Monday, July 12, 2021

கிறுக்குக்கூட்டம்

வளர்ச்சி என்பதற்கு அடையாளமே தமிழகம் தான் என்று இன்று வரையிலும் ஒரு பெரிய கிறுக்குக்கூட்டம் இன்று வரையிலும் அலப்பறை செய்து கொண்டு இருக்கின்றது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன் எழுதிய பதிவில் இதனைப்பற்றித் தெளிவாகவே குறிப்பிட்டு இருந்தேன். அதனை மின்னூலாகவும் ஆவணப்படுத்தியுள்ளேன்.

(இணைப்பு

தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் நடந்த வளர்ச்சி என்னவெனில் அந்தக் கட்சியில் 250 குடும்பம்.  இந்தக் கட்சியில் 250 குடும்பம். இவர்கள் தான் உண்மையிலேயே வலிமையாக வளர்ந்து உள்ளனர்.

இவர்களைச் சார்ந்த செயல்படக்கூடிய 500 குடும்பங்கள் அடுத்த நிலையில் வளர்ந்து உள்ளனர்.  இந்த இரண்டு கூட்டத்தை உறவாடிப் பிழைக்கும் ஆயிரம் குடும்பங்கள் அடங்கிய கூட்டம் வளர்ந்து கொண்டு வருகின்றனர்.

உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் பவானி சட்டமன்றத் தொகுதியில் ஒரு நிறுவனம் விலைக்கு வாங்கப்படுகின்றது. 400 கோடி கை மாறுகின்றது. விற்பவர் பணம் வாங்கி விட்டார். ஆனால் பத்திரம் மாறவில்லை. ஆவணங்கள் எப்போதும் போல உரிமையாளரிடமே இருக்கும். ஆனால் சொத்து யாருக்குச் சொந்தம்?

இதற்கு மேல் மற்றொரு ஆச்சரியம்? இந்த சொத்து வாங்கப்பட்ட பின்பு அதற்கு தேசிய நெடுஞ்சாலை போன்ற வசதிகளை மாநில அரசு செயல்படுத்துகின்றது. காரணம் அந்த இடத்திற்கு எளிதாக சென்று வர? யாருடைய பணம்? யாருக்காக?

அடுத்த உதாரணம்.

நத்தம் அருகே ஒரு கல்லூரி விலைக்கு வாங்கப்படுகின்றது. கல்லூரி இருப்பது அத்துவானக் காட்டில்.  இணைப்புச்சாலை போடப்பட்டு வேறொரு நகரோடு இணைக்கப்படுகின்றது. கல்லூரி முகம் மாறுகின்றது. சுற்றியுள்ள இடத்தின் விலை எகிறிக் குதிக்கின்றது. ஒரே கல்லில் நூறு கோடி மாங்காய்.

பல உதாரணங்கள் எழுத முடியும். இவர்கள் தான் பாஜக குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். இதனை வாசிக்கும் மாற்றுக் கருத்து கொண்டவர்களுக்கும் தெரியும் என்பதனை நான் உணர்ந்தே வைத்துள்ளேன்.

தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்தின் ஜாதகத்தை நீங்கள் ஆராய்ந்தால் 100 வருடத்திற்கு முன்னால் வாழ்ந்த பண்ணை அடிமை வாழ்க்கையைத் தான் தமிழ்ப்பிள்ளைகள் இன்று அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் நாகரிகமாக. 

வெளியே தெரியாது. காட்டிக் கொள்ள மாட்டார்கள். பேசும் போது கட்டாயம் பாஜக மட்டும் இங்கே வந்து விடக்கூடாது என்பதில் முடித்து வெற்றுத்தாளைத் தெருவில் எரித்து ஒன்றியக்கூட்டம் கொண்டாட்டம் நடத்தும்.

நாம் உண்மையில் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டு தான் இருந்தோம். அது படிப்படியாக ஒரு குடும்ப வளர்ச்சியாக, தனிப்பட்ட குடும்பங்களின் வளர்ச்சியாக, சிலருக்குரிய வளர்ச்சியாக மாறத் தொடங்கியது.  கடந்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி என்பது வீழ்ச்சியாக மாறத் தொடங்கியது.

பணக்காரர்கள் வெளியே கடன் வாங்கினாலும் வரவு செலவு வந்து கொண்டே இருக்கும் போது வட்டி கட்டுவது தெரியாது. புரியாது. பார்ப்பவர்களுக்கு அவன் நன்றாகத்தானே இருக்கின்றான் என்றே தோன்றும்.  ஆனால் புற்றுநோய் போல உள்ளே படிப்படியாக அரித்துக் கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட எல்லை வரைக்கும் சென்று அது மரணத்தின் வாயிலை அறிமுகப்படுத்தும்.

நாம் இன்னமும் அந்த நிலைக்கு வரவில்லை என்பது ஆறுதல். ஆனால் இவர்கள் தொடர்ந்து ஆட்சியில் நீடித்தால் உங்கள் தலைமுறை இந்தக் கொடுமையைச் சந்தித்தே தீர வேண்டும். 

நீங்கள் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று நாம் மற்ற மாநிலங்களை நம்பியே வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். 

இங்கே அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், கைப்பற்ற நினைப்பவர்கள் அனைவரும் இதற்குள், இதனை வைத்துத் தான் தங்கள் பைகளை நிரப்ப ஆசைப்படுகின்றார்கள்.  காரணம் கேட்டால் கட்சி நடத்த பணம் வேண்டாமா? என்கிறார்கள்? 

மாவட்டம் தோறும் ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்து கட்சி நடத்துவதற்குப் பெயர் கட்சியா? 

இல்லை அதற்குப் பெயர் வணிகம். அதுவும் முறையற்ற வணிகம். 

மக்களுக்குச் சேர வேண்டிய நல்ல திட்டங்களில் உள்ள பணத்தைச் சுரண்டி உண்டு கொழுத்து வாழும் மிருகம் என்று அர்த்தம்.

பக்கத்து மாநிலங்களின் அணை கட்டினாலும் இவர்கள் தங்கள் வைத்துள்ள கிரஷர் மூலம் தான் பொருட்கள் அனுப்புகின்றார்கள். இவர்கள் பல மாநிலங்களுக்கு இங்குள்ள மணல் செங்கல், சிமெண்ட் வழங்குவதற்கு ஒரே காரணம் இங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க என்பதாக நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.

தமிழகத்தில் தினமும் விடியும் ஒவ்வொரு நாளே இனிய நாளே.

(ஆவண இணைப்பு )

2019-20 ஆம் ஆண்டிற்கான 10 முக்கிய பொருட்களில் (டன் கணக்கு) தமிழ்நாட்டின் உள்ளே வெளியே வந்த பொருட்கள், துறைகள் சார்ந்த விபரங்கள்.

மற்ற மாநிலங்களுக்கு நாம் அனுப்பியதை விட மற்ற மாநிலங்களிலிருந்து இங்கு வருவது தான் அதிகம். உத்தேசமாக 3.5 மடங்கு அதிகம் உள்ளே வந்து கொண்டு இருக்கிறது. 


5 comments:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

விரிவான தகவல்கள் .
ஆனால் இவ்வளவு நடக்கிறதா தமிழகத்தில் .

ஜோதிஜி said...

மாறன் உங்கள் கவனத்திற்கு 1. தங்கிலிஸ் ல் எழுதாதீர்கள். 2. பதிவில் என்ன தகவல் உள்ளதோ அதற்கு பதில் அறிக்க முயலவும். 3. உங்களுக்கு பிஜேபி என்ற வார்த்தை ஒவ்வாமையாக இருந்தால் அது உங்கள் மனநலம் சார்ந்த பிரச்சனை. சரி செய்ய முடியுமா என்று பாருங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவல்லவோ வளர்ச்சி...?! சரிதான், கடந்த 10 வருட வளர்ச்சி போல...!

மாறன் said...

டிமாண்டிசேஷன் போது சேகர் ரெட்டிக்கு கிடைத்த 2000 ரூபாய் நோட்டுக்கள் பற்றி இன்றைக்கு வாய் திறக்காதவர்கள் இன்று கணக்குக் காட்டப்பட்டு விட்டதாக சொல்லுகின்றார்கள்.

ஜோதிஜி said...

பதிவில் உள்ள சமாச்சாரத்திற்கும் நீங்கள் அளிக்கும் பதிலுக்கும் தொடர்பு இல்லாமல் உள்ளது. மறைந்த அருண் ஜெட்லிக்கு சேர வேண்டிய புகழுக்கு இயற்கை அவரை சீக்கிரமே அழைத்துக் கொண்டது மாறன்.