரீதியாக, பொருளாதார ரீதியாக மேலே கொண்டு வர மோடி அரசு உருவாக்கியுள்ள திட்ட நிதியை அப்படியே மாற்றியுள்ளனர்.

வரப்போகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தல் உபி களுக்கு உள்ளூர கிலியை உருவாக்கியுள்ளது. காரணம் 2021 சட்டமன்றத் தேர்தலுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் பத்து சதவிகிதம் கூட நிறைவேற்றவில்லை.

பெண்களுக்கு பேருந்து கட்டணம் இலவசம் என்று தங்கள் சுய மரியாதையை பங்கம் செய்த திமுக என்று சமூக ஊடகங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேருந்துகளில் நடந்து கொண்டு இருக்கும் தகராறுகளை வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடியும். இப்போது அத்துடன் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் என்பதிலும் திமுக செய்த தில்லுமுல்லு என்றதால் திட்டம் முட்டுச் சந்துக்குள் வந்து நிற்கின்றது.

கடந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களிடம் இருந்து வாங்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அடுத்த கட்டம் நகராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னமும் விண்ணப்படிவம் கொடுக்காத வர்களை காத்திருக்கச் சொல்லி உள்ளனர்.

ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் கடந்து தேர்தலின் போது அனைவருக்கும் உண்டு சொல்லிய ஸ்டாலின் தற்போது தகுதியான பெண்களுக்கு மட்டுமே என்று சொன்னதை வைத்து எப்படி பெண்களை தகுதியை தேர்ந்தெடுப்பீங்க என்று நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

No comments: