Friday, May 21, 2021

முதல் அலை முதல் இரண்டாவது அலை வரை

முதல் அலை முதல் இரண்டாவது அலை தொடக்கம் வரை தமிழ் நாட்டில் நடப்பது என்ன?

கடந்த மார்ச் 2020 முதல் 2021 ஏப்ரல் வரைக்கும் உண்டான 13 மாதங்களில்..........




• இயல்பாக பிரச்சனையின்றி அடிப்படை வசதிகளுடன் மூன்று நேரச் சாப்பாடு சாப்பிட வழியுள்ளது என்ற நிலையில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் உடல்நிலையில் மிகப் பெரிய மாற்றம் உருவாகியுள்ளது. முக்கியமாக மன அழுத்தம். 

* நேற்று தம்பியொருவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் ஆழமாக என் மனதில் ஊடுருவியது. "அண்ணே இந்த காலகட்டத்தில் நம் உடல் ஆரோக்கியம் என்பது நமக்கு மூன்று வயது அதிகமானது போன்றது ஆகியுள்ளது என்பதனை கவனித்துப் பாருங்கள்" என்றார்.

புகழ் போதை

•  வருகின்ற பத்தாம் தேதி முதல் தொடங்கி இப்போது வரைக்கும் பொது முடக்கம் என்ற பெயரில் பெரிய கூத்து இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மக்கள் எவரும் வீட்டுக்குள் இருக்கத் தேவையில்லை என்கிற ரீதியில் தொற்று நோய் பரப்புபவர்களாக இருக்கின்றார்கள். புதிய அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. இதன் விளைவுகள் அடுத்த இரண்டு வாரங்களில் நமக்குத் தெரியும்.

•  அடிப்படை வசதிகள் பெறும் வண்ணம் கடைகள் திறந்து இருக்க அரசு உதவினாலும் கூட நாகரிகமான நரக வாழ்க்கை என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. சுய ஒழுக்கம் இல்லாத மக்கள் திரள் வழங்கும் இந்தத் தண்டனையை நாம் மனம் உவந்து ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

• பெரிய முதலீடுகளைப் போட்டு வட்டி கணக்கு பார்த்துக் கொண்டிருப்பவர்கள் முதல் நாளைக்கு எந்தப் பொருளை அடகு வைத்து நம் சுயமரியாதையை காப்பாற்றிக் கொண்டு வாழத் தான் வேண்டும் என்று வாழும் சமூகக் கூட்டத்திடம் நீங்கள் என்ன அறிவுரை சொன்னாலும் எடுபடாது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்பது பெரிய வார்த்தைகள். கட்டாயமாக வழங்கப்படுகின்ற இந்த ஓய்வுக் காலத்தை ஏதாவது ஒரு வழியில் பிரயோஜனமாக செலவழிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

* இணையம், அதன் தேவை, அதில் செலுத்த வேண்டிய மத்திய அரசின் பொறுப்பு, வெளிப்படைத்தன்மை போன்றவற்றைக் கடந்த ஒரு வருடமாக காட்டுக் கத்தலாக கத்திக் கொண்டிருக்கின்றேன்.  மருத்துவமனை ஊழியர்கள் "உன் இணையத் தகவலைக் கொண்டு போய் குப்பையில் போடு. வந்தால் தானே எங்களால் போட முடியும்" என்கிறார்கள். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தடையின்றி கிடைக்கின்றது, இது என்ன மாயம் என்றே புரியவில்லை?

• இணையத்தில் பதிவு செய்தால் போதும் என்பது இன்றைய சூழலில் பகல் கனவு.  நாம் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு விடலாம் என்று நம்பும் விபரம் புரிந்தவர்கள் கூட எரிச்சலாக உள்ளனர். எங்கிருந்து எது தொடங்குகின்றது? யாருடைய பொறுப்பு? எங்கே தவறு நடக்கின்றது? என்பதே புரியாத வலைபின்னல் போல யோசிக்க முடியாத அளவுக்கு உள்ளது.

• மருத்துவமனை ஊழியர்களின் மன அழுத்தம் புரிந்து கொள்ளக்கூடியதே என்றாலும் இயல்பாக கிடைக்க வேண்டிய விசயங்கள் கூடச் சரியாகச் செய்கின்றோம் என்ற மத்திய அரசின் கொள்கைகள் தவறா? மாநில அரசின் கையறு நிலைமையா? என்பதே புரிந்து கொள்ள முடியவில்லை. முதல் டோஸ் போட்ட எனக்கு இரண்டாவது டோஸ் போட அலைந்த போது இங்கு இருப்பு இல்லை என்பதனை மருத்துவமனை ஊழியர் தெரிவித்த தகவலையும் மாவட்ட தலைமைக்குத் தெரிவித்த போது மனதில் குமுறிக் கொண்டிருந்த 3000க்கும் மேற்பட்டவர்கள் ட்விட்டரில் கொந்தளித்து என்னுடன் சேர்ந்து பதில் மூலம் எழுதுவதைப் பார்க்கும் போது என்ன சொல்வது? என்றே தெரியவில்லை.

• சிதைத்து விட்டார்கள். சின்னாபின்னமாக்கிவிட்டார்கள். 

சிறுகச் சிறுக மாற்றிவிட்டார்கள் 

போன்ற வார்த்தைகள் அனைத்தும் எதிர்மறை சிந்தனைகளின் முக்கிய அத்தியாயங்கள். ஆனால் எந்தக் காலத்திலும் இதை நான் பயன்படுத்தவே மாட்டேன். எங்கே தவறு நடக்கின்றது? என்பதனை உணராத அரசு நிர்வாகத்தின் அத்தனை துறைகளையும் யார் கேள்வி கேட்க முடியும் என்பதும், மீண்டு வர முடியுமா? என்பது போன்ற விடை தெரியாத ஆயிரத்தெட்டு கேள்விகளைச் சுமந்து கொண்டு அவரவர் உயிரை நீங்கள் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அரசு சொல்வது போலவே உள்ளது. 

* நாங்கள் திருந்தவே மாட்டோம் என்ற மக்களுக்கும், 8 கோடி தமிழர்களுக்கு தேவைப்படுகின்ற அடிப்படை வசதிகள் உள்ள கட்டமைப்பு எந்த துறையிலும் இங்கே இல்லவே என்பதனையும் இந்த ஊழிக்காலம் நமக்கு உணர்த்துகின்றது. 

பிழைக்க முடிந்தவர்கள் வாழ்ந்து கொள்ளுங்கள். 

முடியாதவர்கள் போய்ச் சேருங்கள்

என்பதாகவே தற்போதைய நிலைமை உள்ளது. 

இதற்குள் நாம் நமக்குப் பிடித்த அரசியலைப் பேசி கூடுதல் மன அழுத்தத்தை உருவாக்கிக் கொள்கின்றோம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தலைக்கு மேலே வெள்ளம் போனால்
ஜாண் என்ன...? முழம் என்ன...?
தன்னை நம்பும் தைரியம் இருந்தால்
நாள் என்ன...? பொழுதென்ன...?

விலைக்கு மேலே விலை வைத்தாலும்
மனிதன் விலை என்ன...?
உயிர் விட்டு விட்டால் உடல் சுட்டு விட்டால்...
அதில் அடுத்த கதை என்ன...?

arul said...

எல்லா இனங்களும் அழிய வேண்டும் எனும் குறிக்கோளுடன் உயிரியல் யுத்தம் தொடங்கி விட்டார்கள்..800 கோடி பேரை 50 கோடி பேர் ஆக குறைக்கும் வேலை இது..பெரு முதலாளிகள் புதிய அடிமை உலக படைக்க தொடங்கி விட்டார்கள்.. Industrialization 4.0..They will do whatever they want to do..தப்பி பிழைப்பது அரிதிலும் அரிது