Saturday, May 22, 2021

தடுப்பூசி அரசியல்

தடுப்பூசி சார்ந்து இடைவிடாது ட்விட்டரில் அரசியல் செய்து கொண்டிருக்கும் கல்லுப்பு என்ற ராகுல் ராஜாவும், உலக உத்தமர் அய்யா ப.சி மற்றும் நாட்டு நலனில் மட்டுமே அக்கறை கொண்டு வாழ வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் உயர்மட்டக் காங்கிரஸ் படை பட்டாளங்களும் ஏன் இந்த அளவுக்குக் குதியாட்டம் போடுகின்றார்கள் என்பதனை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் அடேங்கப்பா என்று மூக்கில் விரல் வைப்பீர்கள்?




மோடி அவர்கள் மேல் தற்போது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று நேரு முதல் காங்கிரஸ் காலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் விற்று தன் பையில் போட்டுக் கொண்டுவிட்டார் என்பதனையும் கவனத்தில் வைத்து இருங்கள். 

நாமும் இதை உண்மை என்றே நம்புவோம்.

இப்போது சில நிறுவனங்களின் பெயர்களை அறிமுகம் செய்து வைக்கின்றேன்.  இந்த ஒவ்வொன்றும் இந்திய மக்களைக் காப்பாற்றிய நிறுவனங்கள்.

Central Research Institute, Kasauli, Himachal Pradesh மத்திய ஆராய்ச்சி நிறுவனம். ஹிமாச்சல் பிரதேசம்

Pasteur Institute of India, Coonoor பாஸ்டர் இண்ஸ்டிடியூட் ஆப் இந்தியா. குன்னூர்.

BCG Vaccines Lab, Chennai மத்திய ஆராய்ச்சி நிறுவனம்.  சென்னை.

இவை அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் ஆகும்.

இந்த நிறுவனங்களில் உலகம் முழுக்க தேவைப்படுகின்ற Diptheria Pertussis Tetnus (DPT), Tetnus Toxid (TT), Diptheria and Tetnus (DT), measles, polio and Bacillus Calmette Guerin (BCG) போன்றவை தயாரிக்கப்பட்டு இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தடையின்றி வழங்கப்பட்டு வந்து கொண்டிருந்தன.

2009 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் மன்மோகன்சிங் அரசு மற்றும் அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இராமதாஸ், மூன்று பொதுத்துறை இயக்குநர்கள் போன்றோர்களை நோக்கி பெரிய வெடிகுண்டு ஒன்றை வீசியது.

தலைமை நீதிபதி கே ஜி பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி பி சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கேள்வியை எழுப்பினர். 

முதல் அலை முதல் இரண்டாவது அலை வரை

ஏன் 100 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த மேலே சொன்ன முக்கியமான, மக்களுக்குத் தேவையான, அவசியமான தடுப்பூசி நிறுவனங்களை இழுத்து மூடினீர்கள்? 2008 ஜனவரியிலிருந்து இந்த நிறுவனங்களின்  நடவடிக்கைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டுச் செயல்பட முடியாத அளவுக்குக் கொண்டு சென்றீர்கள்?

தங்களது தடுப்பூசிகளை விலைக்கு விற்கும் தனியார் நிறுவனங்களின் நலனுக்காகச் சுகாதார அமைச்சகம் இந்த முடிவை எடுத்ததாக குற்றம் சாட்டி, யூனியன் குடும்ப நலத்துறை முன்னாள் செயலாளர்  தானாகவே முன்வந்து வழக்கைத் தொடுத்த போது தான் இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

அரசு சார்பாக சொன்ன பதில் என்ன தெரியுமா?

தனியார் நிறுவனங்களில் வாங்குவதை விடப் பொதுத்துறை நிறுவனங்களில் செலவு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது என்று திருவாய் மலர்ந்தனர். 

மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ், பொதுத்துறை நிறுவனங்களை மூடிய பின்னர் இந்த மூடப்பட்ட பிரிவுகளின் இயக்குநர்களின் மனைவிகள் இந்தத் தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்காக தங்கள் சொந்த நிறுவனங்களைத் தொடங்கினர் என்று பெரிய வெடிகுண்டை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஒரு பக்கம் இயக்குநர்கள், மற்றொருபுறம் அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலகம். கடைசியாக உலக அளவில் தடுப்பூசி சந்தையை வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்ற வலைபின்னல் மூலம் இந்த நிறுவனங்கள் மூடப்பட்டது.

காங்கிரஸ் அரசு என்றால் இந்தியாவிற்குத் தேவைப்படுகின்ற எதுவாக இருந்தாலும் வெளிநாட்டிலிருந்து தான் வாங்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள் என்பது அரசியல் புரிந்த அனைவருக்கும் தெரியும்.  அவர்கள் ஆண்ட காலம் முழுக்க இப்படித்தான் இந்தியா இயங்கியது. 

தடுப்பூசிக்குப் பின்னால் உலகளாவிய சந்தை வாய்ப்புகள், போட்டிகள்,  வலைபின்னல்கள், அமெரிக்க ஆதிக்கம் போன்ற அனைத்துக்கும் எப்போதும் மன்மோகன் தலைவணங்கக் கூடியவர். அதன் அடிப்படையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் இந்த மூன்று நிறுவனங்களை மூடியது ஆச்சரியமல்ல. படிப்படியாக கொல்லுதல் என்ற கலையை கனகச்சிதமாகச் செய்தார்கள் என்பது தான் ஆச்சரியம்.

முதலில் குழு ஒன்றை அமைத்தனர்.  

அவர்கள் பார்வையிட்டனர். 

நிறுவனங்களில் இருந்த குறைபாடுகளைப் பட்டியலிட்டனர். 

உரிமத்தைத் தற்காலிகமாக தடை செய்தனர். 

அதனை நீட்டித்தனர். 

நிறுவனங்கள் பொருளாதாரச் சுமையில் சிக்கியது. 

மீள முடியாத துயரம் சூழ்ந்த போது சாக்கு போட்டு கோழியை அமுக்குவது போல தாங்கள் நினைத்ததைச் சாதித்து அவர்கள் விரும்பிய பலருக்கும் வாய்ப்பளித்தனர். வாசல்களைத் திறந்து விட்டனர்.

கட்சியில் இருப்பவர் எவரும் தங்களை மீறி வளர்ந்து விடக்கூடாது என்று நேரு பரம்பரை நினைத்தது போல, குடும்ப அங்கத்தினர்கள் மற்ற ஒன்றையும் கவனத்தில் வைத்திருந்தனர். 

பிணியூர்த்தி கட்டண அரசியல்


எப்போதும் இந்தியா கையேந்தி பிச்சையெடுக்கும் நிலையில் தான் இருக்க வேண்டும். அதன் மூலம் வரக்கூடிய வருமானம் அனைத்தும் தங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது என்பதில் இன்று வரையிலும் உறுதியாக இருப்பதால் ராகுல் கோவாக்சின் குறித்து மட்டும் தொடக்கம் முதலே பேசத் தொடங்கினார். கோவிட்ஷில்ட் என்பது சுயசார்பு தொடர்பானது. அதில் அரசியல் செய்ய வாய்ப்பில்லை. 

தாங்கள் விரும்பிய நபர்களை இங்கே மோடி அரசு அனுமதிக்க மறுத்த காரணத்தால் அனுமதி இல்லையென்றால் கெடுப்போம் என்று வெளிப்படையாக மிரட்டல் தொனியில் பேசினாலும் மோடி அரசு இன்று வரையிலும் கண்டு கொள்ளவே இல்லை.

ராகுல் விடவில்லை. அதிக சந்தேகத்தைப் பயத்தை உருவாக்கி இன்று மக்கள் ஊசி போடப் பயப்படும் அளவுக்கு வந்து  நிற்கின்றனர்.

இப்போது வேறு சிலவற்றை நாம்  மனதிற்குள் வைத்திருக்க வேண்டும். 

விரைவில் குஜராத் தேர்தல் வரப்போகின்றது.  மயிரிழையில் தவற விட்ட சோகம் அது.  ஆட்சி அமைக்க வேண்டிய 92 சமஉ பெற முடியாமல் 77 பெற்று வருத்தப்பட்டு அடுத்த முறைக்குக் காங்கிரஸ் காத்திருக்கின்றது. 

பாஜகவும் சிறப்பான வெற்றியை ஒன்றும் பெறவில்லை. பெரும்பான்மை பெற்றுத் தான் ஆட்சி அமைத்திருந்த போதிலும் அருகே வந்து நிற்கும் காங்கிரஸ் இன்னமும் பாஜகவிற்குக் கண்ணில் பட்ட தூசி போல அச்சுறுத்தலாகத்தான் இருக்கின்றார்கள். 

அய்யா ப.சி தமிழ்நாட்டைப் பற்றி கவலைப்பபடாமல் தினமும் குளிர்சாதன அறைக்குள் அமர்ந்து கொண்டு ட்விட்டரில் குஜராத் குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டேயிருப்பதற்கு இது தான் முக்கியக் காரணம். 

இதனைத் தொடர்ந்து உத்திரப்பிரதேசத் தேர்தல் வரப் போகின்றது. பிரதமர் பதவிக்கு இது தான் இதயம்.  ஆனால் நொறுங்கிப் போனது காங்கிரஸ் ன் இதய வால்வுகள் மட்டுமல்ல. கேரளா வயநாடு வரைக்கும் கல்லுப்பு ராஜாவை விரட்டியடித்து தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று அலற வைக்கும் அளவிற்குத் தேர்தல் தோல்வி பயத்தைக் காங்கிரஸ் க்கு உணர்த்தியது.

உச்சநீதிமன்றம் ஆக்ஸிஜன் மற்றும் சுவாசக்கருவிகள் வழங்குவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க தணிக்கை குழு அமைத்தபின்பு சில நாட்களாக ராகுல் ராஜா அமைதியாக உள்ளார். அடுத்த எந்த ஆயுதத்தை எடுப்பது என்றதறியாமல் குழம்பிப் போய் இருக்கின்றார் என்றே நினைக்கின்றேன்.

எவர் செத்தால் எனக்கென்ன? எனக்கு என் மாலைக்காசு உண்டு என்பது தவறா? பாடையில் விழும் கூடுதல் காசு எனக்கு கூடுதல் லாபம் தானே?


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நிம்மதியே இல்லாமல், மன உளைச்சல், அதிர்ச்சி, பீதி, என ஒவ்வொரு தனிமனிதனும் (முக்கியமாக படிக்காத பாமரர்கள் அல்லது நல்ல அறிவாளிகள்) ஒவ்வொரு நாளும் அனுபவிப்பது 2014 ஆண்டுக்கு பிறகு தான்... அடடே... என்னவொரு வித்தியாசமான அனுபவம்...!

ஆனாலும் வெங்கோலன் அழுகை... அடேங்கப்பா... உலக நடிப்புடா சாமி...!

arul said...

https://m.facebook.com/story.php?story_fbid=10218156766381625&id=1562622139