Wednesday, October 12, 2022

திருமா தனியாக குலைத்துக் கொண்டு இருக்கின்றார்.

கருணா வை முழு மூச்சாக எதிர்த்து அரசியல் செய்த வைகோ மனதிற்குள் நினைத்த ஒன்றே ஒன்று என்னவெனில்  தன்னை எம்ஜிஆராக கற்பனை செய்து கொண்டார்.  ஆனால் வைகோ பேசிய புத்திசாலித்தனமான பேச்சு எதுவும் தமிழக கிராமத்து மக்களிடம் சென்று சேரவே இல்லை. கடைசி வரையிலும். இன்று வரையிலும்.  

எம்ஜிஆரைப் போலத் தனக்கு மக்கள் செல்வாக்கு கிடைத்து விடும். எளிதாக முதல்வர் பதவியை அடைந்து விடலாம் என்று உறுதியாக நம்பினார்.  தன் புத்திசாலித்தனம், தன்னுடைய கல்வி அறிவு, தன் சாதி சனம் எல்லாவற்றையும் நேரிடையாக மறைமுகமாக துணைக்கு வைத்துக் கொண்டார்.  

அப்போது அதிகமாக வெளியே தெரியாமல் தனக்குள் வைத்திருந்த கிறிஸ்துவ லாபியும் வைகோ விற்கு உதவி செய்யத் தயாராக இருந்தது.  உணர்ச்சி வசப்பட்ட இளைஞர் கூட்டம் லட்சக்கணக்கில் திரண்டு வரவேற்பு அளித்தது.  ஆனால் பக்கா திருடனுக்கும் பரம்பரைத் திருடனுக்கும் போட்டி வைத்தால் யார் வெல்வார்கள்.  

அவசரப்படாமல், நின்று நிதானித்துக் கோபப்படாமல் கருணா வைகோ உயிர் தலத்தைத் திருகி அடுத்த கட்டம் செயல்படாதவாறு மாற்றினார். உருவாக்கினார். 

உருகி உருகி வைகோ மற்றும் அவரைச் சார்ந்தவர்களை உருக்குலைத்தார். 

K Annamalai -Twitter Space - தமிழகம் மாற்றத்தை நோக்கி / அமெரிக்கா கலிபோர்னியாவிலிருந்து...Part - 1

தான் பெற்று வைத்துள்ள களிமண் இந்த கூட்டத்தோடு போட்டிப் போட துப்பில்லை என்பதனை உணர்ந்த காரணத்தால் சிமெண்ட் சாலை போட்டுக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்.  

ஆனால் அதிலும் ஓட்டத் தெரியாமல் ஒப்பனை போட்டுக் கொண்டு அங்கிட்டும் இங்கிட்டு சதிராட்டம் ஆடி 15 மாதங்களில் தமிழகத்தைக் கஞ்சா மாநிலமாக மாற்றியதில் வெற்றி பெற்றுள்ளது. இனிமேல் இந்த மூஞ்சியும் தமிழக சட்டசபை வரலாற்றில் இடம் பெற்று புகைப்படமாக மாறப் போகின்ற கொடுமையை எங்கே போய் செல்வது?

தன் சந்துக்குள் வேறொரு நாய் வந்துவிட்டால் அந்த சந்துக்குள் வாழும் மற்ற நாய்கள் எந்த அளவுக்கு ஆக்ரோஷமாக குலைக்குமோ அந்த அளவுக்கு திருமா தனியாக தற்போது அரசியல் களத்தில் குலைத்துக் கொண்டு இருக்கின்றார்.  

வைகோ வருடந்தோறும் பல லட்சம் செலவழித்து தன் ஆரோக்கியத்தைக் கேரளா சித்த வைத்தியர்களிடம் ஒப்படைத்து மீட்டு புரட்சிப் பூ போல மலர்ந்து இருந்த காலம் தற்போது மலையேறி விட்டது. 

அவரால் நடக்கக்கூட முடியவில்லை.  எனவே திருமா காட்டில் அடைமழை.  மதமாற்றக்கும்பல் இருவருக்குக் கொடுக்க வேண்டிய தொகையை திருமா ஒருவருக்கு மட்டுமே தற்போது வழங்கி வருகின்றது.

வைகோ எந்தப் பாதையில் சென்று உருப்படாமல் போனோரா அதே பாதையில் திருமா வும் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டு இருக்கின்றார். வைகோ தன் இறுதிக்காலத்தில் கெஞ்சிக் கூத்தாடி ராஜ்ய சபா எம்பி பெற்று வேறு வழி தெரியாமல் தற்போது யூ டியூப் ல் பேட்டி கொடுக்கும் அளவுக்கு வந்து நிற்கின்றாரோ?  இதே நிலைக்கு மோடி அவர்கள் வரப் போகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிரதமராக வந்த திருமா வாழ்க்கை மாறும் என்றே யூகிக்கின்றேன். 

நான் அதிகப்படியாக யோசிக்கின்றேன் என்று நீங்கள் நம்பினால் காஷ்மீர் அப்துல்லா மற்றும் முப்தி முகம்மது சயீத் குடும்பத்தை உங்கள் நினைவுக்குக் கொண்டு வாருங்கள். தெருவில் இறங்கி பிச்சை எடுக்காத குறையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். மோடி அவர்களுக்கு வாழும் போதே நரகத்தைக் காட்டியுள்ளார். சட்டம் மூலம் சாதிக்க முடியாது என்பதனை உணர்ந்த மகான் அவர்.  

தன் சொத்தை காப்பாற்ற வைகோ தன் மகனை கொண்டு வந்து சேர்த்துப் பல ஆயிரம் இளைஞர்களின் வாழ்க்கையை நடுத் தெருவுக்குக் கொண்டு வந்து வெட்கமின்றி இருக்கின்றாரோ அதே பாதையில் தான் திருமா வும் வந்து கொண்டு இருக்கின்றார்.

அதே போல கருணா உருவாக்கிய பாதை வைகோ வை கடைசியில் எங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது? 

புரட்சிப் புயலும் புழுதிப் புயலும் தற்போது யாரிடம் முட்டி போட்டு முனங்குகின்றார்கள் என்பதனை காலம் வழங்கிய தண்டனை என்று எடுத்துக் கொள்வதா? தமிழர்கள் எப்போதும் களிமண்களைத் தான் விரும்புவார்கள் என்பதாக எடுத்துக் கொள்வதா?

வைகோ மட்டுமல்ல அவர் மொத்தக் குடும்பமும்  பெந்தேகொஸ்தே பக்கம் சென்று முழுமையாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்கும் இங்கும் அலைபாய்ந்து தன்னை காப்பாற்றிக் கொண்டு விட்டார். 

ஆனால் திருமா செய்துள்ள காரியம் ஒரே சமயத்தில் இரண்டு முதலைகளிடம் மாட்டியுள்ளார்.

ஒரு பக்கம் கிறிஸ்துவக் கூலிப்படை,

மற்றொரு பக்கம் அடிப்படைவாத இஸ்லாமியப் பயங்கரவாதம்.  

இடுப்புக்குக் கீழே ஒருவர் உரிமை கொண்டாடிக் கொண்டு மற்றொரு கூட்டம் திருமாவின் தலையைத் தங்கள் வாய்க்குள் பத்திரமாக வைத்துள்ளது. 

பேசு என்றால் பேச வேண்டும்.  ஆடு என்றால் ஆட வேண்டும்.  

அறுபது வயது ஆகின்றது. எத்தனை வயது வரைக்கும் இவரை உயிரோடு விட்டு வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. 

அதுவரைக்கும் ஒதுக்கப்பட்ட, பிதுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட என்று சொல்லி கடைசியில் நாண்டுகொண்டு சாகவேண்டியது தான். 

திருமாவின் சிறப்பு என்ன என்பதனை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இரண்டாம் கட்ட தலைவர்கள் எவரும் வந்து விடக்கூடாது. அதற்குப் பதிலாக கூலிப்படை போல ஒரு பெருங்கூட்டம் தனக்குக் கீழே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வெற்றி பெற்றுள்ளார்.  

தப்பித்த ஒருவர் செல்வப்பெருந்தகை.  அதனால் தான் அவரின் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் பாதுகாப்பாக உள்ளது.  

K Annamalai -Twitter Space - தமிழகம் மாற்றத்தை நோக்கி / அமெரிக்கா கலிபோர்னியாவிலிருந்து...Part - 2

ஒரு முறை ஒரே ஒருமுறை பாஜக தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்து விட்டால் திருமா மட்டுமல்ல, இவரைப் போலத் தமிழகத்தில் கூலிப்படைகளாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் வாய் விபச்சாரிகளுக்கு நித்தியக் கண்டம் பூர்ண ஆயுசு தான்.

காலம் கவனிக்கும். காத்திருக்கின்றேன்.

No comments: