Tuesday, March 03, 2020

அள்ளிக் கொண்டு போவார்கள்.

வருமான வரிச் சோதனை என்பது அரசியல் சார்புடையது, சார்பற்றது என்பதற்கு அப்பாற்பட்டு அந்தத் துறை இயங்கும் விதங்களைத் தணிக்கையாளர் நண்பர் சொன்ன போது வியப்பாகவே இருந்தது.

பழநி பஞ்சாமிர்த முதலாளியின் நிறுவனங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகள் மற்றும் அதற்காக அதிகாரிகள் கடைப்பிடித்த வழிமுறைகளைக் கேட்ட போது மனதிற்குள் கிலியடித்தது.

குறிப்பிட்ட தகவல்கள், வந்து சேரும் தகவல்கள், பத்திரிக்கை செய்திகள், அறிவிப்புகளிலிருந்து திரட்டப்படும் தகவல்கள் என்று நான்கு திசைகளையும் பார்த்து, சோதித்து, படிப்படியாக வட்டமாக்கி, வட்டத்தைச் சுருக்கிக் கொண்டே வருதல் என்பது முதல்படி.

நேரிடையான களப்பணி இரண்டாவது படி.

மறைமுகமாகத் துப்புத் துலக்குதல், இதற்காகக் குழுவினர் பல மாதங்களாக சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று ஆதாரப்பூர்வமான தகவல்களைத் திரட்டுதல் என்பது மூன்றாவது படி.

நான்காவது படியாக அதிகாரவர்க்கத்தின் உச்சத்தின் பார்வைக்குச் செல்கின்றது. அதிகாரவர்க்கம் எப்படிச் செயல்படுகின்றார்கள் என்பது தான் பொதுவில் விமர்சனத்திற்கு உள்ளாகின்றது. அதன் பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகள் மறைபொருளாக மாறுகின்றது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று எளிதான தத்துவம் மூலம் மடை மாற்றப்படுகின்றது.

கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியனைத் திரை உலகத்தில் வெறுக்காதவர்கள் எவருமே இருக்க முடியாது. ஆனால் அவரை விரும்பித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் இருக்கின்றார்கள். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தென்னக ராஜாதி ராஜா தான்.

ஏஜிஎஸ் நிறுவனம் ட்விட் தான் இந்த வருமானவரிச் சோதனைக்கு அடித்தளம். சும்மா கிடங்கை ஊதிக் கொடுத்துள்ளார்கள்.

தான் சம்பாரிக்கும் மொத்தத் தொகையில் 30 சதவிகிதத்தை அரசாங்கத்திற்குக் கொடுத்தாக வேண்டும் என்பதனை எம்ஜிஆர் முதல் இன்றைய விஜய் வரைக்கும் கடைப்பிடிக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை என்றாலும் இன்று வரையிலும் இது போன்ற உளுத்துப் போன சட்ட வரைவுகளை எவரும் மாற்ற முன்வருவதே இல்லை.

நடிகர்களுக்கு அறக்கட்டளை சேவை பிடிக்காது. ஆனால் அறிவுரை சொல்ல மட்டும் பிடிக்கும்.

அரசாங்கத்திற்கு பிரபல்யம் பொதுவிடங்களில் அளவுக்கு மீறிப் பேசக்கூடாது.
படம் ஓட எதையாவது பேசித்தான் ஆக வேண்டும் என்பது நடிகர்களுக்குப் பிடிக்கும்.

சிக்கல் ஒரு பக்கமில்லை. ஒவ்வொரு அடியிலும் சிக்கல் தான்.

விஜயகாந்த் க்கு ஒரு பிரேமலதா.
விஜய்க்கு ஒரு சந்திரசேகர்.

அள்ளிக் கொண்டு போவார்கள்.
இரு பக்கமும் அமைதியாக இருந்து விடுவார்கள்.

காரணம் இது ஜனநாயக நாடு.




22 டிசம்பர் 2016

கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பிரமுகர் கரூர் அன்புநாதன் வீட்டில் வரிமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அதே தேர்தலின் போது திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் 570 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. 

அன்பு நாதன் வீட்டில் நடந்த சோதனைகளின் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்தனர்.

இதே போன்று முன்னாள் மேயர் சைதை துரைசாமி வீடு, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

அதே நாளில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன்ராவின் அலுவலகம், அவருடைய வீடுகளில் சோதனை நடந்தது.
 
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தொழிலதிபர் சேகர்ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது புதிதாக அச்சடிக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் கோடிக் கணக்கில் கைப்பற்றப்பட்டது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.

அண்மையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி  சோதனை நடத்தப்பட்டது. அப்போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

அதே போன்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீட்டிலும் அப்போது சோதனை நடத்தப்பட்டது.

அண்மையில் ‘மெர்சல்’ பட சர்ச்சை பூதாகரமாக வெடித்திருந்த நேரத்தில் நடிகர் விஷால் இல்லம் மற்றும் அவரது அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகள் இன்னும் வருமான வரித்துறை விசாரணையிலேயே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

9 comments:

சிகரம் பாரதி said...

நல்ல பதிவு. சிறப்பு. தொடருங்கள், தொடர்வோம்...!

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஒன்பது வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது வலைத் தளத்தில் இறுதியாக வெளியான ஐந்து பதிவுகள் ஐந்தும் ஐந்தும் – 03.03.2020 எனும் தலைப்பில் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

ஜோதிஜி said...

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். உங்களைப் பற்றியும் உங்கள் வலைத்தளம் பற்றியும் ஒரு பதிவை நீங்களே விரிவாக எழுதி எமது valaioalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

நன்றி தலைவரே. நம்மளப் பத்தி ஒரு அறிமுகமும் வேண்டாம் தல. அது தான் தெளிவாக என் தளத்தை இணைத்து இருக்கீங்களே? அதுவே போதும். விரும்பியவர்கள் படிக்கட்டும். உங்கள் பணிக்கு என் நல்வாழ்த்துகள். எங்கள் வலைசித்தர் தான் எங்களுக்கு குரு. அவரைப் பிடிங்க. மோடி குறித்து சிறுகுறிப்பு வரைக என்று கேட்டு எழுதிப் போடுங்க. கூட்டம் அள்ளும்.

திண்டுக்கல் தனபாலன் said...

// நடிகர்களுக்கு அறக்கட்டளை சேவை பிடிக்காது. ஆனால் அறிவுரை சொல்ல மட்டும் பிடிக்கும்... //

சூப்பரு... ஆனால் சூப்பர் (*) சங்கிக்கு வரு"மானமும்" கிடையாது... வரித்துறையும் கிடையாது...

இதுவல்லவோ ஜனநாயக நாடு...!

G.M Balasubramaniam said...

ஆனால் சோதனைகளின் விளைவுகள்மறைக்கப்பட்டுவிடும் அல்லது மறக்கடிக்கப்பட்டு விடும் ஒண்ணுமே புரியலே

ஜோதிஜி said...

எதிர்கால முதலமைச்சரை ஏதாவது பேசினீங்க தேடி வந்து அடிப்போம். சட்டத்தின்படியே அவர் நடக்கின்றார். நாங்கள் நம்புகின்றோம்.

ஜோதிஜி said...

உங்களுக்குப் புரிந்தால் இரவு தூக்கம் வராது. பரவாயில்லையா?

திண்டுக்கல் தனபாலன் said...

சிறுகுறிப்பு வரைக தானே...? இதோ :-

வருகின்ற எந்த வருடத்திலும், நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நள்ளிரவு முதல் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படும்...!

புதிய சமூக வலைத்தளங்கள் :

1) moditter : ஜெய் ஸ்ரீ ராம் என்று modit செய்பவர்களுக்கு மட்டும், App இலவசம்...

2) Modibook : தாமரை மலர்ந்தே தீரும் என்று ஹிந்தியில் சொல்பவர்களுக்கு மட்டும், App இலவசம்...

அப்படி செய்யாதவர்களுக்கு 52% GST உண்டு... அதன்பின், முக்கியமாக ஒரு வரி எழுத வேண்டும் என்றாலும், உள்துறையின் உத்தரவை பெற்று வெளியிட வேண்டும்... உண்மையை, நியாயத்தை, நேர்மையை... சுருக்கமாக அறவழி நடப்பவர்களுக்கு "Detention Camp" உங்களை அன்புடன் வரவேற்கிறது...!

சிறு குறிப்பு : மற்ற அனைத்து சமூக வலைத்தளங்களும் விரைவில் மாற்றி அமைக்கப்படும்...!

பெரும் குறிப்பு : Computer என்பது ஒழிக்கப்பட்டு, Modiuter என்று தொடங்கப்படும்... அதற்குமுன் முக்கியமாக Amazon மாற்றி அமைக்கப்பட்டு, Modizon விரைவில் அறிமுகம் செய்யப்படும்...!

ஜோதிஜி said...

52% GST உண்டு.???????

Unknown said...

If you're trying hard to lose fat then you need to start following this totally brand new personalized keto diet.

To create this keto diet service, licensed nutritionists, fitness trainers, and top chefs joined together to develop keto meal plans that are effective, suitable, economically-efficient, and fun.

Since their grand opening in January 2019, 100's of clients have already transformed their figure and health with the benefits a smart keto diet can provide.

Speaking of benefits: clicking this link, you'll discover eight scientifically-certified ones provided by the keto diet.