Tuesday, November 19, 2019

Kindle சின்னச் சின்ன விளையாட்டு


அமேசான் போட்டியில் என் வெற்றி தோல்வியை விட யாருடன் மோதுகின்றோம் என்பதனைத் தான் அதிகம் பார்க்கிறேன். இவரை நேற்று தான எனக்குத் தெரியும். இரண்டாம் இடத்தில் நேற்று இருந்தார். மதியம் பார்த்த போது 18 இடத்தில் இருந்தார். ஆனால் இவர் புத்தகத்திற்கு கொடுத்த முன்னுரை மிக கிளாஸ் ஆக இருந்தது. அப்போதே முடிவு செய்தேன். இவரை முழுமையாக உள் வாங்க வேண்டும் என்று. ஸ்டாக் மார்க்கெட் போல நம்நிலை மேலே ஏறுகின்றது. மாலை அதளபாதாளத்தில் சென்று சேர்கிறது.

ஆனாலும் நம் மக்கள் இடைவிடாமல் புனிதப் பணியை செய்து கொண்டே இருக்கின்றார்கள். தொழில் நுட்ப அறிவு அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக இருப்பதால் அவர்கள் களத்தில் புகுந்கு விளையாடுகின்றார்கள். என் புத்தகத்திலும்? இவர் சொல்லும் குற்றச்சாட்டை செய்து இருந்தார்கள். ஆனால் மறைமுகமாக அவர்கள் நல்லது தான் செய்கின்றார்கள் என்றே எடுத்துக் கொண்டேன். திருத்தி வெளியிட்டேன். யார்? என்பது வரைக்கும் என்னால் யூகிக்க முடிந்தது.காரணம் இன்று கட்சி கொள்கையில் அதி தீவிரமாக இருக்கும் தம்பிமார்கள் ஆறேழு வருடத்திற்கு முன்பு என்னோடு நெருக்கமாக இருந்தவர்கள். அன்று அவர்களிடம் கட்சிப்பணி என்ற போர்வை இல்லை. தமிழ் இணையம், விக்கிபீடியா என்ற நல் வாய்ப்புகளுக்காக உழைத்தார்கள்.

வாழ்க அண்ணா நாமம்.

*************

Sriram Narayanan
9 hrs · 
16/11/2019

நண்பர் ஜோதிஜி திருப்பூர் அமேசான் பென் டு பப்ளிஷ் போட்டிக்காக எழுதிய புத்தகம். நான் ஆன்லைனில் படித்த முதல் புத்தகம். இதுவே என் முதல் புத்தக விமர்சமனும் கூட. என் விமர்சனம் மாதிரி இல்லாம புத்தகம் அருமையா இருக்கு. நண்பகள் அனைவரும் டவுன்லோட் பண்ணி, படிங்க, மறக்காம் 5ஸ்டார் ரிவ்யூவும் தந்துடுங்க.

வேகம், வேகம் & வேகம் - ஜோதிஜியின் இப்புத்தகத்தை மூணே வார்த்தைகளில் விவரிக்கச் சொன்னாலும் ஒரே வார்த்தையை மூன்று முறை உபயோகித்து விவரிப்பேன். இதுதான் எனக்கு கிண்டிலில் முதல் புத்தகம். காகிதப் புத்தகத்தின் காதலனான எனக்கு கம்ப்யூட்டரில் படிப்பது பரிச்சயமில்லை. நண்பர் ஜோதிஜியின் புத்தகமாச்சேன்னு படிக்க ஆரம்பிச்சேன், ஒரே மூச்சில் படித்தும் முடித்தேன். வேகமே இதன் மிகப்பெரிய பலம், பலவீனம் என்றும் சொல்லலாம் - ஒரு சில இடங்களில் இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்து விவரித்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது. ஜோதிஜியின் திருப்பூர் வாழ்க்கை ஒரு Manufacturing Exporting Full Life Cycle வாழ்க்கை - அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்து ஒரு யூனிட் முதலாளி ஆகும் வரை அவர் அனைத்தையும் செய்திருக்கிறார் - அதை இப்புத்தகத்தின் வாயிலாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். இப்பயணத்தில் இவரை இயக்கிய / இவர் இயக்கிய ஐந்து முதலாளிகள் பற்றியும், அவர்களின் குணாதிசயங்கள் பற்றியும் ஜோதிஜி அழகாக எழுதியுள்ளார். முழுக்க முழுக்க இவரும் 5 முதலாளிகளுடன் பயணப்பட்டிருப்பதால் “ 5 முதலாளிகளும் நானும்” என்று கூட பெயரிட்டிருக்கலாம்

•••••••••••••••••••


Chellamuthu Kuppusamy 

11 November at 23:53

டாக்டர்கள், பொறியாளர்கள், பொருளாதாரம் பேசுகிறவர்கள், இறையியலாளர்கள், இயற்கை நேசர்கள், அரசியல்வாதிகள், அரைவேக்காடுகள் என எல்லா தரப்பினரும் புத்தகம் எழுத வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும் ஒரு தனித்துவமான வாழ்க்கை உள்ளது. துறை சார்ந்த சிக்கல்கள் உள்ளன. அங்கே நடக்கும் சுவாரசியமான விஷயங்கள் வெளியே இருந்து பார்க்கிறவர்களுக்கு தெரியாது..

திருப்பூர் எனும் டாலர் கொழிக்கும் ஊரைப் பற்றி வெளியே இருந்து பார்க்கும் நமக்கு தெரியாமல் போகலாம். வெறும் கையில் முழம் போட்டோர், ரோமத்தை கட்டி மலையை இழுத்தோர், வாழ்ந்து கேட்டோர் என எல்லா கேட்டகிரிலும் திருப்பூரில் நீங்கள் ஆட்களை காணலாம்.

திருப்பூர் பிசினிஸ் பற்றியும், பொதுவாகவே பிசினஸ் பற்றியும் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் ஜோதிஜி எழுதிய இந்த நூலை வாசிக்கலாம்.

#Amazonpentopublish2019
#Longform
#5MuthalaleegalinKathai
#JothiGanesan
#5முதலாளிகளின்கதை


5முதலாளிகளின்கதை

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஐந்து முதலாளிகளின் கதை படித்து விட்டேன்.
கதையல்ல வரலாறு
விரைவில் ஒரு பதிவு எழுத ஆசை

ஜோதிஜி said...

மிக்க நன்றி நன்றி நன்றி. ஒரு தொழில் குறித்து அறியாதவர்களின் பார்வையில் இந்தப் புத்தகம் எப்படி தெரிகின்றது என்பதனை உங்கள் பதிவின் மூலம் அறிய ஆவலாய் உள்ளேன்.

D.Kanagasundaram said...

உங்கள் ஐந்து முதலாளிகளின் கதை புத்தகம் படித்தேன். சொல்லவந்த விசயங்களை சுருக்கமாகவும் சிறப்பாகவும் சொல்லிவிட்டீர்கள்
இதில் சொன்னது அனைத்தும் கதை அல்ல வரலாறு
ஒவ்வொரு முதலாளிகளின் கதைகளும் ஒரு படிப்பினை.
உங்கள் உழைப்பும் இதில் சாமானியபட்டதல்ல எங்கோ தமிழகத்தின் ஒரு பகுதியில் இருந்து இந்த தொழிலில் ஒரு முதலாளியாக உயர்வது என்பதும் ஏறக்குறைய பதினைத்து ஆண்டுகளில் சாத்தியமாக்கியது முதல் நாளில் நீங்கள் கொண்ட பணி அர்பணிப்பும் உங்கள் உத்வேகமும் என்றால் அது மிகையாகாது
நான் இன்னும் உங்கள் டாலர் நகரம் புத்தகம் படிக்கவில்லை
இந்த புத்தகம் அதனையும் படிக்க தூண்டுகிறது
உங்களுக்கு இன்னுமொரு கோரிக்கை உங்கள் ஊரைபற்றி - காரைக்குடி அங்கு உள்ள பெரிய மனிதர்கள்,வீடுகள் ,அவர்கள் பழக்க வழக்கம் குடும்ப அமைப்புகள் ஒரு புத்தகம் இதேபோல் எழுத வேண்டும்
மேலும் ஒரு விஷயம் உங்கள் வீடியோ நவராத்திரி கொலு பார்த்து பிரமித்து போனேன்..
சொந்த ஊர் பற்றிய பதிவுகளையும் படித்து வருகிறேன்
உங்கள் முப்பெரும் தேவியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகுக.

வணக்கமுடன்
த.கனகசுந்தரம்

ஜோதிஜி said...

மிக்க நன்றி நன்றி நன்றி. நிச்சயம் எழுதுவேன்.