Friday, January 22, 2010

கரும்புலி அதிர்ந்த ராணுவம்

ஈழத்தில் இப்போது ஆட்டத்தில் பிரபாகரன் மட்டுமே.  தமிழீழ (LTTE)  விடுதலைப்புலிகளின் ஆட்சி அதிகாரம் மட்டுமே.  இன்றைய சூழ்நிலையில் பிரபாகரன் மட்டுமே தமிழர்களுக்கு ஆதர்ஷணம் என்கிற நிலைமையில் இருக்கிறார்.     காரணம் இப்போது நாம் 1986/87 ஆம் ஆண்டில் பயணித்துக்கொண்டுருக்கிறோம்.
                                                            கரும்புலி தாக்குதல்
" நாங்கள் உங்களுக்கு எதிராக இருக்கிறோம், செய்த கொலைகளின் பட்டியல் இது தான், இத்தனை கொலைகளுக்கும் நாங்கள் தான் காரணம்.  வேறு எவரும் பொறுப்பு ஏற்க முடியாது" என்று இலங்கை அரசாங்கத்திற்கு அறிக்கை மூலம் சவால் விட்டு இப்போது ஒன்பது ஆண்டுகள் ஆகி விட்டது.

மற்ற இயக்கங்களை ஒவ்வொரு காரணங்கள் சொல்லி ஆட்டத்தில் இருந்து நீக்கியாகி விட்டது.  தொத்தலும் வத்தலுமாய் இருப்பவர்களும் பிரபாகரன் கடைக்கண் பார்வை பட்டு அப்படியே ஒரு ஓரமாய் இருந்துவிட்டுப் போகட்டும்.  நமக்கு அவர்கள் இப்போது தேவையில்லை.  ஆதரவு கொடுக்காவிட்டாலும் அக்கறையுடன் பார்த்த இந்திரா காந்தி இப்போது இல்லை.  முழுமையான ஆதரவு கொடுக்க முடியாவிட்டாலும் தன்னால் என்ன உதவி அளிக்க முடியுமோ?  பணமாக, ஆதரவாக கொடுத்த எம்.ஜி.ஆர் கூட இப்போது இல்லை.  இவர்கள் இருவரின் இழப்பு என்பது ஈழ மக்களின் உண்மையான பிரச்சனைகளை அக்கறையுடன் பார்த்த இந்திய தலைவர்கள் என்ற கௌரவம் இனியேதும் வேறு எந்த தலைவர்களுக்கும் எந்த காலத்திலும் வரப்போவதும் இல்லை.

இப்போது பிரபாகரன் இயக்கத்திற்கென்று தனி வானொலி நிலையம், தமிழ், ஆங்கில செய்திதாள்கள், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடும் அமைப்புகள், இலங்கை முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் ஆளுமை செலுத்தக்கூடிய அளவிற்கு ஆள், அம்பு, சேனை, அதிகார படைகள்.  இது போக தனி ஆட்சி நிர்வாக பரிபாலணம்.  வரி, வசூல், போன்ற உள்கட்டமைப்பு வசதிகள். இதற்கு மேலாக புலம் பெயர்ந்தவர்களின் மூலம் வந்து கொண்டுருக்கும் நிதி ஆதாரங்கள், இறக்குமதி செய்யப்படும் நவீன ரக ஆயுதங்கள், அதற்கென்று ஒரு குழு, அவர்களுக்கென்று ஒன்று என்ற எண்ணிக்கையில் தொடங்கி தொடர்ந்து கொண்டுருக்கும் சிறிய பெரிய கப்பல்களின் அணிவகுப்பு.  உலகமெங்கும் எல்லா நாடுகளிலும் வங்கிக்கணக்கு என்று ஆலமரம் போல் விழுது படர்ந்து நிற்கிறது.  உலக தலைவர்களுக்கு புரிய வைக்க ஆன்டன் பாலசிங்கம்.  உள்ளுர் தலைவர்களுடன் போரிட தேவையான ஆயுத கொள்முதலுக்கும் கேபி என்ற நிழல் மனிதர்.  நடுவில் பிரபாகரன்.  அவரைச்சுற்றிலும் கண் இமை போல பாதுகாப்பாளர்கள்.  கிட்டத்தட்ட ஈழத்து எம்.ஜி.ஆர் போல. ஈழம் என்றால் விடுதலைப்புலிகள்.  புலிகள் என்றால் பிரபாகரன்.  பிரபாகரன் மட்டும் தனி ஈழத்தை வாங்கித்தர முடியும் என்றதொரு பிம்பம் உருவாக்கப்பட்டு விட்டது?

இப்போது இலங்கையின் உள்ளே நடந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்தியாவின் பார்வையில் நற நற.  ஜெயவர்த்னே பார்வையில் எப்போதும் பீதி.  எவரோ போகிற போக்கில் தனி ஈழம் என்றொரு பிரகடனத்தை பிரபாகரன் விரைவில் வெளியிடப் போகிறார் என்று காதில் ஓதி விட்டு போயிருக்கிறார்கள்.  யாழ்பாணத்தில் இருந்து அப்படியோ தாரை தப்பட்டையோடு கிளம்பி வந்து நம்முடைய இருக்கையில் அமர்ந்து விடுவார்களோ?  இராணுவத்தையும் நம்பித் தொலைக்கவும் முடியவில்லை.  கொடுக்கும் அடியை விட வாங்கிய அடிகளுக்கு ஒத்தடம் கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது.  இவர்கள் எப்போது எழுந்து போய் தாக்குவார்கள்.  அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் என்று வரவழைப்பவர்கள் எல்லோருமே " நாங்கள் தெளிவான முறையில் உங்க வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் " என்கிறார்கள்.  ஆனால் பய புள்ளைக திருந்த மாட்டேன் என்கிறார்கள்.  நம்மால் இனி மாறவும் முடியாது.  வயசு வேறு ஆகிவிட்டது.  மாறப் போவது தெரிந்தாலே பிக்குகள் வந்து பிச்சு பிடுவானுங்க.  கூலிப்படைகளும் ஆகாவெளியாகி விட்டது.   " அண்ணன் எப்ப போய்ச் சேருவான்?  திண்ணை எப்ப காலியியாகும்"  என்று காத்துக்கொண்டுருக்கும் மற்ற அமைச்சர்கள் வேறு ஒரு பக்கம் பீதியை கிளப்பிக்கொண்டுருக்கிறார்கள்?  என்ன செய்வது?

ஏற்கனவே சிரிக்காத மூஞ்சியைப் பெற்ற ஜெயவர்த்னே நிறையவே யோசித்த ஆண்டு.  விழித்த மூஞ்சியும் சரியில்லை.  ராஜிவ் நோக்கமும் புரியவில்லை.

இந்திய ஆட்சியாளர்களுக்கு கடுக்கா கொடுப்பது போல் பிரபாகரனை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியவில்லை.  பிரபாகரனும் மிகத் தெளிவாக இருந்தார்.  ஒப்பந்தமா?  சரி சரி பேசி முடித்ததும் மொத்த விசயங்களையும் நான் செய்தித்தாளில் பார்த்துக்கொள்கின்றேன்.  நமக்கு இதெல்லாம் ஆகாது என்று எப்போதும் போல் துப்பாக்கியை துடைத்து காத்துக் கொண்டுருந்தார்.  இப்போது கரும்புலி அமைப்பு வேறு " எங்க போய் முட்ட வேண்டும்"  என்று அடம்பிடித்துக்கொண்டுருக்கிறது.  அவர்களுக்கு வேறு வேலை கொடுத்தாக வேண்டும்?

டட்லி சேனநாயகா, பண்டாரா நாயகா, சீறீமாவோ என்று எத்தனையோ ஒப்பந்தங்கள்.  கழிப்பறையில் துடைக்கும் காகிதம் போல ஆனதை கவனமாக குறித்து வைத்திருந்த பிரபாகரன் இந்தியாவை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக இவர்கள் பின்னால் போய் நின்றால் குனிய வைத்து சவாரி செய்கிறார்கள்.  வல்லரசு மக்களுக்கு முன் இந்த ஜெயவர்த்னே எத்தனை தெளிவாக தண்ணி காட்டிக்கொண்டுருக்கிறார்.  அந்த பய புள்ளைகளுக்கு ஒரு மண்ணும் புரியமாட்டேன் என்கிறது.  சந்தோஷமாக வானத்தில் சுற்றிக்கொண்டுருந்தவரை கொண்டுருந்தவரை பிரதமர் என்று உட்காரவைத்தவர்களை எப்படி திட்டித்தீர்ப்பது.

இத்தனை வெகுளியாக இருக்கிறாரா?  வாழ்த்துக்கடிதம் எழுதியும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்.  பேச வருகிறாயா?  அப்படியென்றால் முதலில் காட்டும் தாளில் கையெழுத்தை போடு?  பிறகு பேசலாம் என்பவரை எப்படி எதிர்கொள்வது?

ஐயா இது மனிதர்கள் சம்மந்தப்பட்ட விசயங்கள்?  வெறும் காகிதம் அல்ல.  சிங்களர்களைப் பற்றி குறிப்பாக ஜெயவர்த்னே பற்றி உங்கள் அம்மாவிடம் கேட்டுப் பாருங்கள்.  உலக அரசியலுக்கே அவர் ஞானி.  ஞானத்தை கொடுத்த புத்தர் வழியில் வந்தவர் என்று அவரை தவறாக புரிந்து கொண்டுருக்கிறீர்கள்?  அவர் உங்களுக்கும் அல்வா கொடுப்பார்? உங்கள் மகன் ராகுலுக்கும் ஜிலேபி சுற்றிக்கொடுப்பார் என்று நாயாக கத்தினாலும் இடையில் தீட்சித் இருந்து கொண்டு கபடி ஆட்டம் ஆடுகிறாரே?

தொடர்ச்சியாக ரொமேஷ் பண்டாரி, ப சிதம்பரம், நட்வர்சிங்.  எத்தனை எத்தனை பேர்கள்.  இவர்கள் இலங்கைக்கு செண்டிங் அடிப்பதை விட உள்ளே போய் தொகுதியில் நாலு நல்ல விசயங்களை பார்த்தாலாவது ஓட்டுப் போட்டவுங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும்.

புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.  நீங்க ஒதுங்கி போய்விடுங்க?  நாங்க பார்த்துக்கிறோம் என்றாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.  அதென்னவோ சமாதானப்புறா போல் வாங்க வேண்டி அவார்டு ரிவார்டு எல்லாம் காத்துக்கிட்டுருக்கிற மாதிரி ராஜிவ் காந்தி துடிதுடியா துடிச்சுக்கிட்டு இருக்கிறாரு?  இனி என்ன செய்யலாம்?

பிரபாகரன் கூட அதிகம் யோசித்த ஆண்டு.

பூடானில்(திம்பு) நடந்து பேச்சு வார்த்தை தோல்வி.  பெங்களுர் சார்க் மாநாடு தோல்வி.  பிரபாகரன் வடக்கு கிழக்கு மாகாண உரிமைகளும், தமிழர்களை பிரிக்கக்கூடாது என்ற நோக்கம்.  ஆனால் ஜெயவர்த்னேவோ வடக்கு கிழக்கு என்பதை விட சாத்யமில்லாத தமிழர், முஸ்லீம்,சிங்களர்கள் என்று பிரித்து நரித்தனமாக முன்வரைவு கொண்டு வரப்போகிறேன் என்று தீட்சித்திடம் படம் காட்டுகிறார்.  ராஜிவ்க்கு வேறு ஏதும் புரியாத நிலைமையில் அவசரமாய் ஏதோ ஒரு வழியில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆக வேண்டும்.  தடுப்பவர்கள் அழித்துவிடவேண்டும்.  உள்நாட்டு டேமேஜ் இமேஜ் சற்று தூக்கி நிறுத்தவேண்டும்? அவரவர்களுக்கு அவரவர் பாதையில் மொத்தமும் அவசரம்?

நம்மாளு ஜெயவர்த்னேக்கு இப்போது கொஞ்சம் கெட்ட நேரம்.  முற்றுகைப் போரை யாழ்பாணத்தை நோக்கி தொடங்கினார்.  இதற்கு வழியனுப்பு விழா போல் அவர் கூறிய வாசகம் இங்கு முக்கியமானது.

" மொத்தமாக யாழ்பாணத்தை அழித்து விடுங்கள்.  பிறகு நிர்மாணம் செய்து கொள்ளலாம்.  இந்த போர் மொத்த இறுதிப் போராக இருக்க வேண்டும் ".
ஏற்கனவே அத்யாவசியமான பொருட்களுக்கான தடைகளையும் உருவாக்கி விட்டது.  பச்சத்தண்ணி கூட இல்லாமல் நா வரண்டு சாகட்டும்.  சாப்பிட்டால் தானே துப்பாக்கி தூக்க முடிகின்றது.  உரிமை என்று போர் செய்ய முடிகின்றது.  வயிற்றில் அடித்தால்?.  ஆக்ரோஷமாய் கிழட்டுச் சிங்கமாக உருமினார்.

ஜெயவர்த்னே செயல்பாடுகளை பார்த்துக்கொண்டுருந்த இந்தியாவிற்கு இரண்டுங்கெட்டான் நிலைமை?  கொஞ்சம் பொறுய்யான்னா இந்தாளு கேட்கமாட்டேன் என்கிறாரே?  ஆக்கப் பொறுத்தவன் ஆற பொறுக்க மாட்டாம இதென்ன இத்தனை அடம்?

நாட்டாமை இந்தியாவிற்கு வந்த கோபத்தை பார்க்க வேண்டுமே?  எங்கள் பேச்சை மீறி போர் தொடக்கிறாயா?  என்ன செய்கின்றேன் பார் என்று கப்பலில் தமிழர்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்ப இலங்கை கடற்படை தடுத்து (1987 ஜுலை 3) திருப்பி அனுப்பியது.  வல்லரசு சும்மா இருக்குமா?  கௌரத என்ன ஆகும்?  வானூர்தி மூலமாக பொட்டலங்களை சும்மா சர் சர் என்று தமிழர்கள் பகுதியில் (1987 ஜுலை 4  மிராஜ் வகை விமானம்) வீசத் தொடங்கியது.

இதற்கிடையில் 1987 மே மாதம் Operation Liberation என்ற பெயரில் விமான, கடற்படை, கனரக, பீரங்கி அணிவகுப்பு என்ற படைபட்டாளத்துடன் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்து இதயப்பகுதியான யாழ்பாண வடமராட்சி பகுதியை நோக்கி பீடுநடை போட்டு தனது ஆட்டத்தை இராணுவம் தொடங்கியது.  எடுப்பார் கைப்புள்ள என்ன செய்யும்?  அத்தனை அட்டூழியங்களும், கோரத்தாண்டவங்களும், எறியூட்டல்களும், கற்பழிப்பு, சொத்துக்களை சூறையாடுதல் என்று முன்னேறிக்கொண்டு வர புலிப்பட்டாளம் பின்வாங்கிக் கொண்டே போனது.   இந்தப் பகுதியில் தமிழர்களின் புராதன அத்தனை நினைவுச் சின்னங்களும் குறித்து வைத்து அழிக்கப்பட்டன.  

இந்த நிகழ்ச்சி ராஜீவ் காந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது.  ஆனால் பிரபாகரனுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.  வா ராஜா வா ராஜா என்று பின்வாங்கிக்கொண்டே போனவர்கள், 1987 ஜுலை 7ந் தேதி அன்று முதல் தடவையாக கேப்டன் மில்லர் என்ற கரும்புலி வீரன் தான் வெடிபொருட்கள் நிரம்பி ஓட்டிச்சென்ற கவச வாகனத்தின் மூலம் இராணுவத்தினர் மையம் கொண்டு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக்கொண்டுருந்த நெல்லியடி மகாவித்யாலயத்திற்குள் உட்புகுந்து வெடிக்க வைக்க தமிழ் திரைப்படத்தில் சாகச சண்டைக்காட்சி போல மொத்தமாக அந்த பகுதியே கிடுகிடுத்தது.

உயிர் இழப்பு, பொருட்சேதம் என்று கணக்குப் பார்த்த ஜெயவர்த்னே அன்று நிச்சயம் கூட ரெண்டு மாத்திரை போட்டுத் தான் தூங்கியிருக்க வேண்டும்.  பய புள்ளைகளுக்கு படிச்சு படிச்சு சொன்னாலும் இத்தனை அசால்டா இருந்து தொலைச்சுட்டானுங்களே என்று தலையில் அடித்துக்கொண்டுருப்பார்.  அப்போதைய சூழ்நிலையில் ராஜிவ் கூட சற்று யோசித்துருப்பார். பிரபாகரன் என்பவர் யார்?  அவர் பின்னால் இருக்கும் படையணி என்பதன் உண்மையான வீரம் என்ன? என்பதை புரிந்து இருக்கக்கூடும்?
காரணம் விரைவில் ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் கையெழுத்தாக போகின்றது?  இப்போது ஓப்பந்த முன் வரைவுகள் நிச்சயார்த்தம் நிலைமையில் இருக்கிறது.  தாலி கட்ட நாள் குறிக்க அவர் பின்னால் ஒரு படைபட்டாளம் ஓத காத்துக்கொண்டுருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.  ஒரு படுகொலைக்காக காலன் உருவாக்கிய COUNT DOWN அன்றில் இருந்து தான் தொடங்குகிறது.  அதுவே அமைதிப்படை உருவாக்கிய அக்கிரம செயல்பாடுகள் மொத்தத்தையும் உறுதிப்படுத்தியது.

மற்றொரு ஆச்சரியம் அரசியல் முதிர்ச்சி, ஆழ்ந்த ஞானம் இல்லாமல் உள்ளே வந்த ராஜீவ் காந்தி செய்த தவறுகளும், அவரின் அவசரத்தை மொத்த சாதக பாதக அம்சங்களையும் அவருக்கும் முறைப்படி புரிய வைக்க முயற்சிக்காத அதிகாரவர்க்கத்தினர் என்று மொத்தமாக இந்தியா பக்கம் எத்தனை கைகள் சுட்டிக்காட்டினாலும், உலக தமிழர்களின் வீரத்தின் விளைநிலமாக இருக்கும் இருந்த இருக்கப்போகும் பிரபாகரன் எந்த தைரியத்தை வைத்துக்கொண்டு இந்த படுகொலையை நிகழ்த்தினார் என்று இந்த நிமிடம் வரைக்கும் ஆச்சரியம்.  அதே சமயம் இலங்கை தமிழர்கள் உலகத்தில் மொத்தமாக வாழும் கடைசி தமிழன் வரைக்கும் இந்த ராஜீவ் படுகொலை என்பது பெரும் கரும்புள்ளியாக இருக்கும் என்பதை எப்படி உணர மறுத்தார் என்பது மற்றொரு திகைப்படைய வைக்கும் வெட்கக்கேடு?

38 comments:

 1. ராஜீவ்காந்தி சாதாரண நபராக தேர்தல் வேட்பாளராக
  இருந்த சமயம்தான் கொலைசெய்யப்பட்டார்.அப்போ
  து அவர் பதவியில் இல்லை.இந்நிலையிலும் பாரதப்
  பிரதமர் ராஜீவ் கொலைசெய்யப்பட்டார் என்று கூறு
  வது தவறுதானே.பிரதமர் கொல்லப்படவில்லை.
  ராஜீவ் என்ற பிரமுகர் கொல்லப்பட்டார் அதற்கு ஏன்
  இத்தனை ஆர்ப்பாட்டம்.

  ReplyDelete
 2. ஈழத்தின் வரலாறுகளை சளைகாமல் எழுதும் உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது. எழுத்துநடை மெருகேறிகொண்டெ வருகிறது. ஜொதிஜி...

  ReplyDelete
 3. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?

  மூன்று வார்த்தைகளில் எத்தனை எளிதாக முடித்துவிட்டீர்களே? நியாயமா? இதன் எதிர்மறை நியாயங்கள் மொத்தமும் இலங்கையில் இருந்த அமைதிப்படை குறித்த அத்தியாயத்தில் இது வரையிலும் எவரும் தெரிந்து இருக்க முடியாத மொத்த தகவல்களையும் திரட்டி எழுதிக்கொண்டுருக்கும் இந்த சூழ்நிலையில், எனக்கே வருத்தமாக இருந்தாலும் கொன்று முடித்த பிறகு மொத்த தீர்வும் அன்று கைக்கு வந்து விட்டதா?

  அதிகம் வருத்தப்பட வைத்தீர்கள் நண்பரே?

  பிரமுகர்? பிரதமர்? வித்யாசம் வேண்டாம்? இலங்கையின் உள்ளே கொன்றதில் அங்கு நடந்து கதிர்காமர் படுகொலை வரைக்கும் உள்ள நியாயங்களை அத்தனையும் ராஜீவ் காந்தியை அதுவும் தமிழ்நாட்டில் வைத்து கொன்ற நியாயங்களை எதில் கொண்டு போய் சேர்ப்பீர்கள்?

  எத்தனை சமாதானங்கள் இவர் இறப்பில் நீங்கள் எதிர் மறைநியாயங்களை நீங்கள் சொன்னாலும் மொத்ததில் அவர் ஒரு அப்பாவி அல்லது வெள்ளந்தி மனிதர்.

  பகடைக்காயாக மாற்றப்பட்டவர்.

  ReplyDelete
 4. நன்றி கண்ணகி. உங்களை பெரியார் வாரிசு என்று அழைத்துக்கொள்ளலாம்

  ReplyDelete
 5. வணக்கம் ஜோதிஜி,
  சற்று பெரிய விடுமுறையில் சொந்த ஊரில் இருப்பதால் வலையில் உலவ முடியவில்லை....அருமையாக பகிர்ந்து கொண்டு வருகிறீர்கள்....நீங்கள் சொன்னது மிக மிக நிதர்சனமான உண்மை....தலைவருக்கு தாங்க முடியா கோபம் இந்திய மேல் இருந்தாலும்...அதை வெளிப்படுத்திய விதம் மிக முரட்டுத்தனமாக மாறிப் போனதுதான் பிரச்சினையை திசை திருப்பி விட்டது.....மாத்தையா மன்றாடி கேட்டார் தலைவரிடம் , ராஜீவை வேறு மாநிலத்தில் வைத்து கொலை செய்யலாம் என்று ....போன்ற தகவல்கள் கேள்விப் பட்டிருக்கிறேன்...ஆனால் கண்ணுக்கு தெரியாத ஒரு சிறிய தமிழ் நாட்டு அரசியலும் அதில் அடங்கிருந்த காரணத்தினால்தான் ராஜீவ் தமிழகத்தில் வைத்து கொல்லப் பட்டார் என்றும் கேள்வி....தெளிவாக விளக்குவீர்கள் என நம்புகிறேன்....ராஜீவ் கொலை செய்யப்பட்டது நியாயம் தான் நமது பார்வையில்...ஆனால் இடையில் ஆடிக் கொண்டிருந்த சில் வண்டுகளை(ரா உளவுத் துறைஉயரதிகாரிகள்) வேட்டயாடியிருந்தால் பார்வைகள் சற்று மாற்றம்பெற்றிருக்குமோ என்று ஒரு எண்ணம் வந்து போவதை தடுக்க முடியவில்லை..!

  ReplyDelete
  Replies
  1. dei lemuria, unda veetukku rendgam pakkarayada paradesi. un appan sinhalan a iruppan ninaikkaren athanda indha eena budhi. india vai pagaichangalla. unga thalaivar, thalaiye illama sethan. neengalum appadithanda pichakaran mathiri saveenga nai payalugale. puzhaikkapona idathula vayum soothaiyum pothikittu irundhuruakkanum, atha vittu thani nadu kettta jevwardane kodupanna> avan enna un machana illa unga akkal katti irukkana. dei lemuria nai, thamiz natula ukkandhu undichoru thinnu ennoda natta pathiyum nattoda thalaivargala pathiyum pesaraya. nee oruthannukku sathiyama purandhu irukka mattada. unga appan sinhal bikku va than iruppan, koodave pakisthani um sendhu iruppan athan un pudhi nai pee pola naarudhu.
   pannipayale. poi sinhala pee thinnu appodhan unakku budhi varum.

   Delete
 6. வணக்கம் லெமூரியன். நலமா?

  உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. மின் அஞ்சல் பார்த்தீர்களா?

  மற்றபடி உங்கள் "கொலை செய்யப்பட்டது நியாயம்" என்ற வார்த்தைகள் வலிக்கின்றது.

  பல உண்மைகள் ஒவ்வொன்றாக வரும்.

  ReplyDelete
 7. உங்கள் நடுனிலை தன்மை அரிய ஒன்று.
  மிகவும் பயனுள்ள கட்டுரை
  வாக்குகள் சேர்க்கப்பட்டன

  ReplyDelete
 8. பாகம்-ஒன்று.
  உலகில் பல நாடுகளில் அரிசியல் தலைவர்கள் கொல்
  லப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் அந்த நாடுகளிலெல்லாம்
  கொலைசெய்தவர்தான் கொல்லப்பட்டார். ஆனால் ஒரு
  இராஜீவ் காந்திக்காக பல இலட்ஷம் அப்பாவிமக்கள்
  கொலைசெய்யப்பட்டது ஈழ்மண்ணில் மட்டுமே.கார
  ணம் நேருகுடும்பத்தை வைத்தே அரசியல் நடப்பதால்.

  ReplyDelete
 9. பாகம்-இரண்டு.
  எந்தநாடாவது ஆக்கிரமிப்பிலிருந்து தேசவிடுதலை
  அடையவேண்டும் என்றால் போராடும் ஒருகுழுவா
  லேயே அது சாத்தியப்படும்.பல எலிசேர்ந்து புற்று
  எடுப்பதில்லை.கென்யா சுதந்திரப்போராட்டத்தை
  எடுத்துக்கொண்டால் ஜோமோகென்யாட்டாவின்
  மாவ் மாவ் இயக்கம் மற்றகுழுக்களை அழித்து தனி
  இயக்கமான்போதுதான் அது வெற்றிபெற்றது.

  ReplyDelete
 10. நன்றி அறிவுத்தேடல்.

  ReplyDelete
 11. உங்கள் விமர்சனத்தை மறுப்பதற்கு மன்னிக்க.

  கடைசியாக நடந்த இறுதி யுத்தம் என்பது ராஜீவ் காந்தி கொலையினால் மட்டும் தான் நடந்து இத்தனை மக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்று நம்பினால் மாற்றிக்கொள்ளுங்கள். சீனா ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அப்போதைய சூழ்நிலையில் திருடனுடன் சேர வேண்டிய சூழ்நிலை. ஒரு முறை சேர்ந்து விட்டால் மாற முடியும் என்றா நிணைக்கிறீர்கள்?

  ராஜீவ் காந்தி மரணத்தை இத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள உங்கள் மனம் துணிகின்றதே? நோக்கம் சரியோ தவறோ? செயல்படுத்திய விதம் படுபாதகம் என்ற அறவிற்காகவது யோசிக்க முடியவில்லை என்றால் என்னால் என்ன சொல்லமுடியும்?

  ReplyDelete
 12. பாகம்-மூன்று.
  அதேபோல் பிரபாகரனின் இயக்கம் தனிஒருஇயக்கமாக
  வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.எட்டப்பன்கள்
  களை எடுக்கப்பட்வேண்டியது எந்தசுதந்திர்ப்போராட்தி
  லும் அவசியமானதே.இந்தியாதன் நலனுக்காக இப்
  போது பழங்குடியினரை ந்ஷ்ஸல்பாரிஎன்று அழிப்பது
  போல்.வல்லாதிக்கநாடுகள் கட்டிஎழுப்பியபிம்பம் புலி
  கள் பயங்கரவாதிகள் என்பது.

  ReplyDelete
 13. பாகம்-நான்கு: தொடரும்

  ReplyDelete
 14. உள்ளே உள்ளவர்களை அழித்தது குறித்து என்னுடைய புரிதல்கள் என்பது தனி. இடுகையில் மொத்த சாதக பாதக அம்சங்களையும் வணிக ரீதியான புத்தகம் போல் விளக்க வைக்க முடியாது. ஆனால் பயந்தாலும், வெறுத்தாலும், வேறு வழியே இல்லை என்றபோதிலும் பிரபாகரன் ஆளுமை என்பது என்னுடன் பேசிய பிரபாகரனை வெறுத்த வெறுத்துக்கொண்டுருக்கும் ஈழ நண்பர்கள் கூட அவர் இறந்து இருப்பார் என்பதை நம்பத் தயாராய் இல்லை?

  ReplyDelete
 15. நீண்ட நேரம் உள்ளே இல்லத்தில் குடியிருந்த உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 16. அரைகுறையா பொட்டிக்கடையில பேசுறது, டீக்கடையில ஆத்துறது ஒட்டுக்கேட்டத மட்டுமே வைத்துமே இருந்த சிந்தனைகள் அனைத்தையும் புரட்டிப் போடுது உங்க தொடர். உங்கள் உழைப்பும்,அதனைப் பார்வைக்கு வைக்கும் விளக்கமான தகவல்களும் பல விஷயங்களைத் தெளிவாக்குகிறது. மிக்க நன்றி :).

  இது போன்ற இடியாப்ப சுழலுக்குள் நடுவில் இருக்கும் ஒரு விஷயத்தை எந்த இடத்திலும் பக்கசார்பின்றி சொல்லும் நேர்மை படைப்புக்கு மேலும் மரியாதை சேர்க்கிறது. தொடருங்கள் :)

  ReplyDelete
 17. ஜாலியன்வாலா படுகொலையில் ஜெனரல் ரைகரை ஒரு வன் பல் காலம் காத்திருந்து லண்டன் போய்க்
  கொன்றானே அது நியாயம் என்றால்.ஈழத்தில் இந்தி
  யா அமைதிப்படைசெய்த படுபாதங்களுக்குப்புலிகள்
  இராஜீவை கொன்றதும் நியாயமாகவே எனக்குப்படு
  கிறது.

  ReplyDelete
 18. சுடுதண்ணி உங்கள் பாராட்டுரையை விட உங்களின் வாக்கிய கோர்வை மிகவும் தரமாக இருக்கிறது. உங்கள் இடுகையின் எழுத்துக்களைப் போல

  ReplyDelete
 19. எம் கே நாரயணன் இப்போது மேற்கு வங்க கவர்னர். மேனன் இப்போது பாதுகாப்பு செயலாளர்.

  இவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்? உங்கள் பார்வையின் படி ராஜிவ் காந்தி இறந்தது உலக தமிழ் மக்களின் சுபீட்ச நாள் போல் தோன்றுகிறது.

  அது உங்களின் கருத்து சுதந்திரம். வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை?

  ReplyDelete
 20. வணக்கம்
  முதல் கரும்புலி தாக்குதல் நடந்தது யூலை 05

  ReplyDelete
 21. நன்றி நேதாஜி அவர்களே,
  உங்களின் உழைப்பு பாராட்டதக்கது,

  ஆங்கிலேயர் ஆட்சி முதலாக முள்ளிகால்வாய் வரைபல தகவல்களைத் கொடுக்கிறீர்கள. இது எப்படி சாத்தியம் என்று மலைப்ப்பாக உள்ளது. பல தேசங்கள் சம்பந்தப்ட்ட விஷயம் என்ப்தால், ஆதரங்களையும் இணையதள சுட்டிகளையும் இணைத்தால் இன்னமும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 22. சுபா...........

  1987 ஆம் ஆண்டு முக்கியமான ஆண்டு. 2009 போலவே,

  1987 ஆரம்ப நாட்களில் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் மூலம் சிங்கள உயர் அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

  இதன் தொடர்ச்சியாக 1987 மே 26 அன்று முறைப்படி யாழ்பாண முற்றுகை என்ற போர் தமிழர்கள் மேல் திணிக்கப்பட்டது.

  1987 ஜுலை 5 நள்ளிரவு சிங்கள ராணுவத்தின் மீது மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

  அன்று தான் முதல் கரும்புலி கேப்டன் மில்லர் தாக்குதல்களை தொடங்கி வீரமரணம் அடைந்தார்.

  ReplyDelete
 23. நன்றி வினோத்

  வானம்பாடிகள் ஐயாவுக்கு தேவிஜி உங்களுக்கு நேதாஜி. நன்றி.

  ஒவ்வொரு நாட்டு விடுதலைக்கும், தலைவர்களுக்கும், மொத்த அரசியல் நிகழ்வுகளுக்கும் ஆங்கில தமிழ் புத்தகங்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கிப்படித்தால் ஒரு முழுமை கிடைக்கும். அது முழுமையாக இல்லாவிட்டாலும் முக்கால்வாசியாவது புரிந்து கொள்ள முடியும்.

  ஆனால் இந்த இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் என்பது நான் இதுவரைக்கும் பார்த்தவரையில் வெறுப்பு விருப்பு என்ற இரண்டு தளங்களில் அது போக ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டம், அல்லது குறிப்பிட்ட விசயங்களை இதனை அடிப்படையாக வைத்து எழுதி இருப்பது ஆச்சரியத்தின் உச்சம்.

  விக்கிபீடியா இணைப்புகளை பாருங்கள். பழைய ஆங்கில வார தினசரி பத்திரிக்கைகளை பாருங்கள். சமீபகாலத்தில் வந்த மொத்த பிரபாகரன் குறித்த புத்தகங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். வலைதளம் மொத்தமும் ஊன்றி கவனித்துப்பாருங்கள்.

  திரண்டு வருவதில் மிஞ்சுவது தான் தேவியர் இல்லம். தவறு இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

  நன்றி.

  ReplyDelete
 24. //இலங்கை தமிழர்கள் உலகத்தில் மொத்தமாக வாழும் கடைசி தமிழன் வரைக்கும் இந்த ராஜீவ் படுகொலை என்பது பெரும் கரும்புள்ளியாக இருக்கும் என்பதை எப்படி உணர மறுத்தார் என்பது மற்றொரு திகைப்படைய வைக்கும் வெட்கக்கேடு?//

  சரியாக கூறினீர்கள்!

  இதன் மூலம் அவர்களுக்கு பெரும் இழப்பு.. உதவியும் குறைய, எதிர்ப்பு அதிகமாக காரணமாகி விட்டது.

  ReplyDelete
 25. உங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி கிரி

  ReplyDelete
 26. கொன்றது தமிழர்கள் ,வென்றது வல்லாதிக்க சதி
  ஆகவே அதரம் இல்லாமல் புலிகள் மீது குற்றங்களை வைக்காதீர்
  இன்னும் இந்திய நீதிதுறையே முழுமையாக வழக்கை முடிக்கவில்லை ,,,,,

  ReplyDelete
 27. முதன் முறையாக வந்து கொடுத்த விமர்சனத்திற்கு, தொடர் வாசிப்புக்கும் நன்றி மருமோன்.

  ராஜிவ் மரணம் குறித்து வரும் போது சில புரிதல்கள் உருவாகும்.

  ReplyDelete
 28. /*
  பகடைக்காயாக மாற்றப்பட்டவர்.
  */
  இதுவும் கொடுமையான வார்த்தைகள்....
  அவர் சாதாரண இடத்தில் இருந்தவரில்லை, இந்திய நாட்டி பிரதமர். அனால் உங்கள் கூற்றுப்படி கொஞ்சம் கூட யோசிக்காதவர்...?

  நான் கொலை செய்ததை நாயப்படுத்தவில்லை... அதே சமயம் ஒருவரின் கவனக்குறைவு அல்லது கேட்பார் பேச்சை நம்பி ஒரு இனத்தை அடிமையாக்க நினைத்தவுருக்கு என்ன தண்டனை..?

  /*
  அதிகம் வருத்தப்பட வைத்தீர்கள் நண்பரே?
  */
  உங்கள் எழுத்தை கொஞ்சம் திருப்பி படியுங்கள்... "பத்மநாப வேட்டையாடப்பட்டார்..." "மற்ற இயக்கங்கள் அளிக்கப்பட்டன... இதெல்லாம் சாதாரண வார்த்தைகள் தான், அனால் அதற்குள் பல உயிர்கள் போய்விட்டதே?
  இதை சொல்லும்போது வலிக்கவில்லையா? வலிச்சா மத்தவுங்களுக்கு தானேன்னு விட்டுடீங்களா?

  ReplyDelete
 29. 1. ராஜீவ் காந்தி குறித்து மொத்தப் பார்வை தொடரப்போகும் சில பதிவுகள் மூலம் தெரிய வாய்ப்பு இருக்கிறது. மொத்தத்தில் பிரதமர் என்ற பதவிக்கும் அவருக்கும் உண்டான இடைவெளி அப்போது உங்களுக்குப் புரியும்??

  2. இரண்டாவது உங்கள் விமர்சனம் முற்றிலும் சரி. மறுப்பதற்கு இல்லை. ஆனால் கிடைத்த தண்டணை தான் படுபாதகம்?

  3. மற்ற இயக்கங்களுக்கும் ராஜீவ் காந்திக்கும் எதை வைத்து ஒப்பீடு செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. இரண்டும் விலைமதிக்க முடியாத உயிர் தான். உள்ளே களப் போராட்டத்தில் நடந்த மற்ற திரைமரைவு வேலைகளையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  புயலில் பயணித்துக்கொண்டுருக்கும் கப்பலில் உள்ளே இருந்து கொண்டு இருக்கும் ஓட்டையை பெரிதாக்கிக்கொண்டுருப்பவர்களை உடன் அழைத்துச் செல்வீர்கள்?, கடல் தண்ணீரில் தள்ளிவிடுவீர்களா?

  இந்த எதிர்மறை நியாயங்கள் இந்திய அமைதிப்படை உள்ளே வெளியே என்று அப்போது புரியும்.

  ஹேமா இடுகையில் வசந்த் சொன்னமாதிரி உங்கள் பெயரை தட்டினால் எங்கேயோ அழைத்துக்கொண்டு செல்கிறீர்கள்?

  ReplyDelete
 30. /*
  மற்ற இயக்கங்களுக்கும் ராஜீவ் காந்திக்கும் எதை வைத்து ஒப்பீடு செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.
  */

  உங்களின் பொறுப்பான மற்றும் விரைவான பதிலுக்கும் நன்றி...

  எல்லாரும் மனிதர்கள் என்ற அடிப்படையிலும், எல்லாரும் விலைமதிக்க முடியாத உயிர் தான் என்ற அடிப்படையிலும் தான்.

  --
  /*
  ஹேமா இடுகையில் வசந்த் சொன்னமாதிரி உங்கள் பெயரை தட்டினால் எங்கேயோ அழைத்துக்கொண்டு செல்கிறீர்கள்?
  */

  என்னோட http://whoismyboss.net தளத்தில் வேலை நடைபெறுகிறது, அதனால் என்னோட மற்ற இந்த http://southdreamz.com தளத்தை இணைத்துள்ளேன்.

  ReplyDelete
 31. நன்றி பழநி

  1, இது குறித்து நீங்கள் விரும்பும் அத்தனை பதில்களும் தயாராய் இருக்கிறது. காந்தி தேசத்தின் கண்ணீர் வரவழைத்த நிகழ்வுகள் புரியும்?

  2, நன்றி. உங்கள் பற்றி தவறான புரிதல்களை விளக்கியமைக்கு பாராட்டுரைகள்.

  ஒன்றே ஒன்றை நிணைவில் வைத்துக்கொண்டு இல்லத்தை தொடருங்கள்.

  பொதுவாக சரித்திரம் என்றால் வெறும் எலும்புக்கூடு. ஒவ்வொருவருக்கும் பிடித்த அலங்காரங்களைச் சேர்ந்து அதனை ஒரு உருவமாக்க முயற்சிப்பார்கள். ஆனால் தொடரவேண்டும் என்ற எண்ணம் உருவான போதே கசடு கசப்பு இனிப்பு புகழ்ச்சி என்று எல்லாவற்றையும் தரம் பிரித்து வைத்து விட்டேன். மிஞ்சியதை கொஞ்சம் புரியும் நடையில் எழுதுவதே என் இப்போதைய பணி.

  மற்றவர்களை விட பிரபாகரன் நல்லவரா ஏன்?
  மற்றவர்களை விட பிரபாகரன் மோசமா ஏன்?
  சாத்வீக தலைவர்கள் ஏன் தோற்றார்கள்?
  இந்தியாவிற்கு ஏன் அக்கறை?
  இந்தியா குறித்த பார்வையும், பரிதாபமும்?

  இது வரை பயணித்த பாதை இது? இனிமேல் பயணிக்கும் பாதையும் இதைப்போன்ற ஒரு கட்டமைப்பில் தான் வைத்துள்ளேன்.

  எவரையும் திட்ட வேண்டும் என்பதோ? திகட்டும் அளவிற்கு பாராட்டுரை வழங்க வேண்டும் என்பதோ என் நோக்கமும் அல்ல. அப்படி கொண்டு சென்றால் சிலரை திருப்திபடுத்த முடியுமே தவிர வாழ்ந்து கொண்டுருக்கும், வாழ்ந்து புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்கள் மனதிற்குள் நிணைப்பார்கள் " இதுவும் கடந்து போகும்"

  இன்று வரைக்கும் கோர்வையாக மொத்த புரிதல்களை இந்த இலங்கை குறித்து எவரும் கொண்டு வரவில்லை என்பதோடு அதுவே இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டுருப்பதை என்னுடைய இந்த உழைப்பு இன்று இல்லாவிட்டாலும் என்றாவது பலருக்கும் உதவியாய் இருக்கும் .

  ReplyDelete
 32. தமிழ்மகன்January 24, 2010 at 10:37 AM

  எல்லாம் தெரிந்தும் ஏன் இந்தியா இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு துனை போனது
  கூப்பிடு தூரத்தில் நீங்கள் 6 கோடி பேர் இருந்தும் ஏன் எங்களை காப்பாற்ற வரவில்லை
  எங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டு தமிழரை தமிழர் என்று சொல்ல முடியாது
  வெறும் கிணற்று தவளைகள் தான்
  இது ஒரு ஈழத்தமிழ்மகனின் குரல்

  ReplyDelete
 33. இந்தியாவில் உள்ள தலைவர்களுக்கோ,படித்தறிவுமிக்க அறிவுஜீவிகளுக்கோ,அரச அதிகரிகளுக்கோ ஈழத்தமிழர்
  பிரச்சினையின் அரிச்சுவடியே தெரியாதவர்கள்.இவ்ர்களு
  க்குப்புரியவைக்கநான் ஒருபதிவு இட்டேன்.அதன்சுட்டி:-
  http://theveshblog.blogspot.com/2009/08/blog-post_
  08.html

  ReplyDelete
 34. நன்றி தமிழ்மகன்,

  இந்த விமர்சனத்திற்கு என்னால் மறுக்கவும் முடியாது. இல்லை என்று ஒதுக்கவும் முடியாது. தமிழ்உதயம் தொடக்கத்தில் இது போன்ற ஒரு விமர்சனத்திற்கு தினமணியில் வந்த ஒரு விமர்சனத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.

  ReplyDelete
 35. புலிகள் அழிவுக்கு காரணம் புலிகள்தான் தம்மை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவத்தில் அவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமா?, 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணதில் தான் உண்டு தன் வியாபாரம் உண்டு என்று இருந்த அப்பாவி முஸ்லிம் தமிழர்களை துப்பாக்கி முனையில் அவர்கள் பல பல நுற்றாண்டு காலமாய் வாழ்ந்த வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாவற்றயும் போட்டுவிட்டு உடுத்திய துணி 500 ருபாய் பணம் மட்டுமே அனுமதி என்று நான்கு மணி நேரத்தில் லாரிகளில் வைத்து விரட்டியது யார்? இரக்கமே இல்லாமல் குழ்ந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் நோயாளிகள் என்று பார்க்காமல் விரட்டியது யார்? குழ்ந்தைகள் கழுத்தில் கிடந்த சங்கிலி, வளையல் நகைகளை கொரடை கொண்டு வெட்டி எடுத்தவர்கள் யார்? கொள்ளை அடித்த பொருள்களை புத்த கோவிலில் வைத்து விற்றவர்கள் யார்? சிங்களவனா? இல்லையே புலிகளைதானே அது மட்டுமா கிழக்கு மாகாணத்தில் வாசித்த லட்சகணக்கான முஸ்லிம் தமிழர்களை விரட்டி அவர்களை அகதியாய் ஆக்கியது, காலையில் பள்ளிவாசலில் தொழுது விட்டு வந்த அப்பாவி முஸ்லிம்களை குருவி சுடுவது போல் சுட்டு கொன்றது என்று சொல்லிக்கொண்டே போகலாம், நரேந்திர மோடியை விட ஒருபடி மேலே போய் முஸ்லிம்களுக்கு அநீதி இளைத்தது புலிகள்தானே இந்த விசயத்தில் பிரபாகரன் ஓர் இந்துமதவெறியர் போல் நடந்த இருக்கின்றார் ஆனால் அவரை ஆதரிப்பது எல்லோரும் இந்து மத எதிர்பாளர்கள் இதுதான் வேடிக்கை,
  அப்பாவிகளை கொலை செய்வதில் ராஜபக்சேவுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை பிரபாகரன், எத்தனை தமிழர்கள், மாற்று கருத்து உள்ள அரசியல் தலைவர்கள், சகோதர இயக்க தலைவர்கள், சொந்த இயக்கத்தை சேர்த்தவர்கள் முஸ்லிம்கள், அப்பாவி சிங்களவர்கள் சொல்லிக்கொண்டே போகலாம், 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பொழுது 40 கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்களும் போலீஸ் இறந்தர்களே அவர்கள் தமிழர்கள் இல்லையா? இவர்கள் எல்லோரும் இந்திய அமைதி படையுடன் சேர்ந்து போய் தமிழ் பெண்களின் கற்பை சூறையாடி விட்டு வந்தவர்களா? புலிகளுக்கு உதவ போய் அவருக்கே தெரியாமல் மிகபெரிய சதியில் நளினி என்ற அப்பாவி 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுவதற்கு காரணம் புலிகள்தானே,
  புலிகளுக்கு கலைஞர் துரோகம் செய்துவிட்டார் என்று சொல்லுகின்றர்களே புலிகள் மட்டும் கலைஞர்க்கு துரோகம் செய்யவில்லயா? 1989 இல் புலிகளுக்கு உதவ போய் ஆட்சியை இழந்தார், புலிகளை ஆதரித்த ஒரே காரணத்துக்காக ராஜிவ் கொலை பழியை சுமந்தார், அதனால் தானே 1991ஆம் ஆண்டு தி,மு, க படுதோல்வியை சந்தித்தது, ராஜுவை கொலை செய்தால் அந்த பழி நம்மை ஆதரிக்கும் தி மு கதிற்கு போய் விழும் என்று ஏன் பிரபாகரன் சிந்திக்கவில்லை?, எல்லோரும் தமிழர்கள் என்கின்றர்களே இலங்கைஇல் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு பிரச்சினை வந்த பொழுது புலிகள் என்ன உதவி செய்தார்கள்? தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அது எல்லோருக்கும் பொருந்தும் ஆனால் மற்றவர்களுடை பிரச்னை அவரவர்களுக்கு, 1985 களில் எல்லோரையும் போல் புலிகளை ஆதரித்தவன்தான் நான், இப்போது என்னை இப்படி எழுதுவதற்கும் காரணம்மும பிரபாகரன்தான், அப்பாவி இலங்கை தமிழர்கள்தான் பாவம் ஒருபக்கம் புலிகளும் மறுபக்கம் இலங்கை ராணுவத்தாலும் வாழ்விழந்து நிற்கின்ற்கள்,

  ReplyDelete
 36. alavoudine said...

  முடிந்தால் என் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.