Wednesday, July 28, 2021

தமிழக மத நல்லிணக்கம் + தமிழக இளைஞர்களின் தொழில் ஆர்வம் = 50 ஆண்டு கால ஆட்சி

என் யூ டியூப் சேனலில் கடந்த ஒரு வருடத்தில் அரசியல் சார்பான எந்த காட்சி வடிவத்தையும் நான் பதிவேற்றவில்லை. இங்கு தொடர்ந்து வாசித்து வருகின்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். 

நான் பாஜக வின் ஆதரவாளன். அதனையும் வெளிப் படையாகவே அறிவித்து உள்ளேன். அது சார்ந்து தொடர்ந்து எழுதி வருகிறேன். இன்னமும் எழுதுவேன். 

எந்த இடத்தில் அரசியல் பேச வேண்டும்? யாருடன் அரசியல் பேச வேண்டும்? ஏன் அரசியல் பேச வேண்டும் என்பதனை நான் நன்றாக அறிந்தவன் என்ற முறையில் இது நாள் வரைக்கும் முடிந்தவரைக்கும் நாகரிகத்தை கடைப்பிடித்தே வந்துள்ளேன். ஆனால் நெருங்கிய நண்பர்கள் தெரிந்தே இங்கே நடக்கும் அவலங்களைப் பதிவு செய்ய மறுப்பதும், மட்டையடியாக பாஜக எதிர்ப்பு தளத்தில் செயல்படுவதும், படித்தவர்கள் கூட பல படிகள் கீழ் இறங்கி தன்னை ஏமாற்றிக் கொள்வதோடு எதிர் காலத் தமிழ்ச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றார்கள் என்பதனை நினைத்து நினைத்து வருத்தப்படுகின்றேன். 

நீங்கள் நிகழ் கால சமூகத்தை எழுதாமல் தவிர்க்கும் உங்கள் செயல்பாடுகள் உங்களை சாவு வரைக்கும் துரத்தும் என்பதனை நன்றாக நினைவில் வைத்திருக்கவும். 

படித்தவர்களின் கள்ள மௌனம் என்பது மிக மிகக் கொடுமையானது. 

சமூக சீரழிவுக்கு அதுவே முக்கிய காரணமாகவும் அமைந்து விடுகின்றது. 

கடந்த 10 வார திமுக ஆட்சியில் நடந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் எதிர்கால நம் தலைமுறைகளின் வாழ்க்கையோடு தொடர்புடையது. 

ஊடக மௌனம், பத்திரிக்கையாளர்களின் பாரபட்சம், அரசு ஊழியர்களின் அமைதி என்று எல்லாப் பக்கமும் இருட்டாகவே உள்ளது. 

லியோனி போன்றோர்களைப் பாட நூல் நிறுவனத்தில் கொண்டு அமர்த்திய பின்பு அப்படிப்பட்ட ஓர் அமைப்பே இங்கே தேவையில்லை என்பதே என் கருத்து. ஏற்கனவே அதிமுக வளர்மதி இருந்த போதும் இதையே சொன்னேன். 

சென்ற வாரத்தில் அருமனை என்ற ஊரில் நடந்த விழாவில் ஒரு பாதிரியார் பேசிய பேச்சை நீங்கள் வலைதளங்கள் வாயிலாக கேட்டு இருக்க வாய்ப்புண்டு. 

திருப்பூர் ஏற்றுமதியாளர் கொடுத்த பேட்டி. 

இவை இரண்டு கடந்த ஒரு வாரத்தில் கோடிக்கணக்கான பார்வையாளர்களிடம் சென்று சேர்ந்தது. 

ஏன் திமுக அரசு பாதிரியாரைக் கைது செய்ய உத்தரவிட்டது என்பதற்குப் பதில்? 

தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் என்றால் என்ன? 

தமிழ்ப்பிள்ளைகள், வளர்ந்து கொண்டிருக்கும் இளைஞர்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் பெற்ற சிறப்பான தகுதி? 

இந்த மூன்றையும் அடுத்த பத்தாண்டுகளுக்குப் பின்பு யாராவது 2021 ல் தமிழகம் எப்படி இருந்தது என்பது பற்றி யோசித்துத் தேடிப் பார்த்தால் பார்வையில் பட வேண்டும் என்பதற்காக நான் பதிவேற்றி உள்ளேன். 

மதுரையில் இருக்கும் என் பொன்மனச் செல்வன், சொல் ஆற்றல் மிகுந்த கருணாநிதியின் வளர்ப்பு மகன், பாஜக வந்துரும் என்ற சங்கத்தின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் இந்த மூன்றையும் பார்த்து இங்கே விமர்சனம் எழுதுவார் என்று நம்புகிறேன். 
 
    


No comments: