பூங்கோதை, கலைமகள்.. சீனத்து தமிழ் கிளிகள்.
ஆளில்லா பூங்காவில் காதலி மடியில் ஊடல் கூடும் வேளையில் உருவாகும் மொழி் போல இவர்களின் பேச்சு உள்ளது.
ஆனால் சீனம் தமிழ் கற்க வைப்பது தமிழை வளர வைப்பது, உதவுது என்பது மொழிப்பற்று, மொழிவளர்ச்சி என்பது ஒரு பக்கம். சர்வதேச அரசியலில் பல மொழிகள் தெரிந்தவர்கள் தேவைப்படும் என்பது மறுபுறம்.
()
தமிழகத்தில் சீனத்து தலைவரை வரவேற்கும் முஸ்தீபுகளைப் பார்க்கும் போது, நடக்கும் கூத்துக்கள் ஒவ்வொன்றாக கவனிக்கும் போது எனக்கு என்னவோ ஆபூர்வ சகோதரர்கள் இருவரும் ஆட்சி முடிந்த பின்பு கையிருப்பை அங்கே கொண்டு போய்ச் சேர்க்க ரூட்டு போடுகின்றார்களோ? என்று தோன்றுகின்றது.
()
சீனம் நேரு போல மோடியை நினைத்துக் கொண்டிருப்பார்கள் எனில் அவர்கள் பெரிய பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.
விடாக்கண்டன் கொடாக்கண்டன் இருவரும் சந்தித்து அதன் பிறகு அறிக்கை வெளியே வரும் போது தெரியும்? அமெரிக்கா கதறினால் சிறப்பு. அமெரிக்கா சிரித்தால் இந்தியாவிற்கு வருத்தம் என்று அர்த்தம்.
No comments:
Post a Comment