Thursday, March 05, 2020

வேலுப்பிள்ளை பிரபாகரன்

இலவச கிண்டில் புத்தகத்தின் விலை 0.00 என்று இருக்கும். இதில் பை நவ் என்பதை க்ளிக் செய்வதை விட்டுவிட்டு, ரீட் ஃபார் ஃப்ரீயை அழுத்துவது வெட்டி முட்டாள்தனம். அப்படி அழுத்தினால் இப்படி கார்டு கேட்பான். கிண்டில் ஆப்பை டவுன்லோட் செய்தபின் பை நவ் அழுத்தினால் தானே டெலிவராகிவிடும் (விமலாதித்த மாமல்லன்)

*********

06.03.2020 மதியம் 1.30 (இந்திய நேரம்) அமேசான் தளத்தில் ஈழம் - படிக்க மறந்த குறிப்புகள் (1000 வருட ஈழத்தின் வரலாறு, ஈழ அரசியல்வாதிகள், பிரபாகரன், சர்வதேச அரசியல், இறுதிக்கட்டப் போர் வரைக்கும்) எளிய இயல்பாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்ட மின்னூலை இலவசமாகத் தரவிறக்கம் செய்து வாசிக்க முடியும். உங்கள் அலைபேசியில் கிண்டில் செயலியைத் தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் போதுமானது. அமேசான் கிண்டில் புத்தகங்களை இலவசமாக வாசிக்க முடியும். ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது


https://play.google.com/store/apps/details?id=com.amazon.kindle&hl=en_IN


**********************


எல்லோருக்கும் இயல்பாக எழக்கூடிய கேள்வி தான். நமக்கான அடையாளம் எது? எதனை இங்கே விட்டுச் செல்லப் போகின்றோம்?  

பதட்டப்படவே தேவையில்லை. "வாழ்ந்தவர்கள் கோடி. மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்ற பாடல் வரிகளை நினைத்துக் கொள்ள வேண்டியது தான்".

வளைகுடா நாட்டில் இருக்கும் தம்பி குமார் சில நாட்களுக்கு முன் "அண்ணா உங்கள் ஈழம் புத்தகத்தை என் அறை நண்பர் பிரிண்ட் எடுத்துப் படிக்கின்றார்" என்று தகவல் அனுப்பி இருந்தார்.

கடந்த சில வருடங்களாக ஈழம் பக்கமே செல்வதில்லை.  அது சார்ந்த செய்திகள் வந்தால், படித்தால் கடந்து சென்று விடுவேன்.  காரணம் பத்து வருடங்களுக்கு மனநிலை பாதிக்கப்படும் அளவிற்கு உள்ளே நுழைந்து வெளியே வர நிறையவே கஷ்டப்பட்டேன்.  ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் என்று இலவசப் புத்தகத்தை வெளியிட்டு விட்டு என் கடமை முடிந்தது என்று ஒதுங்கி விட்டேன்.

அமேசானில் அந்தப் புத்தகத்தை ஈழம் - படிக்க வேண்டிய வரலாற்றுக் குறிப்புகள் என்று சிலவற்றைச் சேர்த்து ஏழெட்டு மாதங்களுக்கு முன் சேர்த்து விட்டு அதனையும் மறந்து விட்டேன்.

குமார் மூலம் சோதனை வந்தது.  

மீண்டும் உள்ளே நுழைந்து ஒவ்வொன்றாகப் பிரித்து, சேர்த்து, செம்மைப்படுத்தி, ஏற்கனவே எழுதி வைத்திருந்த பலவற்றைச் சேர்த்து, இறுதிக்கட்டப் போரில் நடந்த அவலங்கள், பிரபாகரன் குறித்து கடைசிக் கட்ட தகவல்கள் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து இரண்டு முழு இரவுகளை இதற்காக அர்ப்பணித்து முடித்த போது தெளிவு பிறந்தது.

முக்கியமான ஆவணத்தை ஏன் இத்தனை நாளும் கண்டு கொள்ளாமல் இருந்தோம் என்ற எண்ணம் உருவானது.

பத்து வருடங்களுக்கு முன் என் தளம் முழுவதும் ஈழத்தமிழர்களால் நிரம்பி வழிந்தது. இன்று அவர்களே பலவற்றை மறந்து விட்டிருக்கக்கூடும்.  ஆனால் வரலாற்றில், வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது இல்லை. எல்லாமே அனுபவங்கள், பாடங்கள், படிப்பினைகள் தான்.

நிச்சயம் இந்தப் புத்தகம் பலன் உள்ளதாக இருக்கும்.  ஈழ அரசியல், ஈழ அரசியல்வாதிகள், பிரபாகரன், விடுதலைப்புலிகள், இந்திய அமைதிப் படை, சர்வதேச அரசியல், இறுதிக்கட்டப் போர், முள்ளிவாய்க்கால் அவலக் காட்சிகள், இறுதிக்கட்ட நிகழ்வுகள் அனைத்தையும் முதல் முறையாக ஆவணப்படுத்தி உள்ளேன்.

நாளை இந்திய (06.03.2020) மதியம் 1.30 மணிக்கு அமேசானில் (இலவசமாக) பெற முடியும். பிரிண்ட் வடிவில் கொண்டு வந்தால் கட்டாயம் 400 ரூபாய்க்கு வைக்குமளவிற்குத் தகவல்கள் உள்ளது.  அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது. இணையம் என்றால் நிச்சயம் உலகம் முழுக்க சென்று சேர்ந்து விடும். 

நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவும். நன்றி.

நான்கு புத்தகங்கள் இங்கே நான் வாழ்ந்ததற்கான அடையாளம் என்று கருதுகிறேன்.

அடுத்த தலைமுறைக்கும் தேவைப்படும் என்றே கருதுகிறேன்.

டாலர் நகரம்  - ( திருப்பூர் குறித்து கழுகுப் பார்வை)

பஞ்சு முதல் பனியன் வரை -  ( திருப்பூர், ஆயத்த ஆடைத் தொழில் உள்ளும் புறம், ஏற்றுமதி, தொழிலாளர்கள், நிறுவனங்கள் குறித்து)

5 முதலாளிகளின் கதை  - ( ஆயத்த ஆடைத் தொழிலில் ஏற்றுமதி செய்யும் முதலாளிகள் குறித்து)

ஈழம் - படிக்க மறந்த வரலாற்றுக் குறிப்புகள்.
3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நண்பர்களுக்கு அனுப்பி விட்டேன்...

ஜோதிஜி said...

நன்றி தனபாலன்.

Unknown said...

Do this hack to drop 2lb of fat in 8 hours

At least 160 000 men and women are hacking their diet with a simple and secret "liquid hack" to lose 2 lbs each and every night while they sleep.

It's easy and it works on everybody.

You can do it yourself by following these easy steps:

1) Take a glass and fill it half full

2) And now follow this amazing HACK

and be 2 lbs thinner the next day!