வாழ்க்கை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான பாடங்கள் நடத்திக் கொண்டே இருக்கிறது. அதன் மூலம் வித்தியாசமான அனுபவங்களும் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.
பார்வையாளர் போலவே பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். கூடவே அதனை இங்கே பதிவு செய்து விட வேண்டும் என்பதனை கடமையாகவும் வைத்துள்ளேன்.
நெருங்கிய நண்பர் பேசும் போது இதனைத் தவறாமல் குறிப்பிடுவார்.
"கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே" என்பதன் உண்மையான அர்த்தம் "கடமையைச் செய் பலனில் பற்று வைக்காதே" என்பார்.
இதனை உணர நமக்கு வாழ்க்கையின் பிற்பகுதி தான் சரியாக இருக்குமோ? என்று தோன்றுகின்றது.
திருப்பூரில் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 2013 அன்று நடந்தது. அதற்குப் பிறகு அந்தப் புத்தகம் சார்ந்த எந்த சந்தைப்படுத்துதல், விழாக்களில் கலந்து கொள்ளுதல், விளம்பரப்படுத்திக் கொள்ளுதல் போன்ற எதிலும் கவனம் செலுத்தவில்லை.
