Showing posts with label குடிகாரர்கள். Show all posts
Showing posts with label குடிகாரர்கள். Show all posts

Friday, May 29, 2020

குடிகார கொரானா அவஸ்த்தைகள்

சுய ஊரடங்கு 4.0 - 71


Corona Virus 2020


(மாா்ச் 25 முதல் மே 31 வரை)

தமிழகத்தில் சென்னை மாவட்ட காவல்துறைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை தவிர மற்ற பகுதிகளில் கடந்த 16ம் தேதி 3,600 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டு மதுவிற்பனை செய்யும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் வழங்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வந்தது. மணிக்கு 70 டோக்கன்கள் வீதம் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால், பெரும்பாலான கடைகளில் இந்த நடைமுறையை ஊழியர்கள் பின்பற்றவில்லை. இதேபோல், டோக்கன் உள்ள நபர் எவ்வளவு வேண்டுமானலும் மதுபானம் வாங்கிக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்ததால் கடைகளில் சரக்கு விரைவில் விற்றுத்தீர்ந்தது. இந்தநிலையில், இதை சரிகட்டவும், வருவாயை மேலும் அதிகரிக்கவும் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை காலை 10ல் இருந்து இரவு 7 மணி வரையில் நீட்டித்தது.

இதேபோல், 500 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது 750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நேர நீட்டிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 109.3 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அதன்படி, அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் - 28.6 கோடி, திருச்சி மண்டலத்தில் - 27.4 கோடி, சேலம் மண்டலத்தில் - 24.3 கோடி, கோவை மண்டலத்தில் - 22.5 கோடி, சென்னை மண்டலத்தில் 6.5 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

5 நாட்களில் விற்பனை எவ்வளவு?
7ம் தேதி 172.59 கோடி
8ம் தேதி 122 கோடி
16ம் தேதி 163.5 கோடி
17ம் தேதி 130.1 கோடி
18ம் தேதி 109.3 கோடி
மொத்த விற்பனை 697.49 கோடி


.