Showing posts with label குரல்வழிப் பதிவு. 4 தமிழ் மீடியா. Show all posts
Showing posts with label குரல்வழிப் பதிவு. 4 தமிழ் மீடியா. Show all posts

Monday, June 08, 2020

அச்சு ஊடகங்களை அலற வைத்த கொரோனா Tamilnadu Head line news



கொரானாவின் நான்காவது ஊரடங்கின் போது தமிழகத்தில் ஒரு அதிசயம் நடந்தது. தமிழகத்திலிருந்து வெளிவரும் அச்சு ஊடக முதலாளிகள் ஒன்று சேர்ந்து பாரபட்சமின்றி தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைச் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் சில முதலாளிகள் அதில் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். ஒரு நூற்றாண்டுக் காலப் பாரம்பரியம் கொண்டு மக்கள் விருப்பத்தில் முன்னிலையில் இருக்கும் தினசரி பத்திரிக்கைகள் முதல் வாரம் தோறும் சில லட்சம் பிரதிகள் விற்கும் வார இதழ்கள் வரைக்கும் கடந்த பத்து வாரத்தில் மிகப் பெரிய பொருளாதார இழப்பைச் சந்தித்து விட்டன. 

அச்சடித்த பத்திரிக்கைகளும், இதழ்களும் அச்சகத்திலேயே இருக்கும் சூழல் உருவானது. தடைகளைத் தாண்டி தமிழகம் எங்கும் வந்த போதிலும் கொரானா பயத்தால் விநியோகிப்பவர் யாருமில்லாமல் பத்திரிக்கைகள் அங்கங்கே விநியோகிக்காமல் தேங்கிப் போயின.  பல முதலாளிகள் அழாத குறையாகப் பேட்டி கொடுத்தனர்.


Sunday, May 31, 2020

தொற்று நோய் அரசியல்



குரல்  வழிப் பதிவு - 4 

தொற்று நோய் அரசியல்

மே 31 2020

நான்காவது ஊரடங்கின் கடைசி நாள் இன்று.  

68 நாட்கள் ஊரடங்கென்பது 73 வருட சுதந்திர இந்தியாவிற்குப் புதிது. இந்தியர்களுக்கு விருப்பமில்லா அனுபவமிது. 

Sunday, May 24, 2020

புலம்பெயர்த் தொழிலாளர்கள் - அகதியா அனாதையா (JothiG's Voice)

குரல்வழிப் பதிவு -  3

ஜோதிஜியின் வாரம்தோறும் ஒரு செய்தி.

"தமிழகத்தின் தலைப்புச் செய்தி"க்கு ஆதரவளிக்கும் உலகத் தமிழர்கள்  அனைவருக்கும் வணக்கம். 

இன்று இந்தியாவில், கொரானா, தொற்று நோயை விட முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது புலம் பெயர் தொழிலாளர்கள். நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியலாக மாற்றப்பட்டுள்ளது.  

ஏதாவது நல்லது நடந்துருக்கும் என்று நம்புகிறீர்களா? வாருங்கள் பேசுவோம்.  


Sunday, May 17, 2020

கொரோனா என்பது நோய் அல்ல..! | 4TamilMedia


குரல்வழி பதிவு (ஜோதிஜி பேசுகிறேன்) - 2

கொரானா கால நினைவுகள்

வணக்கம்.

கோடைக் காலம், குளிர்காலம் என்று நாம் இதுவரையிலும் சொல்லி கொண்டிருந்த காலத்தோடு இனி கொரானா காலம் என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிகழ் காலம், இறந்த காலம், எதிர்காலம் என்று மூன்று காலங்களைப் பற்றித்தான் நாம் இதுவரையிலும் பேசியுள்ளோம். ஆனால் அடுத்த 25 வருடங்கள் கழித்துக்கூட இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கும் கொரானா காலத்தை தலைமுறைகள் பேசப் போகின்றார்கள்.

தமிழகத்தில் 1980க்கு முன்னால் பிறந்த அனைவருக்கும்  வறுமை, பசி, பட்டினி, என்று எல்லாமே ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கலந்து இருந்தது. கடைசியாக 1974 ல் பஞ்சம் ஒன்று வந்தது.  அதற்குப் பின்னால் சூழல் மாறியது.  தமிழகம் பல வகைகளில் முன்னேற்றம் அடைந்தது.  1990க்கு பிறகு மொத்த இந்தியாவின் முகமும் மாறியது.  ஏற்கனவே வளர்ந்து கொண்டிருந்த தமிழகத்தின் முகம் முழுமையாகவே மாறியது. 

Monday, May 11, 2020

தமிழகத்தின் தலைப்புச் செய்தி- என் குரல் வழிப் பதிவு

10-05-2020

2020 ஜூன்/ஜூலையுடன் எழுதத் துவங்கி 11 ஆண்டுகள் முடியப் போகின்றது. 

கடந்து போன 11 ஆண்டுகளில் தொழில் நுட்ப ரீதியாகப் பல மாற்றங்கள் நடந்துள்ளது.  ஆனால் நான் எந்தப் பக்கமும் செல்லவில்லை. அமேசான் தளம் எனக்குப் போதுமானதாக இருந்தது.

நேற்றைய முன்தினம் திரு. மலைநாடன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது சின்னதாகப் பொறி ஒன்று உருவானது.  அதன் விளைவு தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

வாரந்தோறும் தமிழகத்தில் நடந்த, நடக்கும் முக்கிய நிகழ்வுகளை என் குரல்வழியே உலகத்திற்குத் தெரிவிக்கப் போகின்றேன்.  

4 தமிழ் மீடியா தளத்தில் தான் என் டாலர் நகரம் தொடர் வந்து பலத்த வரவேற்பைப் பெற்றது.  திரு. மலைநாடன் தான் இதனைப் புத்தகமாகக் கொண்டு வந்தே தீர வேண்டும் என்று சாதித்தும் காட்டினார்.

இப்போது வேறொரு பாதையில் கைபிடித்து அழைத்துச் செல்கின்றார்.  

ஆறு நிமிடப் பேச்சு.  

உங்கள் விமர்சனங்களை அறியத் தாருங்கள்.