Sunday, May 23, 2021

காங்கிரஸ் கிருமிகள் உருவாக்கிய டூல்கிட்

ராகுல், சோனியா மற்றும் காங்கிரஸ் கிருமிகள் உருவாக்கிய டூல்கிட்

கடந்த மே 18 அன்று மத்திய அரசாங்கம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு தடுப்பூசி வழங்கப்பட்டது என்பதனை பட்டியலை வெளியிட்ட அதே தினத்தில்  எதிர்க்கட்சியாக இருக்க 57 இருக்கைகள் பெற முடியாமல் 52 இருக்கைகள் மட்டுமே பெற்று தகுதியில்லாமல் இருக்கும் காங்கிரஸ் செய்து இருந்த புனித காரியம் ஒன்று வெளி வந்தது.  
இதனை வெளியே கொண்டு வந்தவர் Sambit Patra பாஜக தேசியச் செய்தித் தொடர்பாளர். அதன் பெயர் டூல்கிட்.

நாம் வாட்ஸ்அப் செயலி வழியாக பலவற்றைப் பகிர்ந்து கொள்வது போல ஓர் ஆவணத்தை உருவாக்கி அதனைச் சார்ந்திருக்கும் குழுவினருக்குப் பகிர்வது. அந்த ஆவணத்தில் கொடுக்கப்பட்ட திட்டமிட்ட விசயங்களின்படி செயல்படத் தூண்டுவது. மாற்றங்கள் உருவாக உருவாக அதில் சேர்ப்பது, அதனை அப்படியே மீண்டும் பகிர்வது. எவரும் உரையாடத் தேவையில்லை. புரிந்து கொண்டு அவரவர் தத்தமது செயல்பாடுகளில் வழியே நடைமுறைப்படுத்தினால் போதுமானது.

இப்படியான ஒரு டூல் கிட்டை காங்கிரஸ் ஆராய்ச்சி மையம் (?) என்ற அமைப்பு சார்பாக (5 பக்கங்கள்) உருவாக்கியவரின் பெயர்   சௌமியா வர்மா   (இவர் டூல்கிட் வெளியானவுடன் தன் ட்விட்டர் கணக்கு மற்றும் லிங்டு இன் கனக்கை இரவோடு இரவாக அழித்து முடித்து விட்டு இப்போது காணாமல் போய்விட்டார்) இவரின் பாஸ் கவுடா காங்கிரஸ் முக்கிய புள்ளி. 

சௌமியா தலைமையில் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் உள்ள கம்யூனிச ஆதரவு தளத்தில் செயல்பட்டுக் கொண்டு இருப்பவர்களையும் ஒருங்கிணைத்து இதனை உருவாக்கியிருந்தார். 

தடுப்பூசி அரசியல்

இதில் ஏழு அம்சங்கள் இருந்தது.  

1. பாஜக என்ற கட்சிக்குக் கெட்ட பெயர் உருவாக்க வேண்டும். 

2. இந்தியாவில் கொரோனா பரவியதற்குக் காரணம் மோடி  

3. நடந்து முடிந்த கும்பமேளா மூலம் மட்டுமே கொரோனா பரவியது. 

4. சீனாவில் இருந்த வைரஸ் ன் பெயரை இந்திய வைரஸ் மற்றும் மோடி வைரஸ் என்று மாற்றி தொடர்ந்து அழைக்க வேண்டும். 

5. குஜராத்தில் நடந்த கோவிட் தொற்று மற்றும் அதன் மரணங்களைப் பற்றித் தொடர்ந்து பேச வேண்டும். 

6. இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளை அவமதித்துத் தொடர்ந்து பேசுதல் 

7. இந்துத்துவ அரசியல் தான் கொரோனா இந்தியா முழுக்க பரவ காரணமாக இருந்தது என்பதனை நிரூபித்தல்.

கடந்த சில மாதங்களாக வெளிநாட்டுப் பத்திரிக்கைகளில் இந்தியா குறித்தும், மோடி குறித்தும் திடீர் திடீரென்று தலையங்கம், கவர் ஸ்டோரி என்று மாறி மாறி வந்து கொண்டிருப்பதும், இந்தியா பாதுகாப்பற்ற நாடு என்பதனை ஒவ்வொரு ஊடகமும் வெவ்வேறு பாதைகளில் பயணித்து புதுப்புது வார்த்தைகளில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணத்தை இந்த டூல் கிட் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.  

காரணம் இதில் உள்ள ஒவ்வொரு விசயத்தையும் வெவ்வேறு நபர்களிடம் கொடுத்து அவர்கள் அதனைப் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்பது அடிப்படைக் கட்டளை.

உதாரணமாக உத்தமர் அய்யா ப.சி அவர்கள் தொடர்ந்து குஜராத் கோவிட் மரணங்கள் குறித்தே பேச வேண்டும். எழுத வேண்டும்.

கல்லுப்பு ராகுல் ராசா பிஎம் கேர் குறித்து மட்டும் தொடர்ந்து ட்விட்டரில் ட்விட் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

சோனியா மோடியின் இந்தியாவின் நிர்வாகம் மோடி அவர்களால் எப்படிச் சீர்குலைந்து போனது என்பதனைப் பற்றி பேட்டி கொடுக்க வேண்டும்.

காங்கிரஸ் ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம் கும்பமேளா மூலம் எப்படிக் கொரோனா பரவியது என்று தொடர்ந்து செய்திகளை உருவாக்கி ட்விட் செய்ய வேண்டும்.

காங்கிரஸ் ல் உள்ள அல்லு சில்லுகள் பிஎம் கேர் மூலம் வாங்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் தரமற்றது என்பதனை உரக்கச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அடுத்த கோஷ்டி கட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் பாராளுமன்றக் கட்டிடம் குறித்தும், அதன் செலவுகளை அதிகப்படுத்திச் சொல்லிக் குழப்பத்தை உருவாக்க வேண்டும். அது மோடிக்காகவே கட்டப்படும் வசந்த மாளிகை என்பதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இது தான் இந்த டூல்கிட் சொல்லும் செய்திகள்.

இப்படிப் பிரித்து வைத்துச் செயல்பட்டதன் விளைவு கடந்த இரண்டு மாதங்களாக எலும்பு பொறுக்கி மட்டுமே இதுவரை வாழ்ந்த கூட்டத்தை ஒன்றிணைத்து தாங்கள் நினைத்ததைச் செய்து வந்த விசயங்கள் அனைத்தும் இந்த டூல்கிட் அம்பலப்படுத்தியது. 

யார் உருவாக்கினார்கள்? எங்கிருந்து உருவாக்கப்பட்டது? யார் பின்புலத்தில் இருந்தார்கள்? யாருக்குப் பகிரப்பட்டது? எத்தனை ஊடகங்கள் இதற்காகச் செயல்பட்டார்கள்? போன்ற அனைத்தையும் பாஜக வில் உள்ளவர்கள் ஒவ்வொன்றாக வெளியிட வெளியிட  காரணகர்த்தாவாக இருந்த கவுடா அவர்கள் பத்திரிக்கையாளர்களை அழைத்து பாஜக தான் பொய் செய்திகளைப் பரப்புகின்றது. நாங்கள் காவல்துறையிடம் வழக்க பதிவு செய்யக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கதறத் தொடங்க மற்றொரு திருப்பம் உருவானது.

டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்காக இன்று ஒருவர் தாக்கல் செய்துள்ளார். அவர் பெயர் சேகர் ஜா. அத்துடன் சில கோரிக்கைகளையும் வைத்துள்ளார்.  

இந்தியாவைத் துண்டாடும் சக்திகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படுகின்றது. இதனை என்ஐஏ விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.  இந்த டூல்கிட் பின்னால் உள்ள அனைத்து உண்மைகளையும் விசாரித்து இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.  இது உண்மையெனத் தெரிந்தால் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தன் கோரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இன்னமும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றுக் கொண்டபிறகு என்ன மாறுதல்கள் உருவாகும் என்று தெரியவில்லை.

காங்கிரஸ் க்கு என்ன தான் பிரச்சனை? இந்த அளவுக்குக் கேவலமாக இறங்கியதன் காரணம் என்ன?

தற்போதைய சூழலில் பாஜக வை எதிர்த்து நிற்க முடியவில்லை.

மோடியின் செல்வாக்கை எந்த வகையிலும் சீர்குலைக்க முடியவில்லை.

கட்சிக்கு ஒரு மாநிலத்தில் கூடத் தொண்டர்கள் இல்லை. 

ஆதரவாளர்களும் இல்லை. 

கூட்டணிக்கட்சிகள் காங்கிரஸை மதிப்பதே இல்லை. எவரும் ராகுலைப் பொருட்படுத்துவதே இல்லை. கட்சி மேல் நம்பிக்கை கொண்டவர்கள் கூட யாருமில்லை.  

ஐம்பது ஆண்டு காலமாக பெற்ற சுகவாழ்க்கை இல்லாமல் போய்விட்டது. தெரு நாய் கூடத் திரும்பிப் பார்ப்பதில்லை.

இவையெல்லாம் மாற வேண்டுமென்றால் அதிகாரம் வேண்டும். அதற்கு என்னவேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் பேசலாம். 

எப்பாடு பட்டாவது வருகின்ற குஜராத் மற்றும் உபி தேர்தலோடு பாராளுமன்ற இடத்தில் வென்றாக வேண்டும். குறைந்தபட்சம் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தாக வேண்டும்.  அதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த டூல்கிட்.

என்னவொரு இம்சை என்றால் ராகுல் உப்பு விற்கப் போனால் மழை பெய்வதும், மாவு விக்கப்போனால் காற்றடிப்பதும் அவர் வாங்கி வந்த வரமாக உள்ளது. இதுவும் அம்பலமாகி அம்மணமாக மாற்றிவிட்டார்கள்? அடுத்து என்ன செய்வார் என்று தெரியவில்லை.

ஒரு வேளை மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்து விட்டால்?

ஒட்டன்சத்திரம் அருகே ஜோதிமணி எம்பி துணையுடன் இயற்கை பிரியாணி செய்து பிழைக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.

அதற்கு சோனியா, மச்சான், அக்கா சம்மதிப்பார்களா?


No comments: