பெரியோர்களே... தாய்மார்களே....
நமக்குத் தெரிந்ததைப் பற்றிப் புனைவு அபுனைவு என்று எந்தப் பார்வையிலும் எழுத முடியும் என்கிற ரீதியில் இருக்கும் ஒரே விசயம் திருப்பூர். தொழில்,
மனிதர்கள், சமூக அமைப்பு, சிறு மீன்கள், விலாங்கு மீன்கள், திமிங்கிலம் என்று சொல்ல ஆயிரம் கதைகள் இங்குண்டு.
மனிதர்கள், சமூக அமைப்பு, சிறு மீன்கள், விலாங்கு மீன்கள், திமிங்கிலம் என்று சொல்ல ஆயிரம் கதைகள் இங்குண்டு.
கொங்கு பாஷை மறந்து வடகிழக்கு மாநில பாஷை வரைக்கும் திருப்பூரை மாற்றியுள்ளது. இங்குள்ளவர்கள் உருவாக்கிய சட்டதிட்டங்களை வந்து இறங்கிய ஜனத்திரள் மாற்றிக் கொண்டேயிருக்கிறது. உசிலம்பட்டி கருப்பும் மணிப்பூர் வெளுப்பும் ஒன்று சேர்ந்து புதிய தலைமுறையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது.
இந்தப் பாதை எங்கே செல்லும்? என்பது எனக்குத் தெரியாது?
ஆனால் சாதி மற்றும் பணம் கொண்டு உருவாக்கப்பட்ட சாட்டாம்பிள்ளைத்தனம் இன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. இன்னமும் மாறும்.
எவர் தப்பிப் பிழைக்கப் போகின்றார்கள்? எப்படி இங்குள்ள சமூகம் தன்னை தக்க வைத்துக் கொள்ளப் போகின்றது? என்பது புரியாத புதிராக உள்ளது.

வலையில் எழுதத் தொடங்கிய போது சோர்ந்து விடாதே என்று என்னை அரவனைத்து என் பலகீனங்களை பொறுத்து இன்று வரையிலும் ஆதரிக்கிக்கும் இராஜராஜன் ஒரு பக்கம்.
இது போன்ற சூழலில் புத்தக ஆசை என்பது ஐந்து சதவிகிதம் இருந்தது. ஆனால் சுவிட்சர்லாந்தில் இருந்து தமிழகம் வந்து இந்தக் கதை உலகம் முழுக்க சென்றே ஆக வேண்டும் என்று வடிவமைப்பு முதல் முதலீடு வரைக்கும் பார்த்துப் பார்த்து தன் குழந்தைகளைக் கவனிப்பது போலச் செய்து வெளிவரச் செய்த 4 தமிழ் மீடியா திரு மலைநாடன் அவர்களின் பங்களிப்பு பற்றி வெறுமனே வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.
அவர் என் வாழ்நாள் முழுக்க தாயுமானவன்.
இன்று தொழில் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுக்குக் கூட அவர் தூரத்திலிருந்து கொண்டு உதவுகிறார்.

இன்று கலைஞர் செய்திப்பிரிவு தொலைக்காட்சியின் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் திருமாவேலன் டாலர் நகரம் புத்தகத்திற்கு வழங்கிய விமர்சனப் பார்வையின் காரணமாகத் திருப்பூரில் உள்ள ஒரு பெரிய குழும நிறுவனம் மொத்தமாகப் புத்தகம் வாங்கி தன் நிறுவனத்தில் உள்ள அனைவரின் பார்வைக்கும் கொண்டு சென்றது போன்ற நிகழ்வுகள் அனைத்தும் என் தகுதிக்கு மீறிய செயலாகவே எனக்குத் தெரிந்தது.
மனிதர்களின் கருத்துக்களும் கொள்கைகளும் சூழலுக்கு ஏற்ப மாறிக் கொண்டேயிருந்தாலும் ஆழ் மன அன்பு ஏதோவொரு வகையில் நம் வழிப்பாதை துணையாக ஒவ்வொரு சமயத்திலிருந்து வந்துள்ளது.
ஏற்கனவே டாலர் நகரம் என்ற புத்தகம் இங்கு சிவன் மலையில் மேலே நின்று கொண்டு திருப்பூரை நோக்கிப் பார்த்துக் கொண்டு யோசிப்பது போல அமைந்தது. விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சிறப்பான தொடக்கமாக இருந்தது.
2013 டிசம்பர் மாதம் நடந்த டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த கூட்டத்தையும், நண்பர்களையும் பார்த்து விட்டு அய்யா ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிரண்டு போய் பாராட்டிச் சொன்ன வாசகங்கள் இன்னமும் மனதில் உள்ளது.

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் திருப்பூரில் உள்ள தொழில், அது செயல்படும் விதம், பங்கெடுக்கும் பல விதமான மனிதர்களைப் பற்றிப் பேசியது.
அதனை இலவச மின் நூலாகக் கொடுத்து இருந்தேன். திருப்பூரில் உள்ள உள்ள ஒரு நண்பர் கோஷ்டி ஒவ்வொரு அத்தியாயமும் வெளியாகும் போது அதனை வைத்து நாங்கள் விவாதம் செய்தோம். அந்த அளவுக்கு உளவியலுடன் கூடிய நிர்வாகவியல் என்பதனை தேன் கலந்து கொடுத்து இருந்தீர்கள் என்று ஒரு முறை சந்தித்த போது சொன்னார்கள்.
அதனை இன்னமும் மேம்படுத்தி கிண்டில் வழியாக வெளியிட்டேன்.

2019 அமேசான் கிண்டில் போட்டி ஒன்று அறிவித்துள்ளார்கள்.
மகளும் மனைவியும் நீங்க ரவுடி என்றால் இதில் கலந்து கொள்ளுங்கள் பார்க்கலாம் என்று உசுப்பேற்றி உள்ளனர். இது வரையிலும் 15 நூல்களை அமேசான் கிண்டில் வழியாக வெளியிட்டு உள்ளேன்.
மகளும் மனைவியும் நீங்க ரவுடி என்றால் இதில் கலந்து கொள்ளுங்கள் பார்க்கலாம் என்று உசுப்பேற்றி உள்ளனர். இது வரையிலும் 15 நூல்களை அமேசான் கிண்டில் வழியாக வெளியிட்டு உள்ளேன்.
தொடக்கத்தில் சீனிவாசன் மூலமாக இலவச மின் நூலாக வெளியிட்டு வந்தேன். அதனை மேம்படுத்தி பலவற்றைச் சேர்த்து அழகாக கோர்த்து புத்தக வடிவமாக்கி, முழு உழைப்பையும் செலுத்தி கிண்டில் வழியாக வெளியிட்ட போது அள்ளி அனைத்துக் கொண்டனர்.
அதிகமான சுய விளம்பரங்கள் செய்யாத போதும் கூட.
அதிகமான சுய விளம்பரங்கள் செய்யாத போதும் கூட.
மயிலாடுதுறையில் புகைப்படத்துறையில் இருக்கும் தம்பி கணேஷ் அவர்களுக்குத் தமிழகத்தில் வாழும் நரசிம்மராவ் போல ஆட்சி செய்து வரும் அண்ணன் எடப்பாடி அவர்களிடம் பரிந்துரை செய்து சமஉ அல்லது பாஉ பதவி வாங்கிக் கொடுத்து ஆக வேண்டும் என்ற எண்ணம் உண்டு. காரணம் ஒவ்வொரு அட்டைப்படத்தையும் அவர் வழங்கியது என்பது ரசனையின் உச்சம்.
இன்று வரையிலும் ஞாநி குறித்து எழுதிய அமேசான் பதிப்பு அட்டைப்படத்தைப் பற்றி யாராவது ஒருவர் கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.
இன்று வரையிலும் ஞாநி குறித்து எழுதிய அமேசான் பதிப்பு அட்டைப்படத்தைப் பற்றி யாராவது ஒருவர் கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.
தொடக்கத்தில் மதுரை தமிழன் செய்து கொண்டு இருந்தார்.
தம்பி கணேஷ் இத்தனை நாள் பொறுத்து இருங்கள் என்று சொல்லிவிட்டுச் சரியாக அனுப்பி வைப்பார். நான் எழுதிய கட்டுரைகள் சோபை இழந்து விடும். அவர் படங்கள் மட்டுமே என் கண்களில் நிற்கும். ஒற்றிக் கொள்ளலாம் போல இருக்கும். அதீத திறமைசாலிகள் தமிழகத்தில் எங்கங்கோ இப்படி வெளியே தெரியாமல் இருக்கின்றார்கள். இந்தப் பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணத்திற்கு நீங்கள் தான் காரணம் தம்பி. உங்களுக்கு வாழ்நாள் முழுக்க நன்றி சொல்ல வேண்டும்.

அவரிடம் தான் சொல்லி உள்ளேன்.
வீட்டில் ஒரே களேபரமாக உள்ளது. கலந்து கொண்டே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கின்றார்கள். வெல்வது என்பது இரண்டாம் பட்சம். ஆனால் போட்டியில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் என்றேன். உடனே அட்டைப்படத்திற்கான தலைப்பு சொல்லுங்கள் என்றார். அப்போது தான் அந்த நிமிடம் தான் என் யோசனையில் வந்தது. நாம் எழுத நினைத்து ஒரு விசயம் இன்னமும் மீதி உள்ளது என்று யோசித்தேன்.
திருப்பூர் பற்றித் தெரியாதவர்கள், மோடி ஆட்சியை எதிர்த்தே ஆக வேண்டும் என்று மனதார விரும்புகின்றவர்கள் எடுக்கக்கூடிய ஆயுதங்களில் (தற்போது) ஒன்று திருப்பூர் வீழ்ந்து விட்டது.
காரணம் ஜிஎஸ்டி மற்றும் தவறான பொருளாதார கொள்கைகளை என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றார்கள். இது உண்மையாக என்றால் உண்மை தான். இது மட்டும் தான் உண்மையா என்றால் இல்லை. வளர்ச்சி என்பது பரவலாக வளராத எதுவும் எந்த காலத்திலும் நிலைத்து நிற்பது இல்லை. அந்தந்த காலகட்டத்தில் தங்களின் சுயநலத்துக்காக தங்களுக்குத் தேவைப்பட்ட வகையில் உருவாக்கிக் கொண்டு தாங்கள் மட்டும் வளர்ந்தால் போதும் என்று கருதினால் என்ன நடக்கும்? அது தான் இப்போது திருப்பூரைப் பதம் பார்த்துக் கொண்டு இருக்கின்றது.
இப்போது தான் தொடங்கியுள்ளது. இன்னமும் இதன் வீரியம் அதிகமாகும்.

5 முதலாளிகளின் கதை.
இது தலைப்பு.
இதைத்தான் தம்பியிடம் சொல்லி உள்ளேன்.
நான் சந்தித்த ஐந்து முதலாளிகளின் வாழ்க்கையைப் பற்றி முழுமையாக இதில் ஆவணப்படுத்தலாம் என்ற எண்ணம் உண்டு. இதில் படிப்பறிவு இல்லாமல், முறையாக நிர்வாக அனுபவம் இல்லாத போதும் வென்றவர்களின் வாழ்க்கைத் தடங்களின் வழியாகக் கடந்து போன அவர்களின் போட்டியில்லாமல் வாழ்ந்த தொழில் வாழ்க்கை மற்றும் சர்வதேச போட்டியாக ஆயத்த ஆடைத்துறை மாறிய போது அவர்கள் இழந்த லாபங்களைப் பட்டியலிட்டுச் சொல்லலாம் என்ற எண்ணமுண்டு.
இது வெறுமனே கருப்பு வெள்ளை என்ற இரண்டு நிறத்தைப் பற்றிப் பேசுவதல்ல. ஒரு தொழிலுக்குப் பின்னால், ஒரு தொழில் அதிபருக்குப் பின்னால் சாதனைகள், வேதனைகள், அடுத்த தலைமுறைக்குத் தொழில் கை மாறும் போது உருவாகும் மாற்றங்கள் என் பலவற்றையும் பேசும்.
பொதுவெளியில் தலைப்பை எழுதி வைத்து விட்டால் நாமே நம்மை ஒன்றுக்குள் சிக்கி வைத்துக் கொண்டால் எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்து விடும் அல்லவா?
சந்தைப் படுத்தலும், விளம்பரங்களும் நம்மை வெற்றிக் கோட்டின் அருகே அழைத்துச் செல்லும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே போலத் தரம் இருந்தால் அது தானாகவே தன்னை சந்தையில் நிலைப்படுத்திக் கொள்ளவும் செய்யும் என்பது உண்மை தானே.
இன்னும் சில வாரங்களில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டு விடுவேன் என்று நினைக்கிறேன். நான் எப்போதும் இலவசமாக அனைவருக்கும் வாசிக்கக் கொடுப்பது என் வழக்கம். ஆனால் கிண்டில் எதிலும் வெளியிட்டுருக்கக்கூடாது என்ற கட்டளையிட்ட காரணத்தால் கிண்டில் வடிவ புத்தமாக வெளியிடுகிறேன். நண்பர்கள் ஆதரிக்க வேண்டுகிறேன்.

ஆசிர்வதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதற்கு நேற்று மருத்துவர் சொன்ன வாசகத்தை இங்கே எழுதுவது பொருத்தமாக இருக்கும்?
உங்கள் ஆரோக்கியத்திற்கு நான் தரும் மதிப்பெண் 90. மீதி பத்து வேண்டுமென்றால் வெளியே பொறுக்கித் தின்பதைச் சுருக்கிக் கொள்ளுங்கள் என்றார்.
15 comments:
புதிய தொடக்கத்திற்கு வாழ்த்துகள்.
புதியதொரு புத்தகம். வாழ்த்துகள் நண்பரே...
அடிச்சி ஆடுங்க... பதவி விரைவில்... (நான் சொல்லும் பதவி வேறு)
வாழ்த்துகள்...
உங்களிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது ஆனால் வயதில்லையே
மகிழ்ச்சி. வாழ்த்துகள்
புதிய தொடக்கம்
வாழ்த்துகள் ஐயா
மிக்க நன்றி.
மிக்க நன்றி.
ஞாநி அவர்கள் அதிகாலை இறந்தார். அவர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு வரை இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதாவது இறக்கும் வரைக்கும் கற்றுக் கொண்டு இருந்தார். கற்று கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஏற்கனவே திமுக நண்பர்கள் அடித்து அமேசானில் அடித்து ஆடினார்கள். அவர்கள் நாமினேட் செய்தவர் வென்றார். இந்த முறையும் கலக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். நம் புத்தகம் மிதக்குமா? என்று தெரியவில்லை. உங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் எனக்கு மிக அதிகம் தேவை தனபாலன். உலகத்திற்கு கொண்டு சேர்க்க உங்களைப் போன்ற நபர்கள் இருந்தால் போதும். பார்க்கலாம்.
அடுத்த முறை நீங்களும் களத்திற்கு வர வேண்டும் என்று 18பட்டி பஞ்சாயத்தார் சார்பாக அழைக்கின்றேன்.
நீங்க அந்தப் பக்கமே வர மாட்டுறீங்களே?
பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
கிண்டில் வைத்திருக்கின்றீர்களா ராம். டெக்ஸ்டாப் மூலம் கூட தரவிறக்கம் செய்ய முடியும். அலைபேசியில் கிண்டில் ஆப் தரவிறக்கம் செய்ய முடியும்.
https://play.google.com/store/apps/details?id=com.amazon.kindle&hl=en_IN
https://www.amazon.com/Amazon-Digital-Services-LLC-Download/dp/B00UB76290?th=1
அதுதானே இல்லை என்னிடம்!
//அலைபேசியில் கிண்டில் ஆப் தரவிறக்கம் செய்ய முடியும்.//
பார்க்கிறேன்...
Post a Comment