Thursday, September 01, 2022

காத்திரு பகையே...காலம் கவனிக்கும்

மானங்கெட்ட மனிதர்களும் மரியாதையான பதவிகளும் 

கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்தார். அவமானம் பொறுத்து கட்சிப் பணி ஆற்றினார். நான் இன்று என்ன வேலை செய்தேன்? என்பதனை அறிக்கையாக அனுப்பினார். ஊழல் புகார் இல்லை. அநாகரிகமான செயல்பாடுகள் செய்ததாக எவரும் குற்றம் சாட்ட முடியாது என்புதனையெல்லாம் வைத்துக் கொண்டு மோடி இன்ப அதிர்ச்சி கொடுத்து தெலுங்கானா அனுப்பினார். காலம் மற்றொரு பரிசு கொடுத்தது. புதுச்சேரி வரைக்கும் தனி அதிகாரத்துடன் கோலோச்சக் கொண்டு வந்து சேர்த்தது. ஆனால் என்ன பிரயோஜனம். பதவிக்கு உண்டான மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியவில்லை. 



 இன்னமும் அப்பா போலவே அரசியல் நாகரிகம் என்ற பெயரில் ஈஷித்துக் கொண்டு இளித்துச் சிறப்பு பேட்டியளித்து வெட்கமின்றி இன்னமும் விளம்பர பிரியையாக அலைவது ஏனோ? 

என்று எனக்குக் கடந்த சில வாரங்களாக குழப்பமாகவே உள்ளது.


இங்குள்ள ஒவ்வொரு கட்சியில் உள்ள ஒவ்வொருவரின் செயல்பாடுகளிலும் கருணா தான் எனக்குத் தெரிகின்றார். அவர் கற்றுக் கொடுத்த திருட்டுத்தனங்கள் தான் வெளியே தெரிகின்றது. கட்சிப் பெயர்கள் தான் வெவ்வேறு. ஆனால் அத்தனை முகத்திலும் படர்ந்துள்ள பய ரேகை என்பது எம்ஜிஆர் போல நம்மைத் தமிழகம் நினைக்குமா? என்று ஆவலாய் பறக்கின்றார்கள்.

சிலவற்றையெல்லாம் எழுதவே கூடாது என்று யோசித்தாலும் ஒவ்வொருவரும் செய்து கொண்டிருக்கின்ற காரியங்கள் அனைத்தும் உச்சக்கட்ட கோபத்தை எனக்கு வரவழைக்கின்றது. 

திமுக என்பது திருடர்கள் முன்னேற்றக் கழகம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்குக் கூச்சம் என்பதே இருக்காது. ஆதரிப்பவர்களும், அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுரை சொல்பவர்களும் என்று அனைவரும் இப்படித்தான் கடந்த 50 ஆண்டுகளாக இருந்து கொண்டு தங்களைப் பொருளாதார ரீதியாக வளர்த்துக் கொண்டு உள்ளனர்.  

சுருக்கமாகச் சொல்லப் போனால் செல்லூர் ராஜு சொல்வது போது பங்காளிகள்.  மேற்கொண்டு உங்களுக்குத் தெளிவாகப் புரிய வேண்டும் என்றால் பங்காளி என்றால் காட்டிக் கொடுக்கக்கூடாது என்று அர்த்தம் என்பதனை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணாமலையைத் தவிர வேறு யாராவது தமிழக பாஜக வில் இருந்து தற்போதைய சூழலில் பாதிப்பில் மாட்டி அவதிப்படுகின்ற பாஜக தொண்டர்கள் குறித்து, அவர்கள் மேல் பாயும் வழக்குகள் குறித்து, அச்சுறுத்துதல்கள் பற்றியும் கவலைப்படுகின்றார்களா? 

நாகரிகம் பற்றிப் பேசி பாடம் எடுக்கக்கூடியவர்கள் சகோதரரிடம் பேசுகின்றார்களா? என்று கேளுங்கள்?

யாருக்கும் இங்கு வெட்கம் என்பதே இல்லை. சாகும் போது எத்தனை பேர்கள் வருவார்கள் என்பதனை இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இங்கே அனைவரும் உயர்ந்த நாகரிக அரசியல்வாதிகளிலிருந்து மோடிக்குச் சமமான உலக அரசியல் தலைவராக மாறிவிட்டனர். தமிழகத்தில் பாஜக வை ஆதரிப்பவர்கள் தினமும் செத்துச் செத்துப் பல கட்சிகளில் உள்ளவர்களின் பகைமையைச் சம்பாதித்து  அடுத்த நான்கு ஆண்டுகளில் எத்தனை பேர்கள் உயிருடன் இருப்பார்கள்?. 

எத்தனை பேர்கள் சிறையிலிருந்து ஆரோக்கியத்துடன் மீண்டு வருவார்கள்?. எத்தனை பேர்கள் சொத்துக்களை விற்று விற்று  பாஜக ஆட்சிக்கு வருவதற்குள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்?  என்பதே தெரியவில்லை.

எனக்குக் குழப்பமாகவே உள்ளது.

கட்சிக்குள் குறைந்த பட்ச அதிகாரத்தில் இங்கே இருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் பாஜக தனித்தன்மையுடன் இருந்து விடக்கூடாது. 

கட்சி வளர்ந்தால் நம் இருப்பு கேள்விக்குள்ளாகிவிடும். திமுக, அதிமுக விடம் பேரம் பேசி வாங்கித் தின்பதற்கே என்று உறுதியாகவே நம்புகின்றார்கள்.  பழம் தின்று கொட்டை போட்ட பிரகஸ்பதிகள் இன்று வரையிலும் புரோக்கர் வேலையைத்தான் செய்கின்றார்கள்.  புதிதாக உள்ளே நுழைந்தவர்கள்  கண்களில் வரும் கண்ணீர் என்பது அண்ணாமலைக்குத் தெரிந்த போதிலும் அவர் எந்த பாதையில் செல்வது? எதன் அடிப்படையில் அடுத்த அடி எடுத்து வைப்பது என்பதனை உணர்ந்து இருப்பாரா? என்பதனைத் தான் சமீப காலமாகக் கவனித்து வருகின்றேன்.

இந்த சமயத்தில் திமுக குறித்து அதன் அடிப்படை குறித்தும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மகளுக்கு நூலக அனுபவத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த சில வாரங்களில் இங்குள்ள பல நூலகங்கள் உள்ளே சென்று வந்த போது கடந்த 14 மாதங்களிலும் ஒவ்வொரு நூலகத்திற்குள்ளும் வரும் புத்தகங்கள், வார இதழ்கள் ஒவ்வொன்றையும் பார்த்து மிரண்டு போனேன். 

எவரெல்லாம் திமுக விற்கு கடந்த பத்து ஆண்டுகளில் ஆதரித்தார்களோ அவர்களின் பத்திரிக்கைகள் அனைத்தும் (இளம்பகவத் இஆப தான் இதற்குப் பொறுப்பு) வாங்கப்படுகின்றது.  

இது தவிர ஒவ்வொருவருக்கும் பதவி.  

எலும்புத்துண்டுகளில் சிறிது, பெரிது, என்று வித்தியாசம் இருக்குமே தவிர அத்தனை பேர்களுக்கும் கடிக்கப் போட்டு இருக்கின்றார்கள். இன்று வரையிலும் யாரோ ஒருவர் அரசு பணத்தைப் பெறும் அளவுக்கு ஏதோவொரு வசதியைப் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றார்.  

சுருங்கக்கூறின் தமிழ்நாட்டின் கடனை மீறி இவர்கள் சூறையாடுகின்றார்கள்.

கருணா 1971 முதல் முறையாகத் தேர்தலில் நின்று ஆட்சிக்கு வந்த பின்பு தன்னை தக்க வைத்துக் கொள்ளப் பலவற்றைச் செய்தார். கட்சி ரீதியாக  என்பதில் தொடங்கி அதிகார அடுக்கு வரை பலவற்றைச் செய்தார்.   

எம்ஜிஆர் இறந்த பின்பு அவருக்குப் புரிந்து விட்டது.  மக்கள் நம்மை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். இடையில் சிக்கி மாட்டிக் கொள்ளாமல் அந்தப் பக்கம் கொஞ்சம் இந்தப் பக்கம் கொஞ்சம் என்று ஏமாற்றி மட்டுமே அதிகாரத்தை அடைய முடியும் என்பதனை முழுமையாக உணர்ந்து கொண்டார்.

பத்திரிக்கைத்துறையை அப்படியே தன் கட்டுப்பாட்டுக்குள கொண்டு வந்தார். பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்து புதிய வார இதழ்கள் உருவாகக் காரணமாக இருந்தார். தன் பக்கம் பலரையும் இழுத்தார். பட்டம், பதவி வழங்கினார். எந்த காலத்திலும் தன் கையிலிருந்து பத்து ரூபாய் கூட சாகும் வரைக்கும் வழங்கியதே இல்லை. யாரோ ஒருவரின் காசு.  இல்லாவிட்டால் அரசு பணம்.  ஆனால் பலன் என்பது தனக்கு மட்டுமே என்ற கொள்கையைத் தான் கருணா கடைசிவரைக்கும் கடைப்பிடித்தார்.

கல்விக் கூடங்களில் சாதாரண ஆசிரியர்கள் முதல் உச்சக்கட்ட துணைவேந்தர்கள் வரைக்கும் தனக்கு உதவி செய்யக்கூடிய கூலிக்கு மாராடிக்கும் கூட்டத்தை உருவாக்கித் தேர்தலில் வெல்ல அவர்கள் அனைவரையும் எந்திரமாக மாற்றினார். தகுதி முக்கியமில்லை. தரம் தேவையில்லை. என் வாக்கு முக்கியம். என் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். சாகும் வரை நான் பதவியில் இருக்க வேண்டும் என்பதனை வைத்தே செயல்பட்டார்.  

கடைசியாக நீதித்துறையில் ஊடுருவினார். சாதி என்ற பெயரில் மேலிருந்து கீழ்வரைக்கும் மாவட்டச் செயலாளர்களைக் கட்சிக்காரர்களை உள்ளே நுழைத்தார். வழக்குரைஞர் முதல் நீதிபதி வரைக்குமான பதவியில் அமர்த்தினார்.  ரத்ன வேல் பாண்டியன் என்பவரெல்லாம் இந்த நீதி பரிபாலன அங்கத்தினர்களில் ஒருவராக இருந்தார் என்பதனை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. 

இப்போது பாருங்கள். 

சந்துரு என்பவர் நான் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு நானும் நீதிபதி தான் என்று தைரியமாகக் கூவுகின்றார். அவருக்குள்ள அங்கீகாரம் பற்றிப் பேசக்கூடியவர்களின் பட்டியலைப் பார்த்தாலே அவரின் யோக்கியதை தெரியும்.

எம்ஜிஆரும் ஜெயலலிதா, எடப்பாடி மூவரும் இந்த விசயத்தில் கடைசி வரைக்கும் தோற்றுக் கொண்டே இருந்தனர். இப்பவும் அப்படித்தான்.

கருணா போட்ட விதை இப்போது புலிகேசி போன்றோருக்கு உதவுகின்றது.   

தொடர் எழுது. எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுது. 

மறக்காமல் நம் டேக் லைன் ஒடுக்கப்பட்ட, பிதுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட போன்ற வார்த்தைகளை மறக்காதே. 

மறவாதே. 

ஏதோவொரு தலைப்பிடு. புத்தமாக மாற்றிடு. 

விலை அதிகமாக வைத்துக் கொள். கட்சி நிதி மறக்காதே.  

வெளியீடு.

நடுவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை.  

உனக்குத்தான் பொற்கிழி. உனக்குத்தான் மரியாதை.  

என் பதவியைத் தவிர அனைத்து திமுக வில் உள்ள அத்தனை பேர்களுக்கும் மட்டுமே சொந்தம்.

ஆனால் அதனால் பணம் வந்தால் மறக்காமல் மனைவியிடம் கொண்டு வந்து கொடுத்து விடு. 

கட்சி நிதி ஒன்று உண்டு என்பதனை உனக்கு நினைவு படுத்த தேவையில்லை தானே?

இப்படித்தான் இன்றும் தமிழகம் சென்று கொண்டு இருக்கின்றது.

அண்ணாமலை என்ன செய்யப் போகின்றார்? என்பதனை விட அவரை என்ன செய்ய இவர்கள் அனுமதிக்கப் போகின்றார்கள்?

என்பதனைத்தான் சமீப காலமாக கவலையுடன் கவனித்து வருகின்றேன்.

No comments: