Saturday, May 15, 2021

எது வாழ்க்கை?

இன்றைய தினம் வித்தியமான தினம். இதுவரையிலும் கடந்த முப்பது ஆண்டுகளில் எத்தனையோ நெருக்கடிகள், அவமானங்கள், ஏளனங்கள், அவமரியாதை சம்பவங்கள் நடந்துள்ளது. 90 சதவிகிதம் மறந்து விட்டது. சில தினங்கள் நினைவில் இருக்கும். அடுத்தடுத்த முயற்சியில் அதனை விட மேலே வந்து விடுவேன். பழைய மறந்து விடும். என் அடிப்படையில் மனநிலையில் எவ்வித மாற்றமும் உருவாக்காத எத்தனையோ நெருக்கடிகள் இன்று வரையிலும் என் நினைவில் இருந்தாலும் இன்றைய தினம் உருவாக்கிய தினம் என்னை ஒவ்வொரு நொடிப் பொழுதும் யோசிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது. இன்று  காலையிலிருந்து மதியம் வரைக்கும் உருவாக்கிய தாக்கமும், கடந்த சில தினங்களாக நான் இங்கே பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.




கடந்த நாற்பது தினங்களுக்கு முன் கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொள்ள திருப்பூர் அரசு தலைமை பொது மருத்துவமனை சென்று இருந்தேன். கூட்டம் இல்லை. இரண்டு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து விட்டேன். அடுத்த 36 மணி நேரம் உடம்பில் தாக்கம் இருந்தது. காய்ச்சல் இல்லை. உடல்வலி மற்றும் சோர்வு மட்டும் இருந்தது. நான் கொடுத்த நம்பிக்கையில் மனைவியும் அடுத்த சில தினங்களில் போட்டுக் கொண்டார். எனக்கு கோவாக்ஸின் அவருக்கு கோவிட்ஷில்டு. பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்யவில்லை. 

கடந்த ஆறாம் தேதி நான் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.  மனைவிக்கு 45 நாட்கள் என்று குறித்துக் கொடுத்து இருந்தார்கள். சமீபத்தில் உருவான தடுப்பூசி தட்டுப்பாட்டின் காரணமாக வரிசையாக நிஜமான தமிழ்நாட்டின் உண்மையான முகம் தெரியத் தொடங்கியது.

இணையம் வழியே பதிவு செய்வது என்பது வெட்டிக்கதையாகவே தெரிந்தது. முயன்று தோற்றுப் போனேன். மருத்துவமனையில் எனக்கு ஊசி போட்ட செவிலியர் ஓர் எண் வழங்கி இருந்தார். அவரை தினமும் தொடர்பு கொண்ட போது இன்று நாளை அடுத்த நாள் என்று கடந்து போய்க் கொண்டேயிருந்தது. எனக்குப் பயம் இல்லை. காரணம் வெளியே அதிகம் செல்வதில்லை என்றாலும் குறிப்பிட்ட நாளில் போட்டு விட வேண்டும் என்ற எண்ணம் நிராசையாக மாறிக் கொண்டே வந்தது.

எப்போதும் 40 நாட்களுக்குத் தேவைப்படுகின்ற பொருட்கள் அனைத்தும் வீட்டில் இருக்கும். காய்கறிகள் வீட்டுக்கே வந்து விடும். சின்னச் சின்ன சாமான்கள் அருகே உள்ள கடைகளில் வாங்க முடியும். பெரிதான தேவை இல்லை. அதிகம் வெளியே செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. என் வேலையும் வீட்டில் இருந்தே செய்ய முடிகின்ற காரணத்தால் வெளி உலகத்திலிருந்து இயல்பாகவே துண்டித்து இருந்தது. 

மகள்கள் எப்போதும் போல அவர்களின் கல்வியில் அன்றாடம் கவனம் செலுத்திக் கொள்வதோடு அவர்களுக்குத் தேவையான சந்தோஷங்களைக் குறைவில்லாமல் நிறைவேற்றிக் கொண்டிருக்க திட்டமிட்டபடி ஒவ்வொன்றும் சரியாகவே சென்று கொண்டிருந்தது.

ஆனால் நான் தினமும் வெளியே சில கிலோ மீட்டர் செல்லும் தினசரி நடைப்பயிற்சியை நிறுத்த வேண்டிய சூழல் உருவானது. வீட்டுக்கு அருகே, வீட்டுக்குள் முடிந்தவரை உடற்பயிற்சி என்ற பெயரில் ஒப்பேற்றிக் கொண்டிருந்தேன். மகள்களும் இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

கடந்த சில தினங்களாக வீட்டுக்கு அருகே அதிகமான பிணியூர்திகளின் சப்தம் கேட்கத் தொடங்கியது.  அருகே உள்ள கடைக்குச் செல்லும் போது சாலையில் இடைவெளி விட்டு ஓடிக் கொண்டிருந்த பிணியூர்திகளின் சப்தங்கள் மனதில் சிறிதாக தாக்கத்தை உருவாக்கத் தொடங்கியது. இருந்தாலும் மனதில் நிலையாமை தத்துவம் என்பதனை முழுமையாக உணர்ந்த காரணத்தால் பார்க்கும் காட்சிகளை உள்ளே அனுப்பாமல் மறந்து விட்டேன். 

இன்று காலை தொடர் முயற்சியாக எப்போதும் மருத்துவமனையில் தொடர்பு கொள்ளும் நபர் மூலம் தடுப்பூசி வந்து விட்டதா? என்று கேட்ட போது மற்றொரு செவிலியர் எண் கொடுத்து அவரைக் கேளுங்கள் என்றார்? உடனே கேட்ட போது ஆச்சரியமாக 50 ஊசிகள் மட்டும் இன்று வருகின்றது. உடனே வாருங்கள் என்றார். 

என் வீட்டிலிருந்து ஏழு கிலோ மீட்டரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற போது பத்து இடங்களில் தடுக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு கையிலிருந்து சீட்டைக் காட்டி அதன் பின்னே மருத்துவமனை சென்று சேர்ந்தேன். சாலையில் தடுப்பு மூலம் உருவாக்கப்பட்ட கூட்டமும், வாகனமும், தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட நபர்களும் மனதில் பெரிய பாதிப்பை உருவாக்கியது.

மருத்துவமனையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டு வெளியே வந்த போது அங்கே இருந்த கூட்டம், அழுகுரல்கள், சாப்பாடு பொட்டலத்திற்காக நின்று கொண்டிருந்த கூட்டங்கள் என்பதனைப் பார்த்து அடுத்த பாதிப்பை மனதில் உருவாக்கியது.

திரும்பி வந்து கொண்டிருந்த உயர் காவல் துறை அதிகாரிகளால் தடுக்கப்பட்டு அவர்களால் சோதிக்கப்பட்டு, நகர்ந்து வெளியே வந்த போது அடுத்த பாதிப்பு உருவானது.

வீடு வந்து சேர்வதற்குள் பதறி அடித்துத் தொடர்ந்து சாலையில் ஓடிக் கொண்டிருந்த பிணியூர்திகளின் வாகன வரிசைகள், அதன் ஒலியின் சப்தம் என் மனதில் நீண்டதொரு தாக்கத்தை உருவாக்க தலைவலி உருவாக எப்போது நான் விரும்பி அருந்தும் பில்டர் காபி கடைக்குச் சென்றால் இன்று முதல் காபி வழங்கப்படுவதில்லை என்றார்கள்.

ஊரடங்கு போல வாழ்க்கை. ஆனால் முழுமையான ஊரடங்கு இல்லை.  நமக்கு நோய் இல்லை. ஆனால் நம்மைச் சுற்றியிருக்கும் காட்சிகள் அனைத்தும் நோயுற்ற சமூகம். மூன்று நேரமும் சாப்பிட அடிப்படை வசதிகள் நம்மிடம் உள்ளது. ஆனால் சுற்றிலும் ஒரு சோற்றுப் பொட்டலத்துக்குக் கையேந்தும் நிலைமை. 

எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு நெருங்கிய நண்பரை அழைத்துப் பேசினேன். அவர் கட்சி சார்ந்த செயல்பாட்டில் இருப்பதால் திருப்பூருக்குள் நடப்பது என்ன? என்பது போன்ற பல விசயங்கள் தெரியும்.

மாவட்ட நிர்வாகம் தொடங்கி, தனியார் மருத்துவமனைகள் வரைக்கும் இந்தப் பெருந்தொற்று காலத்தை எப்படிக் காசாக மாற்றுகின்றார்கள் என்பது போன்ற பல விபரங்கள் புள்ளிவிவரங்களுடன் படிப்படியாக ஒவ்வொன்றாக எனக்குப் புரிய வைத்தார்.

என் தொடர்பில் இருக்கும் குறிப்பிட்ட சிலருடன் பேசும் போது அவர்கள் உரையாடலை முடித்து விடைபெறும் போது இவ்வுலகத்தில் நாம் கற்றுக் கொண்டது என்ன? நாம் என்ன தான் புரிந்து வைத்துள்ளோம்? நமக்கு என்ன தான் திறமை உள்ளது? போன்ற குழப்பங்கள் ஒவ்வொருமுறையும் வந்து விடுகின்றது.

ஒரு தடுப்பூசி போட்டு முடித்து வந்த பிறகு நூறு கோடி லாபம் சம்பாதித்த உணர்வு வந்தது ஏன்? என்ற எண்ணம் மேலோங்கியது. உயிர்பயமா? இல்லை. ஆனால் நம் சுயமரியாதை ஒவ்வொரு இடத்திலும் நசுங்கி அவமானப்பட்டு நாம் இயல்பாக பெற வேண்டிய அனைத்துக்கும் அல்லாடி இந்த பிழைப்பு பிழைக்க வேண்டியுள்ளதே என்ற ஆதங்கம் மனதில் வந்த போது இதுவரையிலும் இங்கே வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று மனம் கேள்வி கேட்டது. நம்மை விடப் பல மடங்கு எல்லாவிதங்களிலும் பின்தங்கி வாழும் மக்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்ற எண்ணம் வந்தாலும் நசுக்கப்பட்ட புழுவிலிருந்து வெளியே வரும் பிசின் போல எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டேயிருந்தது.

இன்று அரசு நியாயவிலைக்கடைகள் மூலம் ஒவ்வொரு பயனாளர்களுக்கும் ரூபாய் 2000 வழங்க, பெறுவதற்கு ஒவ்வொரு கடைகளிலும் நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே வந்தேன். தூறலும் லேசான மழையிலும் அவர்கள் அசையாமல் கடை எப்போது திறப்பார்கள் என்று காத்திருப்பதையும் பார்த்துக் கொண்டே வந்தேன். எத்தனையோ நவீனத் தொழில் நுட்பங்கள் மூலம் இவர்கள் கைக்கு எளிதாக பணம் சேர்த்து விட ஆயிரம் வழிகள் இருந்தாலும் இங்குள்ள எந்த ஆட்சியாளர்களும் மக்களை ஏன் எப்படிக் கையேந்த வைக்கின்றார்கள்? இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்பதனையும் யோசித்துப் பார்த்தேன்.

ஏழையோ? நடுத்தரவர்க்கமோ? எவராயினும் நீங்கள் எங்களைச் சார்ந்து இருந்தே வாழப் பழகிக் கொள்ளுங்கள். உங்களை இயல்பான முறையில் எளிதான முறையில் சொகுசாக வாழ நாங்கள் அனுமதித்தால் நீங்கள் எங்களைக் கேள்வி கேட்பீர்கள்? எங்கள் அதிகாரம் பறிபோகும்? எங்களுக்குத்தான் ஆபத்து என்பதனை ஒவ்வொருவரும் திட்டமிட்டே செய்கின்றார்கள் என்றே தோன்றியது.

மருத்துவமனைகளில் வரக்கூடிய தடுப்பூசிகளைத் தனியார் மருத்துவமனைக்கு விற்று காசு பார்க்கும் கூட்டம்.  தடுப்பூசிக்கு வந்து நிற்பவர்களை இன்று தடுப்பூசி வராது என்று திட்டமிட்டு சிலரின் அறிவுறுத்தலின்படி நகர்த்தும் பணியாளர்கள். ஒவ்வொரு நாளும் இத்தனை கோப்புகள். ஒரு கோப்புக்கு இத்தனை ஆயிரம் லட்சம் என்று வசூலிக்கும் இங்குள்ள அதிகார வர்க்கம் வரைக்கும் அனைத்தையும் பார்த்துக் கேட்டு விட்டு மனம் இப்போது வரைக்கும் அல்லாடிக் கொண்டேயிருக்கிறது. 

நாட்டில் போர் நடந்தால்  எப்படி மக்கள் தங்களைத் தற்காத்துக் கொண்டு வீட்டுக்குள் பயந்து முடங்கிக் கிடக்க வேண்டுமோ அதே போன்ற சூழலில் தான் இன்றைய வாழ்க்கை உள்ளது.

பயோ வார் என்கிறார்கள். 

நுண்கிருமி அரசியல் என்கிறார்கள். 

தடுப்பூசி லாபிக்காக பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கிய போர் என்கிறார்கள்?

எது வாழ்க்கை?

ஏன் இந்த வாழ்க்கை?

இன்னமும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியான வாழ்க்கை வாழ வேண்டும்?

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... வாழ்த்துகள்...

arul said...

https://www.weforum.org/events/the-davos-agenda-2021
இதை படித்து புரிந்து கொண்டு எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஜோதிஜி said...

COVID-19 தொற்றுநோய், எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ மட்டுமே நமது சிக்கலான, ஒருவருக்கொருவர் சார்ந்த உலகின் பொருளாதார, சுற்றுச்சூழல், சமூக மற்றும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள முடியாது என்பதை நிரூபித்துள்ளது. தொற்றுநோய் உலகை மாற்றாது, ஆனால் அது துவங்குவதற்கு முன்பே வெளிப்படையான அமைப்பு மாற்றங்களை துரிதப்படுத்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் தோன்றிய பிழையான கோடுகள் இப்போது 2021 ஆம் ஆண்டில் முக்கியமான குறுக்கு வழிகளாகத் தோன்றுகின்றன. முன்னுரிமைகளை மீட்டமைக்க வேண்டியதன் அவசியமும், சீர்திருத்த முறைகளின் அவசரமும் உலகெங்கிலும் வலுவாக வளர்ந்து வருவதால் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் முக்கியமான தேர்வுகளை எடுப்பதற்கும் நேரம் வேகமாக நெருங்கி வருகிறது.

இந்த சவாலான புதிய சூழலில் தேவையான கொள்கைகள், கொள்கைகள் மற்றும் கூட்டாண்மைகளை வடிவமைக்க உலகளாவிய தலைவர்களின் அணிதிரட்டல் தான் டாவோஸ் நிகழ்ச்சி நிரல்.

ஜோதிஜி said...


2021 ஆம் ஆண்டில் விரைவில் அனைத்து தரப்பு தலைவர்களும் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்த மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இந்த நோக்கத்திற்காக, உலக பொருளாதார மன்றம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பகமான தளமாக பணியாற்றியுள்ளது ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வணிக, அரசு, சர்வதேச நிறுவனங்கள், சிவில் சமூகம் மற்றும் கல்வித்துறை தலைவர்கள் கூடுகிறார்கள்.

உலகளாவிய நிரலாக்கத்தின் முழு வாரமும் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் புதுமையான மற்றும் தைரியமான தீர்வுகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், அடுத்த ஆண்டில் வலுவான மீட்சியை ஏற்படுத்துவதற்கும் தலைவர்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்படும்.

ஜோதிஜி said...


டாவோஸ் நிகழ்ச்சி நிரல் உலக பொருளாதார மன்றத்தின் சிறந்த மீட்டமைப்பு முயற்சியைத் தொடங்குவதையும், வசந்த காலத்தில் சிறப்பு வருடாந்திர கூட்டத்தைத் தயாரிப்பதையும் குறிக்கும். ஒவ்வொரு நாளும் கிரேட் மீட்டமைவு முயற்சியின் ஐந்து களங்களில் ஒன்றில் கவனம் செலுத்தும்:

திங்கள் 25 ஜனவரி: ஒருங்கிணைந்த, நிலையான மற்றும் நெகிழக்கூடிய பொருளாதார அமைப்புகளை வடிவமைப்பதில் சிறப்பு முகவரிகள், தலைமைத்துவ குழுக்கள் மற்றும் தாக்க அமர்வுகள்.

செவ்வாய் 26 ஜனவரி: பொறுப்பான தொழில் மாற்றம் மற்றும் வளர்ச்சியை இயக்குவது குறித்த சிறப்பு முகவரிகள், தலைமைத்துவ குழுக்கள் மற்றும் தாக்க அமர்வுகள்.

புதன்கிழமை 27 ஜனவரி: எங்கள் உலகளாவிய காமன்களின் பணிப்பெண்ணை மேம்படுத்துவது குறித்த சிறப்பு முகவரிகள், தலைமைத்துவ குழுக்கள் மற்றும் தாக்க அமர்வுகள்.

ஜனவரி 28 வியாழன்: நான்காவது தொழில்துறை புரட்சியின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான சிறப்பு முகவரிகள், தலைமைத்துவ குழுக்கள் மற்றும் தாக்க அமர்வுகள்.

ஜனவரி 29 வெள்ளிக்கிழமை: உலகளாவிய மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சிறப்பு முகவரிகள், தலைமைத்துவ குழுக்கள் மற்றும் தாக்க அமர்வுகள்.

ஜோதிஜி said...




டாவோஸ் நிகழ்ச்சி நிரல் உலகளாவிய மக்களுக்கும், மன்றத்தின் 25,000,000+ சமூக ஊடகப் பின்தொடர்பவர்களுக்கும் அடுத்த ஆண்டை வடிவமைக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 150 நாடுகளில் 430 க்கும் மேற்பட்ட நகரங்களில் இது ஈடுபடும், இது குளோபல் ஷேப்பர்ஸ், உரையாடல், செயல் மற்றும் மாற்றத்தை இயக்கும் இளைஞர்களின் வலையமைப்பாகும்.

Yaathoramani.blogspot.com said...

இதே நிலையே இங்கும்..இரண்டாம் டோஸுக்கு அலைந்த பாடு இதுவே தொற்றை வரவைத்துவிடுமோ எனப் பயமூட்டியது நிஜம்...

arul said...

World economic forum எனும் அமைப்பு உலக பெரு முதலாளிகளின் திட்டங்களை தீட்டி அதை எப்போது செயல்படுத்த வேண்டும் என்று அறிவிக்கிறது அவ்வளவுதான்..இதில் மக்களை எப்படி இன்னும் digital சிறைச்சாலைக்குள் கொண்டு போக போகிறார்கள் என்பதன் தொகுப்பு மட்டுமே அங்கே கட்டுரைகளின் வடிவில்..மக்கள் மேலும் அடிமைகள் ஆவார்கள்..4ம் தொழில் புரட்சிக்கான முன்னோட்டம் ..மக்கள் மேலும் உறிஞ்சப்படுவார்கள்..

arul said...

பெரு வணிகம் மக்கள் தொகையை குறைப்பதற்கான செயல் திட்டமே கோவிட் 19 ...

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு டோஸ் மருந்துகளும் போட்டுக் கொண்டேன். எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. முதல் டோஸ் தலைநகர் தில்லியில்! இரண்டாவது திருச்சி பெரிய ஆஸ்பத்திரியில்! இரண்டு முறையும் ஒன்று ஒன்றரை மணி நேரத்தில் வீடு திரும்பி விட்டேன்.

பல இடங்களில் தட்டுப்பாடு என்பது வேண்டுமென்றே ஏற்படுத்த ஒன்று போலவே தெரிகிறது. பணம் சம்பாதிக்க ஆசை - எரிகிற கொள்ளியில் லாபம் பார்க்க நினைக்கும் ஆசை உள்ளவர்கள் அதிகமாகி விட்டார்கள். வேறென்ன சொல்ல!

கிரி said...

கோவி ஷீல்டு தடுப்பூசியை விட கோவாக்சின் தட்டுப்பாடு அதிகம் காரணம், அதன் உற்பத்தி திறன் குறைவு என்பதால்.

வருண் said...

முதல் அலைக்கும் ரெண்டாவது அலைக்கும் இடைப்பட்ட காலம் 4-6 மாதம். இந்த சமயத்தை நன்கு பயன்படுத்திய நாடு இஸ்ரேல். இந்தியாவிற்கும் அந்த வாய்ப்பு இருந்தது. நம்மளும் அதுபோல் வாக்சினை துரிதப்படுத்தி இருக்கலாம்.

கோவாக்சின் இந்தியாவே தயாரித்த வாக்சின் என்கிறார்கள்.

ஏன் கோடிக்கணக்கான டோஸ் தயாரிக்க முடியவில்லை?

You need to understand, Vaccine has "dead virus"! You need to make "lot of virus first" and then you need to kill them to make "dead virus".

Making lots of virus is NOT a JOKE. It is not as easy as we think. Making something is different from making something in "lot of amount" in a short time. Biotechnoly scale-up may not be easy.

வாக்சின் தயாரிக்கிறது ஒரு பக்கம். அதில் வெற்றி அடைந்தாலும் குறைந்த நாட்களில் எத்தனை வாக்சின் தயாரிக்க முடியும் என்பது இன்னொரு விசயம். ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான வாக்சின் தயாரிப்பது என்பது ஒரு பிரச்சினையாக இருந்து இருக்கலாம். அந்த "கேப்பபிலிட்டி" நம்மிடம் இருந்ததா இல்லை இருக்கிறதா என்னனு தெரிலை.

இன்னொரு பக்கம், நம்மாளு இன்னும் நாட்டு மருந்து, கசாயம், உப்பு தண்ணியில் வாய், தொண்டையை க்ளீன் பண்ணுவது, இதெல்லாம் வைரஸை கொன்னுடும்னு நம்புறாங்க. இதுபோல் நம்பிக்கையில்தான் படித்த்வர்கள்லகூட பலர் இருக்காங்க.

ஜோதிஜி said...

தயாரிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதிலும் அரசியலை புகுத்த நம்பிக்கையின்மையை விதைக்க தலைகீழாக மாறியது. மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினர். தடுப்பூசி உருவாக்கிய நேரம் முதல் குறிப்பிட்ட நேரத்திற்குள் தான் பாதுகாக்க முடியும். அதிலும் தமிழ்நாடு அதிகமாக வீணாக்கியது. இதன் காரணமாக ஏற்றுமதி செய்ய வேண்டிய சூழல். மற்ற நாடுகளுடன் நாம் வைத்திருக்கும் பொருளாதார ஒப்பந்தம் சார்ந்த விசயங்களும் இதில் அடக்கம். இன்று வரையிலும் என் தொடர்பில் இருக்கும் பலபேரும் ஊசி போட மறுத்து புறக்கணித்தே வருகின்றார்கள். இன்று வரையிலும் சரியான திட்டமிடுதல் இல்லை.