Tuesday, August 16, 2022

பன்றிகள் சீரழித்த தமிழக கல்வித்துறை (அரசு கல்லூரிகள்???)

மகள் சில தினங்களுக்கு முன் சொன்ன வார்த்தையிது.  

"அப்பா இதுவரையில் ட்விட்டரில், அலைபேசி உரையாடலில் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை வறுத்து எடுத்துக் கொண்டு இருந்தார். இனி உயர் கல்வித்துறை அதிகாரிகளைப் படாதபாடு படுத்தப் போகின்றார்:" என்றார். 


ஊழலுக்கு புது அத்தியாயம் வகுத்துள்ள ஆவின் பால்வளத்துறை அமைச்சர் பெருமகன் படித்த அரசு பள்ளிக்கூடமிது.  நீங்கள் சென்னை ஆவடி சென்றால் இதனை இப்போதே பார்க்கலாம்.  இன்னமும் இப்படியே தான் உள்ளது.  இந்தப் பள்ளியில் தான் அமைச்சர் பெருமகன் படித்து வளர்ந்துள்ளார்.  


காரணம் இன்று இரண்டாவது மகளை இங்குள்ள அரசு கல்லூரியில் சேர்த்து விட்டு வந்த பின்பு மனம் சொல்ல முடியாத துயரத்தில் தடுமாறியது. காரணம் கல்லூரியின் உள்கட்டமைப்பு எப்படி உள்ளது? என்பதனை இன்று தான் முதல் முறையாக நேரிடையாகப் பார்த்தேன்.

இரண்டு பன்றிகள் "தமிழகத்தை நாங்கள் தான் வளர்த்தோம்" என்று இன்னும் கூசாமல் பொய் பேசிக் கொண்டு இருப்பதை நம்பி இங்குள்ள பல புத்திசாலிகள் "எங்கள் பேரன் வரைக்கு உங்களுக்குக் கொத்தடிமையாக இருப்பதே எங்களின் பெரும் பேறு" என்பதாக இருக்கும் இந்த சமயத்தில் நான் இன்று கல்லூரிக்குள் கண்ட காட்சிகளை ஆவணப்படுத்துவதே என் நோக்கம் ஆகும்.

கல்லூரிக்குள் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் இப்படிப்பட்ட இருக்கைகள் தான் உள்ளது.  கல்லூரி தொடங்கியவுடன் பெருமகன் பொன்முடி அவர்களிடம் இதனைக் காட்டி பேச வேண்டும் என்று நினைத்துள்ளேன்.

()()()

கடந்த மூன்று வருடங்களில் நான் இங்கு பார்த்த பல அரசு பள்ளிக்கூடங்கள் அனைத்தும் சில நல்ல வசதியுள்ள மனிதர்களின் உதவியால் சில கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்ட காரணத்தால் இன்னமும் அரசு பள்ளிக்கூடங்கள் இயங்கிக் கொண்டு வருகின்றது.  பள்ளிக்கல்வித்துறையின் ஆன்மா அழிக்கப்பட்டு விட்டது. ஆசிரியர்கள் தலா ஒரு லட்சம் வாங்கினாலும் எவரும் பள்ளி குறித்து கவலைப்படுவதில்லை. விதிவிலக்குள் உண்டு. படித்தவுடன் என் மேல் பாயவேண்டாம்.

கடந்த முப்பது வருடங்களில் தமிழக பள்ளிக்கல்வித்துறை உள்கட்டமைப்பு வசதிகள் எதையும் செய்யவே இல்லை என்பதனை உறுதியாகச் சொல்ல முடியும்.  கேட்டால் 100 ரூபாயில் 92 ரூபாய் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்தவர்களுக்குச் செலவழிக்கின்றோம் என்கிறார்கள். ஒரு பள்ளிக்கூட ஆசிரியருக்கு ஒரு லட்சம் வழங்க யார் காரணம்? எதன் அடிப்படையில் இப்படி யார் தீர்மானம் செய்தார்கள்? என்ன இவர்கள் இன்று சாதித்து உள்ளார்கள்?  ஏன் தமிழக மக்கள் அரசு பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கக்கூட வருவதில்லை?

கடந்த ஒரு வருடத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கி வந்த மடிக்கணினி மற்றும் மிதிவண்டி உட்பட பல பொருட்களை புலிகேசி ஆட்சிக்கு வந்தது முதல் நிறுத்தி விட்டார்கள்.  

முக்கியமான நபர்களை அழைத்துக் கேட்ட போது இவர்கள் எதிர்பார்க்கும் கமிஷன் ஒத்துவரவில்லை என்பதே முக்கிய காரணம் என்றார்கள்.  

மடிக்கணினிக்குப் பதிலாக டேப்லெட் கொடுக்கலாம் என்று பல நபர்களிடம் பேசி உள்ளனர்.  ரூபாய் மூவாயிரத்திற்குள் அடக்க விலை இருக்க வேண்டும் என்று சொல்லி உள்ளனர்.  

அதாவது இவர்கள் எதிர் பார்க்கும் கமிஷன் ஒரு டேப்லெட் க்கு ஒன்பதாயிரம்   ரூபாய்.  அனைவரும் பின்னங்கால் பிடரி தெறிக்க ஓடி விட்டார்கள். ஆனால் நிதிப் பற்றாக்குறை என்று இழுத்து மூடிவிட்டார்கள்.  

பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் உள்ளே உள்ள அமரும் இருக்கைகள் மற்ற தளவாடச் சாதனங்கள் அனைத்தும் சீர் செய்யப்படாமல், சுத்தம் செய்ய ஆள் இல்லாமல் பன்றித் தொழுவம் போலவே இங்குள்ள பெரிய பள்ளிக்கூடங்கள் பலதும் உள்ளதை நேரில் பார்த்து வருந்தியும் உள்ளேன்.   அப்படியே தான் கல்லூரிகளிலும் உள்ளதை இன்று தான் பார்த்தேன்.

"உங்கள் மனதில் இந்த கொடுமைகளைப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். எதிர்கால சமூகத்திற்கு இந்த அரசியல்வாதிகளை மீறி என்ன செய்ய வேண்டும் என்பதனை உறுதிப்பாடு என்கிற ரீதியில் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று மகள்களிடம் சொல்லி உள்ளேன்.

முதல் மகள் அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரியில் சேர்ந்தார். இரண்டாவது நபருக்குக் கடைசியாக அவருக்கும் அதே கல்லூரியிலிருந்து இன்று தான் அழைப்பு வந்தது. நிஜமான சமூகம் தெரிய வேண்டும் என்பதற்காக  இங்குள்ள அரசு கல்லூரியில் சேர்த்து உள்ளேன். 

இங்கு இரண்டு அரசு கலைக்கல்லூரிகள் உள்ளது. 

ஒவ்வொரு கல்லூரிக்கும் வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 7800.  அதாவது இரண்டு கல்லூரிகளிலும் நான் கடைசியாகப் பார்த்த வரையில் 15 000 மாணவ மாணவியர்கள் பதிவு செய்து இருந்தனர்.  

ஆனால் இரண்டு கல்லூரிகளிலும் அதிகபட்சம் 1500 முதல் 2500 பேர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் நிலை உள்ளதால் 12 500 மாணவர்கள் எங்குமே சேர முடியாத சூழல் தான் நிலவுகின்றது.  

அதாவது பள்ளிக் கல்வித் துறை செலவளிக்கும் பணத்துக்குக் கணக்குக் காட்ட வேண்டும் என்பதால் தர்மபாஸ் போட்டு தேர்ச்சி சதவிகித்தை எகிற வைத்து விடுகின்றனர்.  

பாஸ் என்பதற்கு அருகே மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்களுக்கு பெயில் ஆக்காமல் அவர்களுக்கு பாஸ் மதிப்பெண்கள் வழங்குவது இங்கே காலம் காலமாக நடந்து வருகின்றது. ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பது வரை பாஸ் மற்றும் ஆல் பாஸ் என்பதாக தள்ளிக் கொண்டே வந்து ( என் பள்ளித்தோழன் ஆசிரியராக பணிபுரியும் கிராமத்துப் பள்ளியில் வார்த்தைகள் எழுத வாசிக்கத் தெரியாத மாணவர்கள் பாதிக்குப் பாதி உள்ளனர்) மிகப் பெரும் சீரழிவைத் தமிழக பள்ளிக்கல்வித்துறை உருவாக்கி உள்ளது.  அப்படித்தான் கடந்த முப்பது வருடங்களாக உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது.

இது போன்ற மாணவர்களுக்குத் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் கூட இடம் கிடைப்பது இல்லை.  மேலும் அரசு கலைக்கல்லூரியில் இரண்டு ஷிப்ட்  என்ற சில படிப்புகளுக்கு வைத்து உள்ளனர்.  அப்படியும் மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் தான் உள்ளது. ஆனால் இது சார்ந்து யோசிக்க இங்கு யாருமில்லை.  

மோடியைக் குறை சொல்லி வேறு எதில் கொள்ளை அடிக்கலாம் என்பதில் தான் அதிக கவனம் உள்ளது.

மற்றொன்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  

கடந்த மூன்று வருடங்களாகத் தொடர்ந்து கவனித்து வருகின்றேன்.  தமிழகம் முழுக்க உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் மதிப்பெண்கள் வருவதற்கு முன்பே ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் கல்லூரியின் பிராண்ட் நேம் பொறுத்து அட்வான்ஸ் ஆக வாங்கி வைத்துக் கொள்கின்றார்கள்.  

தர்ம பாஸ் என்றால் சேரும் போது கூடுதலாகக் கொஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும்.  

அப்படித்தான் தனியார் கல்லூரிகள் பணத்தில் செழித்து வாழ்கின்றார்கள். அத்தனையும் 90 சதவிகிதம்  இங்குள்ள இரண்டு  பங்காளிகளின் பினாமிக்கூட்டம்

அதாவது இவர்கள் ஈவேரா பேரப்பிள்ளைகள். 

இதன் காரணமாக அரசு கலைக்கல்லூரிகள் வளர்ந்து விடக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர். அரசு கல்லூரியில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்த்த கண்ணில் நீர் வந்தது.  ஏழெழு ஜென்மத்திற்குக் கருணா  தொடங்கி வைத்த ஊழல் என்ற வார்த்தை எந்த அளவுக்குத் தமிழகத்தைச் சீரழித்து உள்ளது என்பதனை நினைத்துப் பார்த்து பலவற்றை யோசித்து நொந்து போனேன்.  

இரண்டு பன்றிகளும் மாறி மாறி உழுது புரண்டு அசிங்கப்படுத்திப் பல அரசுத் துறை நிறுவனங்களை தங்கள் ஊழலுக்காக அழித்து முடித்து தங்கள் வசதிகளைப் பெருக்கிக் கொண்டு இருப்பதைக் கண்டும் இவர்கள் சிறுநீர் தான் எங்களுக்கு இனிக்கும் என்பவர்களுக்கு எந்த அறிவுரையும் சொல்லத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

அரசு பள்ளிக்கூடம் பக்கம் எவரும் செல்வதில்லை.
அரசு கல்லூரிகள் பக்கம் எவரும் செல்வதில்லை.
கல்வி என்ற அமைப்பே அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருப்பதை எவரும் வெளிப்படையாகப் பேசுவதும் இல்லை.

நடுத்தர வர்க்க மனிதர்கள் தங்கள் வருமானத்தில் அறுபது சதவிகித பணத்தைக் கல்வி முதலைகள் சூறையாடுகின்றார்கள்.  அதாவது கடனாளியாக மாற்றி விடுகின்றனர்.  

அரசு பள்ளிக்கூடங்கள், அரசு கலைக்கல்லூரிகள் நன்றாக இருந்தால் தானே அந்தப் பக்கம் செல்வாய்? இனி எங்கள் பினாமியிடம் வந்து தான் ஆக வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம். முழுமையாக இன்று வரையிலும் வெற்றி அடைந்துள்ளனர்.

உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். 

உங்கள் மகன் மகள் யாராக இருந்தாலும் 

ஒன்று முதல் கல்லூரி வரைக்கும் மொத்தம் எத்தனை லட்சம் ரூபாயைக் கொட்டி அழுது இருக்குறீங்க

என்ன காரணம்? யார் காரணம்? 

இதற்கும் மோடி தான் காரணமா?

கேட்டால் வட மாநிலங்களை ஒப்பிட்டு நம் மாநிலம் வளர்ந்த மாநிலம் என்று உட்டாலக்கடி அடிக்கும் அடிவருடிகளை எதால் அடிப்பது என்பதனை பலமுறை யோசித்துள்ளேன்?

மாநில சுயாட்சி என்ற பெயரில் மாதம் இருநூறு கோடி புலிகேசி மனைவி வசூல் (மின்சாரம் மற்றும் மது துறையில் மட்டும் இந்த தொகை. மற்ற துறை தனியானது) செய்வதை மத்திய அரசும் கண்டு கொள்ள முடியாத சூழலில் இருப்பதை எல்லாம் பார்க்கும் போது இது ஜனநாயக நாடா? என்று கேட்கத் தோன்றுகின்றது.

ஆனால் இன்று அரசு கல்லூரியில் சந்தித்த ஆசிரியப் பெருமக்கள் அதிக அளவு ஆச்சரியம் அளித்தார்கள்.  

வலிமையான தைரியமான நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பரிசாகத் தந்தார்கள்.  இப்படி எத்தனை நல்ல ஜீவன்கள் அரசுத் துறையில் ஒவ்வொரு பகுதியிலும் இருப்பதால் கண்ட கண்ட நாய்கள் எல்லாம் முதல்வர் பதவியில் அமர நினைப்பதும் அது சரிதானே? என்ற கூட்டத்தையும் நினைத்து பலமுறை மனதிற்குள் வியந்து போயுள்ளேன்.

கல்லூரிக்குள் பார்த்த இருக்கை படத்தை இணைத்துள்ளேன். 

பல படங்களை எடுத்த போது சிலவற்றை வெளியிட மனதில்லை. அவ்வளவு கேவலமாக உள்ளது.  

பேராசிரியர் பெண்மணி ஒருவரிடம் படங்களைக் காட்டி பேசினேன். 

"சார் நாங்கள் அதனைப் பற்றிப் பேசக்கூடாது.  நீங்கள் கொஞ்சம் தான் பார்த்து உள்ளீர்கள்.  மகள் வந்து சேர்ந்து சில மாதங்களில் உங்களுக்கு வேறு சில தெரியும்" என்றார்.

மனதில் உள்ள ஆதங்கம் தீர 75வது சுதந்திர பொன் விழா சுதந்திர பேச்சினை இதில் நாற்பது நிமிடம் பேசினேன்.,

No comments: