Thursday, July 01, 2021

குடிகார சமூகத்தை வளர்க்கும் பாவிகள்

தமிழகத்தின் மதுபான சந்தை உத்தேசமாக 50 000 கோடி முதல் 60 000 கோடி வரைக்கும் உள்ளது என்று பத்திரிக்கை யாளர்களிடம் பேசும் போது தமிழக நிதியமைச்சர் அறிவித்தார். ஆனால் நமக்கு வர வேண்டிய கலால் வரிகள் அரசுக்கு வருவதில்லை என்றும் கூறினார். என்ன? எப்படி? ஏன் என்ற கேள்வியை மூனா கானாவும் கேட்கவில்லை. அவரும் அது குறித்துப் பேசவும் இல்லை.


இதற்கும் நிச்சயம் மோடி மேல் பழி போட வாய்ப்பில்லை. மாநில சுயாட்சி தமிழ்ப்பிள்ளைகள் தன் கையே தனக்கு உதவி என்று இந்தத் துறையைப் பயன்படுத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

மதுக்கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு மதுவும் அதிகாரப்பூர்வமாகவே பத்து ரூபாய்க்கு அதிகமாக குடிகாரர்களிடம் வாங்குவது யாருக்கெல்லாம் செல்கின்றது? மாதம் தோறும் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் பலரின் பைகளை நிரப்புகின்றது போன்ற தேவையற்ற விசயங்களில் நான் தலையிட விரும்பவில்லை.

தலைமைச் செயலர் என்பவர் நிரந்தர முதல்வன்

கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து வரும் தரமான மது வகைகள் எப்படித் தமிழகத்திற்கு வருகின்றது? அதனை பெரிய மது விடுதிகள் எவ்வாறு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றார்கள்? என்பது குறித்தும் நான் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன்.

ஒரு சட்ட மன்ற உறுப்பினர் 60 கோடி செலவழித்து வெற்றி பெறக்கூடிய சூழலில் மக்கள் மனம் மாறியிருப்பதால் முதலீடு செய்தவர்கள் தன் முதலீடு மற்றும் வட்டியுடன் சேர்த்து ஐந்து வருடங்களுக்கு எடுக்கவே பார்ப்பார். நான் கவலைகளுடன் வார்த்தைகள் எழுதி எவர் மனதையும் புண்படுத்த மாட்டேன்.

எண்ணெய் அரசியல்

இதில் இணைக்கப்பட்டுள்ள ஆங்கிலத் துணுக்கினை திமுக வை ஆதரிப்பதே என் வாழ்நாள் கடமை என்று மருத்துவராக வாழும் ஒரு பெண்மணி இணைத்து தன் ஆதங்கத்தை எழுதியிருந்தார். கூடவே அரசு என்ன தான் நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பதனையும் பதிவு செய்து இருந்தார்.

அவரைப் போன்ற பலரும் சாகின்ற வரைக்கும் அவர் விரும்பும் திமுக தவிர வேறு எவரையும் ஆதரிப்பது என்பது தற்கொலை செய்வதற்கு ஒப்பானது என்றே கருதுவார்கள். வாழ்நாள் முழுக்க தன் சாதி குறித்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள், மதம் மாறிய போது தனக்கு கிடைக்க மறுக்கும் அங்கீகாரத்தை வெளியே சொல்ல முடியாமல் புழுக்கத்தில் தவிப்பவர்கள், புனைவுகளை நம்புகின்றவர்கள், அயோக்கியத்தனத்தை அங்கீகரிப்பவர்கள், அதையே கதாநாயக வழிபாட்டுக்குச் சமமாக பாவிப்பவர்கள் குறித்து எனக்குக் கவலையில்லை.ஆனால் தமிழக மதுக்கடைகளில் அரசு சார்பாக வழங்கப்படும் மதுவகைகள் எதிர்காலத்தில் இங்கே வாழப் போகும் பெண்களின் வாழ்க்கை தொடர்பானது. வாரிசு தொடர்பானது. இல்லறம் தொடர்பானது. கலாச்சாரம், பண்பாடு என்ற ஆணிவேரை அறுத்தெறியும் வல்லமை கொண்டது என்பதனை திமுக அதிமுக வை ஆதரிக்கும் எவரும் புரிந்து கொள்வதில்லை.  காரணம் அவர்கள் எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. பாஜக விற்கு இரண்டு கண் போனால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம் என்கிற உன்னதமான தத்துவத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வதால் அவர்களின் மகன் மகள்களின் எதிர்காலம் குறித்து நாம் தான் கவலைப்பட வேண்டும்.

பெட்ரோல் விலை பற்றி எரிகின்றது? என்ன காரணம்? யார் காரணம்?

ரம் வகைகளில் மிக அதிக அளவு டார்டாரிக் அமிலம் இருக்கிறது. அதுவும் திமுக வைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் மது ஆலையிலிருந்து வழங்கப்படும் மது வகைகளில் உள்ளது என்று  (டார்டாரிக் அமிலத்தின் பரிந்துரைக்கப்பட்ட வரம்பு) டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு யோகேஷ் கபிர்தோஸ் தெரிவித்தார்.

சென்னையில் வசிக்கும் விஜய், கோயம்பேட்டிலுள்ள டாஸ்மாக்கிலிருந்து பழைய காஸ்க் பிரீமியம் XXX ரம் பாட்டிலை சோதனைக்காக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பினார். அறிக்கை தரமற்ற தரத்தைக் காட்டியது.

இருப்பினும், நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் அல்லது அதற்குள் மதுபான விற்பனையை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் வடபழனி கடை மூடப்பட்டதாகக் கூறி உணவுப் பாதுகாப்புத் துறை பிரச்சினையை மூடியது.

ரம் உற்பத்தியாளரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எலைட் டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது திமுகவின் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான மது ஆலையாகும்.

 மற்றொரு அறிக்கையில், அதே ரம் மாநில தடயவியல் அறிவியல் துறையால் சோதிக்கப்பட்டது, இந்த பிராண்டில் அதிக அளவு டார்டாரிக் அமிலம், அசிட்டிக் அமிலம் மற்றும் ஆண்டெதிலாசெட்டேட் இருப்பதைக் காட்டியது.

(இது கடுமையான இரைப்பை குடல் நோய்களுக்கு நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும்).

டாஸ்மாக் விற்ற மதுபானத்தில் நச்சுப் பொருட்கள்  மிக அதிக அளவில் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக கேள்விகள் கேட்ட போது அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை என்று மீண்டும் மனுதாரர் நீதிமன்றத்திற்குச் சென்றார்.

ஜூலை 2015 இல், சென்னை உயர்நீதிமன்றம்  (டாஸ்மாக்) அதிகாரிகளுக்கு மதுபானம் குறித்து தரமான சோதனைகளை நடத்தி பதில் மனு அளிக்கமாறு சொன்ன போதும் இன்று வரையிலும் அதிகாரிகள் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.

இப்போது நாம் இருப்பது 2021 ஜூலை மாதம். கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக இது போன்ற மது வகைகளை எத்தனை லட்சம் பேர்கள் இங்கே குடித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதனை உத்தேசமாக உங்கள் மனக்கணக்கில் கொண்டு வரவும்.  இந்தக்கூட்டத்தில் தான் உங்கள் மகன் மகளுக்குரிய ஆண்களும் பெண்களும் இருக்கக்கூடும்.

அவர்கள் ஆரோக்கியம் எப்படியிருக்கும் என்பது இவர்களை ஆதரிக்கும் கோமான்கள் பதில் அளிக்க வேண்டும்.

தரமான மதுவகைகள் வழங்குவதில் என்ன பிரச்சனை? என்று எனக்குப் புரியவில்லை.

தமிழர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக சாகடிப்பது? ஆரோக்கியம் இழக்க வைப்பது? தான் இவர்களின் தலையாய கடமை எனில் இவர்களை ஆதரிப்பவர்களைப் பற்றி நான் எந்த வார்த்தைகளில் எழுதுவது?


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தன்னை தானே உணர்ந்து மாற வேண்டிய விசயம்...

தன்னை தன்னிடமிருந்து தப்பித்துக் கொள்ளத் தெரிய வேண்டும்...! - குடிக்கு மட்டுமல்ல - எதற்கும்...!