Sunday, May 10, 2020

இங்கிலாந்து மருத்துவ கட்டமைப்பு

சுய ஊரடங்கு 3.0 - 46
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


கொரானா நோய் தொற்றால் லண்டன் மான்செஸ்டர் நகரில் பாதிக்கப்பட்ட எனது நண்பர், LONDON NHS Admission கிடைக்காமல், சித்தமருத்துவத்தின் மூலமாக மீண்ட அனுபவம்.‌

எனக்கு அனுப்பிய‌ வாட்ஸ்ஆப் தகவலை அவரது பெயர் மறைக்கப்பட்டு அவரது ஒப்புதலோடு இங்கு பகிற்கிறேன்.
---------------------------------------------------
வெ. பொன்ராஜ்/
12 APR 2020
---------------------------------------------------
தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் 40 சதவிகிதம் பணியாளர்கள் கொரானா நோய் தொற்று +ve ஆகி பாதிக்கப்பட்டு நிலைமையில், அவரும், அவரது மனைவியும் தொற்றால் பாதிக்கப்பட்டு NHS அட்மிஷன் முதல் ஸ்டேஜில் போட முடியாது, 4வது ஸ்டேஜில் மட்டும் மருத்துவமனையில் அனுமதி என்று தமிழ்நாடு அரசு சொல்வதைப்போல சொல்லி எவ்வித மருத்துவ உதவியும் கொடுக்காமல் தனிமைப்படுத்தி, வீட்டிலேயே இருங்கள் 4th ஸ்டேஜ்க்கு நோய் முற்றினால் மட்டும் எங்களை அழையுங்கள் என்று சொல்லி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், அவர்கள் நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தையும், நமது தமிழ் பாரம்பரிய உணவு பழக்கவழக்கத்தையும் கடைபிடித்து மீண்டெழுந்த ஒரு உண்மை சம்பவம்.

அவர் உங்களுக்கு பகிர சொல்லி எனக்கு அனுப்பிய தகவல் கீழே.
------------------------------------------------------------------------------

நண்பர்களே, கொரோனா தொற்று மிகக் கொடுமையானது. பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் அனைத்து அறிகுறிகளும் இருப்பதில்லை, சிலருக்கு தாங்கமுடியாத உடல்வலி, தலை, தொண்டை வலி மற்றும் மணம், சுவையின்மை போன்றவற்றோடு வந்து சென்றுவிடும். சிலருக்கு அனைத்து அறிகுறிகளுடன் எழுந்து நிற்பதிலிருந்து , மூச்சு விடுவதுவரை மிகச் சிரமமாக இருக்கும்.

நான் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இன்றோடு 21 நாட்கள் ஆகிவிட்டன. 10 நாட்களிலேயே அதிலிருந்து மீண்டு விட்டாலும், உடல் அசதி மற்றும் அதிக நேரம் பேசா முடியாத நிலை(நுரையீரல் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும் ) இப்போதும் எனக்கு உள்ளது. நான் வழக்கமான paracetamol மாத்திரைகளுடன் மேலே குறிப்பிட்டுள்ள சில சித்த மருத்துவ முறைகளையும், சிறு சிறு உடற்பயிற்சி, சூரிய ஒளியில் அமர்தல், மஞ்சள் மற்றும், ஓமம் கலந்த தண்ணீரில் ஆவிபிடித்தல் என பக்கவிளைவுகள் அற்ற நம் பழக்கவழக்கங்களை கடைபிடித்தே இதிலிருந்து மீண்டேன். 

சித்த மருத்துவத்தில் உள்ள நமது உணவுப்பழக்கங்கள் கொரோனா அறிகுறிகளின் தாக்கங்களை, வலிகளைக் குறைக்கின்றன என்பது நான் கண்ட அனுபவப்பூர்வமான உண்மை. நிலவேம்பு குடிநீர் சூரணம் காய்ச்சலை வெகுவாக கட்டுப்படுத்தியது.

என் மனைவிக்கு ஏற்கனவே சில பிரச்னைகள் இருப்பதால்(existing medical conditions ) கொரானா அவரை அதிகம் படுத்தி எடுத்துவிட்டது, அவர் எழுந்து உட்காரவே 16 நாட்கள் ஆகிவிட்டன . நாங்கள் 111 அழைப்பை மூன்று முறை தொடர்புகொண்டோம் , ஆனால் அறிகுறிகள் அனைத்தையும் கேட்டு விட்டு வீட்டிலேயே இருங்கள் என்று அறிவுறித்தினார்களே தவிர வேறு எந்த உதவியும் செய்யவில்லை. வாயில் நீலம் பாய்ந்து மூச்சு விட சிரமப்பட்டால் மட்டுமே எங்களை அழையுங்கள் என்று சற்று கராறாகவே அவர்கள் சொல்லியது நாம் எப்படிப் பட்ட ஒரு *வளர்ச்சியடைந்த* தேசத்தில் இருக்கிறோம் என்று நினைத்து வெட்கப்பட வைத்தது.

கொரானா இவருக்கு வரும் இவருக்கு வராது என்றில்லை. அது அனைவரையும் தோற்றும் வாய்ப்பே இங்கு அதிகம், ஆனால் பாதிப்பு என்பது அவர்களிடம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே அமைகிறது. இந்தியர்களுக்கு பாதிப்பு இருந்தும் இறப்பு எண்ணிக்கை கட்டுக்குள் இருக்க காரணம் நம்முடைய உணவுப்பழக்கவழக்கங்கள் தான். நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் மஞ்சள்,இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், வெந்தயம்,மல்லி போன்றவற்றில் இயற்கை யாகவே நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது.

எனவே நண்பர்களே, கொரானாவைக் கண்டு மிரளவேண்டாம். முடிந்தவரை அது அண்டாமல் விலகியிருங்கள், தொற்றிக்கொண்டால் பயம்கொள்ள வேண்டாம். துணிவுடனும், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.
🙏🏼
பெயர்::++++++++++++++
லண்டன், மான்செஸ்டர்
11 APR 2020

4 comments:

Avargal Unmaigal said...


முதலில் என் மனைவியும் இப்போது நானும் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறோம்... அது பற்றி நான் சீக்கிரம் நான் எழுதுகிறேன்

வெங்கட் நாகராஜ் said...

வளரும், வளர்ந்த நாடுகள் என்று இல்லை, எல்லா நாடுகளிலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. விரைவில் சூழல் சரியாக வேண்டும். சரியாகும் என்ற நம்பிக்கை கொள்வோம்.

Unknown said...

Which city or State do you live?did you get it tested and given any medicine?

Rajan

Unknown said...

Wish you a speedy recovery — Rajan
Look for your update