Friday, March 13, 2020

சமூக நீதி

இது நடந்தது 21 வருடங்களுக்கு மேல் இருக்கும். துல்லியமாகச் சொல்லப் போனால் பாதிரியார் எரித்துக் கொல்லப்பட்டு மிகப் பெரிய கலவரம் ஒரிசா மாநிலம் (1999 ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர்) முழுக்க நிகழ்ந்தது.

அப்போது தற்போதைய ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் (பெரும்பாலும் பழங்குடியினர்) வாழ்ந்த குடும்பங்கள் கொத்து கொத்தாக இடம் பெயர்ந்தனர். குறிப்பாக அங்குள்ள ஒவ்வொரு சர்ச் ம் அடைக்கலம் கொடுத்தது. பாதுகாப்பு வழங்கியது.



அப்போது திருப்பூரில் உள்ள (இப்போது வளர்ந்த நிறுவனம்) நிறுவனம் இடைத்தரகர்கள் மூலம் அவர்களைத் தொடர்பு கொண்டது. சர்ச்சுக்கு நிதி உதவி, பாதிரியாருக்கு நிதி, அவருக்குப் பின்னால் உள்ளவர்களுக்கு நிதி கடைசியாக இடைத்தரகர்களுக்கு நிதி என்ற வட்டத்தை முழுமைப்படுத்தி 18 முதல் 25 வயது வரைக்கும் பெண்களைக் கொத்து கொத்தாக இங்கே கொண்டு வந்து சேர்த்து பயிற்சி அளித்து தங்களின் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பயன்படுத்திக் கொண்டனர். ஒரு நிறுவனம் மட்டும் சுமார் ஆயிரம் பேர்களை எடுத்துக் கொண்டது.

தங்குமிடம், சாப்பாடு, மாதச் சம்பளம், ஐந்து வருட ஒப்பந்தம். ஒப்பீட்டளவில் அவர்கள் அங்கே வாழ்ந்த வாழ்க்கைக்கு இதுவொரு சொர்க்கம். இதே போலப் பல பேட்ச் வந்து கொண்டேயிருந்தது. வேலை புரிந்த தொழிலாளர்கள் அடைந்த பலனை விட நிறுவனமும் இடைத்தரகர்களும் அதிக லாபம் அடைந்தனர்.

கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அருகே உள்ள பெரிய நிறுவனத்தில் மாலை வேளையில் கூத்தும் கும்மாளமும் கொண்ட்டாமுமாக இருக்க என்னவென்று விசாரித்துப் பார்த்த போது கெட் டூ கெதர் போல பார்ட்டி நடத்திக் கொண்டிருந்தனர். அதாவது பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களை ஒரே இடத்தில் சேர்த்து உணவு கொடுத்து, கலந்துரையாடல் உருவாக்கி, மகிழ்ச்சிப்படுத்தி அனுப்பி வைப்பது போன்ற நிகழ்வினைப் பார்த்தேன்.

ஆனால் இவை அனைத்தும் மற்ற மாநிலங்களை விட ஒடிசா மாநில அரசாங்கம் தற்போது அழகாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். முன்பு போல எருமைமாடுகள் போல பத்திக் கொண்டு வர முடியாது.

தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் ஒடிசா மாநிலத்தில் பயிற்சி பெற்று தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் வேலைக்குப் பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெறுகின்றனர். சென்னை மற்றும் திருப்பூரில் ஒடிசா அரசாங்கம் மைக்ரேசன் உதவி மையம் என்ற அலுவலகத்தை உருவாக்கி உள்ளனர். வரக்கூடிய ஒவ்வொரு ஒடிசா குடிமகனுக்கும் தேவையான உதவிகள் செய்து அவர்களை நிலைப்பெற வைக்கின்றனர்.

மத்திய அரசின் பல திட்டங்களை அப்படியே தத்தெடுத்துக் கொள்கின்றார்கள். Programme implementing agencies (PIAs) மூலம் குறிப்பிட்ட தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளிக்கின்றனர். இன்றைய சூழலில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் அளிப்பதில் (skilled employees) and employers முன்னிலையில் உள்ளனர். இது தவிர இரண்டு பிரிவில் சிறந்த சாதனையாளர்கள் என்ற 2017-18. விருதைப் பெற்றுள்ளனர்.

The Rural Self Employment Training Institute (RSETI), Bargarh was recognised as one of the 8 best RSETIs

சீனர்கள் 40 வருடத்திற்கு முன்பு எங்கிருந்து தங்கள் வளர்ச்சியைத் தொடங்கினார்களோ அதனை தற்போது ஒடிசா அரசாங்கம் தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றது. மீண்டும் எட்டாவது முறையாக பிஜுபட்நாயக் மகன் நவீன் பட்நாயக் கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வெளிப்படையான நிர்வாகம் எளிய மக்களை மேலே கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கைக்கு இப்போது ஒடிசா அரசாங்கத்தை எடுத்துக் கொள்ளலாம்.

ஊழலற்ற நிர்வாகம் மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருளாதார வளர்ச்சியை, வாழ்க்கை வசதிகளை அத்துடன் சமூக நிதியையும் வழங்கிட முடியும்.



கடன் பட்டார் நெஞ்சம் போல...

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சீனர்கள் 40 வருடத்திற்கு முன்பு எங்கிருந்து தங்கள் வளர்ச்சியைத் தொடங்கினார்களோ அதனை தற்போது ஒடிசா அரசாங்கம் தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றது

போற்றுதலுக்கு உரிய முயற்சி ஐயா
போற்றுவோம் வாழ்த்துவோம்

Yaathoramani.blogspot.com said...

அறியாத தகவல் அனைவரும் அறிய வேண்டிய தகவல்.பகிர்ந்து அறியச் செய்தமைக்கு வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான தகவல்...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்.

ஒடிசாவில் இன்னமும் வறுமை நிலை தான் ஜோதிஜி. பல இடங்களில் வறுமை - அதனால் வெளி மாநிலங்களில் வேலைக்கு அதிகம் பேர் வருகிறார்கள் - தில்லியில் இருக்கும் Plumber-கள் பலரும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் நிறைய நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள். முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே அனைவருடைய ஆசையும்.