Friday, March 06, 2020

இப்போது முதல் இலவசமாக

1990க்கு பிறகு தான் "அவர்" இந்தியாவிற்கு அறிமுகமானார். தயாரிப்பாளர் திரு. பிவி நரசிம்மராவ். இயக்குநர் திரு. மன்மோகன்சிங் அவர்கள்.

அவர் தான் உண்மையான "உலக நாயகன்". ஆனால் அவரை "திருநிறைச் செல்வன் சர்வதேச அரசியல்" என்று அழைத்தனர். இந்தியாவின் பார்வை மாறத் தொடங்கியது. மாற்றங்களும் இங்கே உருவாகத் தொடங்கியது. திருநிறைச் செல்வனைச் சிலர் ஆரோக்கியத்துடன் வளர்த்தனர். அவர்களில் முக்கியமான மூன்று பேர்களை உங்களுக்கு அடையாளம் காட்ட முடியும்.

International Monetary Fund IMF (சர்வதேச நிதியம்)
World Trade Organization (WTO) உலக வணிக அமைப்பு
General Agreement on Tariffs and Trade (GATT) கட்டணங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பொதுவான ஒப்பந்தம்.

சுருக்கமாகச் சொன்னால் வணிகம், வணிக நலன், லாபம்.

ஆனால் இதனை வேறு விதமாக அழைத்தனர். உலகளாவிய பார்வை. உலகமே ஒரு கிராமம். வர்த்தகத்திற்குத் தடையே இல்லை. தடைகளை உடை. வளர். வாழ். வாழ வை என்றும் அழைத்தனர்.
மேலே சொன்ன ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டையும் வளர்க்க, வாழ வைக்கவும் செய்தது. முடக்க, முன்னேற உதவவும் செய்தது. உரிமைப் போராட்டங்களை நசுக்கவும் செய்தது. தீவிரவாதி என்ற பட்டத்தையும் அளித்தது. அபாயகரமான ஆயுதங்கள் வைத்திருக்கின்றார் என்று மிரட்டிப் பார்க்கவும் முடிந்தது.

ரவுடி என்ற பட்டத்தை பணக்காரனுக்கும் பணம் இல்லாதவனுக்கும் சமூகம் அளிக்கும் வித்தியாசமான அங்கீகாரம் போல.

தனிப்பட்ட நாடுகளின் நலன்களுக்காக மட்டும் இங்கே இறந்தவர்களின் பட்டியல் என்பது மிக நீளமானது. அதில் முதன்மையானது இலங்கை. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட அதிர்ஷ்டசாலி மகிந்த ராஜபக்சே. பழம் நழுவி வாயில் விழாமல் அவர் தொண்டைக்குழிக்குள் விழுந்தது. இந்தக் கதையின் மூலம் இழந்தவர்கள், இறந்தவர்கள், அனாதையானவர், முடங்கிப் போனவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், விதவையானவர்கள் போன்ற எதையும் பற்றி இங்கு இப்போது பேசமுடியாது. பேசவும் கூடாது.

லெஷ்மன் கதிர்காமர் என்ற தமிழர் விடுதலைப்புலிகளைச் சர்வதேசச் சமூகத்திடம் பிரிக்க உழைத்தார். அவரின் புத்திசாலித்தனத்தை அவரை நூறு சதவிகிதம் நம்பிய சந்திரிகா பயன்படுத்திக் கொள்ளக் காலம் அனுமதிக்கவில்லை. ஒற்றைக்கண் பெண்மணியாக மாற வேண்டியதாகப் போனது. தங்கள் குடும்பம் வளர்த்த கட்சியையும் தாரை வார்க்க வேண்டியதாக விட்ட சோகம் பெருங்கதை.

இன்று சராசரி இலங்கை வாழ் பெண்மணியாக மாறி கோத்தபய வரைக்கும் வந்து நிற்கின்றது. காரணம் இப்போது ஜனநாயகம் மூலம் தமிழர்களுக்கு அனைத்து விதமான உரிமையும் கிடைத்து அங்கே பாலும் தேனும் ஓடிக் கொண்டிருக்கிறது.

காலம் காலமாக, மாறாத, மாற்ற முடியாத நம்பிக்கைகள் நம்மை இங்கே உயிர்ப்புடன் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

சிலருக்குக் கிடைக்கும் பட்டங்கள் காலப் போக்கில் கேலிக்குரியதாக மாறிவிடும். ஆனால் சிலரை மட்டுமே காலத்திற்கு அப்பாற்பட்டு நம்பக்கூடிய ஒவ்வொருவர் மனதிலும் வாழ வைக்க முடியும். வாழ்ந்தவரை, வாழ்ந்து கொண்டிருப்பவரைப் பற்றி முழுமையாக அறிய...

#வெள்ளிக்கிழமைவாசிப்பு
#இப்போதுமுதல்இலவசமாக
#முழுமையானஈழசரித்திரகுறிப்புகள்
#வேலுப்பிள்ளைபிரபாகரன்
#Amazon

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பு...

Unknown said...

As stated by Stanford Medical, It is really the SINGLE reason women in this country get to live 10 years longer and weigh 42 pounds lighter than we do.

(And actually, it really has NOTHING to do with genetics or some secret diet and EVERYTHING about "how" they are eating.)

BTW, What I said is "HOW", not "WHAT"...

Tap on this link to find out if this quick quiz can help you release your true weight loss potential