என் உடலுக்கு 13 வயதில் நிகோடினை அறிமுகப்படுத்தினேன். என் பள்ளி, கல்லூரி நண்பர்களில் தொடங்கி சினிமா வரை `வெற்றி மாறன்' என்றாலே எல்லோருக்கும் கையில் சிகரெட்டுடன் இருக்கும் பிம்பம்தான் நினைவுக்கு வரும். 21 வயதுக்கு முன்னர் புகைக்க ஆரம்பித்தால், நமது உறுப்புகள் முறையாக வளரவேண்டிய அளவுக்கு வளராது. `நிகோடின், பிரவுன் சுகரைவிட அடிக்ஷனான விஷயம்' என்கிறார்கள்.
