சுய ஊரடங்கு 3.0 - 45
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 17 வரை)
முன்பு பஞ்சம். இப்போது வைரஸ்
கொரானா குறித்து அச்சம் கொள்பவர்கள், என்ன ஆகப் போகிறதோ? என்று கவலை கொள்பவர்கள் அவசியம் (சற்று நீளமான பதிவு) வாசிக்கவும். ஆனாலும் இன்றும் இந்தியா முன்னேறிக் கொண்டே தான் இருக்கின்றது. வெறுமனே பயப்படாதீர்கள் என்று சொல்வதை விட எப்படிப்பட்ட இடர்களைக் கடந்து வந்துள்ளோம் என்பதனை உணர்ந்து கொண்டால் போதும்.
•••
மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாகச் செயல்படுகின்றது. எல்லாத்துறைகளும் தமிழகத்தில் முதல்முறையாக ஒருங்கிணைந்து தெளிவாகச் செயல்படுகின்றது. ஓய்வு பெற்ற மருத்துவர்கள், நிபுணர்கள், இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்று பாரபட்சமின்றி அனைவரையும் பணி செய்ய தமிழக அரசு வரவழைத்து உள்ளனர். தன்னாலான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. எல்லைப்புற மாநிலங்கள் மூடப்பட்டுள்ளது. இது தான் முக்கியம்.
