Wednesday, August 31, 2022

அண்ணாமலை பேட்டி/இனி நாங்க ஆடப் போகும் ஆட்டம் வேற மாதிரி/Aggressive BJP C...

அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பு பார்த்தீர்களா? 
கீழே இணைப்பு கொடுத்துள்ளேன். 

ட்விட்டரில் திமுகவிற்கு எதிராக ஆதாரப்பூர்வமாகத் தகவல்களை வைத்து, கொடுத்துக் களமாடுவது குறிப்பிட்ட சிலர் மட்டுமே. அவர்களின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்றால் அமைச்சர்கள் நடுங்குகின்றார்கள். பயப்படுகின்றார்கள். கொலைவெறி காண்டாகி மிருகமாக மாறுகின்றார்கள். 





காரணம் ஆவின் துறையில் குறிப்பிட்ட அளவு பாலை குறைத்து வழங்குவது மூலமாக ஒரு நாளைக்கு திருடும் தொகை என்பது இரண்டே கால் கோடி.  இது தவிர மற்ற ஊழல்கள் தனி.

டாஸ்மாக் பார் என்பது இப்போது அமைச்சர் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பார்கள் மூலமாக வசூல் ஆகும் தொகை முப்பத்தி இரண்டு கோடி.  இது தவிர ஒரு நாளைக்கு 100 கோடி பல்வேறு விதங்களில் கோபாலபுரம் வசூல் கோஷ்டிக்குச் செல்கின்றது.  இங்குள்ள ஒரு நண்பரிடம இது குறித்து சொல்லி அவர் இப்போது தொடர்பு எல்லைக்கு வெளியே செல்லும் அளவுக்கு வந்து நிற்கின்றது.  இது மது லாபி குறித்து மேலும் சில விபரங்களை இங்கே தந்து விடுகின்றேன்.  காரணம் இதை வாசிக்கும் பெண்களை பெற்றுள்ள மகாராசன்கள் நாளைக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது நடக்கப்போகும் விபரீதங்கள் எங்கே எவர் மூலம் எப்படி தொடங்கியது என்பதனை இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.

டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத் தலைவர் பாலுசாமி கூறி உள்ள தகவல்கள் இது.

டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மதுபானங்களை தயார் செய்யும் இடத்தில் இருந்தே முறைகேடுகள் துவங்குகின்றன. 

மதுபான ஆலைகளுக்கு, உணவு பாதுகாப்புத் துறை பல நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, எங்குமே மது உற்பத்தி நடப்பதில். அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்க, 'கவனிப்பு' நடக்கிறது.

உற்பத்தியான சரக்கு, டாஸ்மாக் குடோன்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு, உற்பத்தி நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகையை உடனே கொடுப்பதில்லை. குடோன்களில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு, தேவை அடிப்படையில் மது வகைகள் அனுப்பப்படுகின்றன.

அதன்பின் தான், உற்பத்தி நிறுவனத்துக்கு பணம் கொடுக்கப்படுகிறது. லஞ்சம் அதிகம் கொடுக்கும் நிறுவனங்களுக்கு, உடனுக்குடன் தொகை வழங்கப்படுவதுடன், அங்கு கூடுதல் மதுபானங்கள் வாங்கப்படுகின்றன.

டாஸ்மாக் கடைகளுக்கு தேவைப்படும் சரக்குகளின் பட்டியல், குடோன்களுக்கு அனுப்பப்படும். அதன்படி சரக்குகளை அனுப்ப ஊழியர்கள், குடோன் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு, கடை மேற்பார்வையாளர் லஞ்சம் கொடுக்க வேண்டும்.

இதனால், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் தான், கடை மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்களால் சமாளிக்க முடியும்.கூடுதல் விலைக்கு மது விற்பதால், கடை ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு, 2,677 கோடி ரூபாய் கிடைப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த பணம் அரசுக்கு வராது. இதற்கு முக்கிய காரணம், டாஸ்மாக் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் குறைந்த சம்பளம். அவர்கள் சம்பளத்தை உயர்த்தினால் தான் முறைகேடு குறையும். தற்போது, கொரோனா காலத்தை காரணம் காட்டி, அரசு விலையை உயர்த்தி உள்ளதால், கூடுதலாக 1,338 கோடி ரூபாய் 'குடி'மகன்களிடம் இருந்து பிடுங்கப்படுகிறது.

டாஸ்மாக் குடோன்களில் இருந்து, கடைகளுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்ல, ஒப்பந்த அடிப்படையில் லாரிகள் வாடகைக்கு அமர்த்தப்படுவதிலும் முறைகேடு ஏராளம். 

டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் மற்றும் அட்டை பெட்டிகள் மறு சுழற்சிக்கான விற்பனை போன்றவற்றிலும் முறைகேடு நடக்கிறது.

மார்க்கெட் விலை, அட்டைப் பெட்டிக்கு 15 ரூபாய் என்றால், 4 ரூபாய்க்கு ஏலம் விடுகின்றனர். டாஸ்மாக் சட்டம் - 2003ன்படி, பார் அமைக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும், பல ஆண்டுகளாக ஆளுங்கட்சியினர் வருமானத்துக்காக பார் நடத்த அனுமதிக்கின்றனர். அங்கும் ஏராளமான தவறுகள் நடக்கின்றன. 

டாஸ்மாக் கடைகளுக்கு வரும் சரக்கு முழுதையும் அவர்கள் வாங்கி செல்கின்றனர். கடைகளை காட்டிலும், கூடுதல் விலைக்கு விற்கின்றனர். நள்ளிரவு தாண்டியும் பார் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

அண்டை மாநிலங்களில் இருந்து, சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டு விற்கப்படும் சரக்குகளாலும் வரி வருவாயில் இழப்பு ஏற்படுகிறது. மது விற்பனை வாயிலாக, அரசுக்கு ஓராண்டில் 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் என்றால், பல்வேறு சட்ட விரோத காரியங்களால், இழப்பு அதைவிட கூடுதலாக இருக்கும் என்பது உறுதி.  இதனை தமிழக நிதி அமைச்சர் 50 சதவிகித இழப்பு உருவாகின்றது என்று சொல்லி உள்ளார்.

முறையாக நடவடிக்கை எடுத்தால், முறைகேடாக யாருடைய பாக்கெட்டுக்கோ தினமும செல்லும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம், தமிழக அரசுக்கு வரும்.

தற்போது பால்வளத்துறை அமைச்சர், மின்சாரம் மற்றும் சாராயத்துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர்  (இந்த துறை சபரீசன் மூலம் புரோக்கர் வைத்து நடத்தப்படுகின்றது என்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்து விட்டது) போன்ற அத்தனை பேர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டு இருந்த நண்பர் செல்வகுமார் மேல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் தூக்கி உள்ளே வைக்க காவல்துறை 24 மணி நேரமாக அலைந்து கொண்டு இருக்கின்றார்கள். 

காவல்துறை முதல் தகவலறிக்கை வழங்கவில்லை. கஷ்டப்பட்டு முன்பக்க ஷீட் மட்டும் வாங்கி எதன் அடிப்படையில் எந்த பிரிவு அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்? என்று செல்வகுமாரின் நண்பர்கள் பார்த்து வந்து உள்ளனர். ஆனால் தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று பல பொறுக்கிகள் மேடையில், விவாதங்களில், சமூக வலைதளங்களில் தைரியமாகக் களமாடுகின்றார்கள். சட்டம் வேடிக்கை பார்க்கின்றது. நீதிமன்றம் கூட அமைதியாகவே உள்ளது. அண்ணாமலை ஏற்கனவே சொன்ன மாதிரி மற்ற மாநிலங்களில் கேஸ் பதிவு செய்து இங்கு யாராவது ஒருவனையாவது தூக்காதபட்சத்தில் பாஜகவிற்காக களமாடு பலரும் வேறு பாதையில் செல்லத் துவங்கி விடுவார்கள் என்றே நினைக்கின்றேன். இந்த பேட்டியில் இனி வேற மாதிரி இருப்போம். இப்படித்தான் இனி இங்கே அரசியல் செய்யப் போகின்றோம் என்பது போலப் பேசியுள்ளார். பார்க்கலாம்.... அண்ணாமலை பேட்டி/இனி நாங்க ஆடப் போகும் ஆட்டம் வேற மாதிரி/Aggressive BJP Cadre Attitude/August 20 2022

No comments: