Showing posts with label அரசு எந்திரம எப்படி செயல்படுகின்றது?. Show all posts
Showing posts with label அரசு எந்திரம எப்படி செயல்படுகின்றது?. Show all posts

Tuesday, May 12, 2020

அது ரொம்ப முக்கியம்.

சுய ஊரடங்கு 3.0 - 49
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


அரசு எந்திரமென்பது நீங்களும் நானும் நினைப்பது போல மிக எளிதாக அவர்களை ஆட்சியாளர்கள் வேலை வாங்கிவிட முடியாது. அது சாதாரணமான காரியமும் அல்ல. எளிதும் அல்ல.

அரசியல்வாதிகளுக்கு துறை சார்ந்த அறிவு இருக்கும் பட்சத்தில் கேள்வி கேட்க முடியும். குறிப்பு எழுதிக் கோப்பில் மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்ப முடியும். ஆனால் இது எந்த அளவுக்கு செல்லுபடியாகும் என்பது கேள்விக்குறியே? ஒரு அளவுக்கு மேல் அமைச்சர் ஏற்றுக் கொள்ளும் சூழல் உருவாகக்கூடும். கட்டாயம் என்பது புற அழுத்தங்களின் மூலம் உருவாக்கப்படும்.