Friday, December 27, 2019

மனத்தடை நீங்கட்டும். இலவசமாக வாசிக்க 5 முதலாளிகளின் கதை.

நேர் வழி, அகலக் கால் விரிக்காத குணம், கடுமையான உழைப்பு, கொடுக்கல் வாங்கலில் வெளிப்படைத் தன்மை, சீரான முன்னேற்றம், தொழில் நுட்பம் புரியவில்லை விடு, தெரிந்ததைத் தெளிவாகச் செய்யும் அறிவு, அத்தனைக்கும் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்திருத்தல், அதைப் பாதுகாத்தல், எல்லாவற்றிக்கும் மேல் போதுமென்ற மனம் இது இருந்தால் போதும் இந்த முதலாளி போல் வெற்றி பெறலாம் தொழிலில் மட்டுமல்ல வாழ்விலும் தான்.

மது, மாது, புகழ் மயக்கத்தில் விழாது வெற்றியைத் தக்க வைத்த முதலாளியின் வாழ்வு நமக்குள் தன்னம்பிக்கை வளர்க்கும் விதை     இக்கதை.
புத்தகம் என்பது வெறும் பொழுது போக்கல்ல அது நம் வாழ்க்கை பாதையை மடை மாற்றிவிட வல்லது. நம்மை மாற்றி யோசிக்க வைப்பது. புதிதாகச் சிந்திக்க வைப்பது. புதிதாய் வாழக் கற்றுத்தருவது. இப்புத்தகம் இவை அத்தயையும் ஒருங்கே நமக்குத் தருகிறது.

இது ஒரு நம்பிக்கை நூல். நமை நல்வழிப்படுத்தும் நூல். தொழில் முனைவோராய் மாற்ற முயலும் நூல். நம் உள்ளத்தில் உள்ள எதிர் மறை எண்ணங்களைத் துடைத்தெறிந்து நேர்மையாய் நெஞ்சுறுதியாய் வாழ்ந்தால் எழலாம் லயிக்கலாம் என்பதைச் சொல்லும் சுய முன்னேற்ற நூல். இந்த புத்தகம் பலரிடம் போய்ச் சேர வேண்டும். அவர்கள் எண்ணங்களில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று உறுதியாக நம்புகிறேன். திருப்பூருக்குப் போனால் பிழைத்துக்கொள்ளலாம் என்று ஒவ்வொருவருக்கும் பாதை காட்டும் கலங்கரை விளக்கம் இந்த நூல்.

இச்சிறந்த புத்தகம் போட்டியில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற வேண்டும் எனில் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்யுங்கள், முழுமையாய் படியுங்கள், ஐந்து நட்சத்திரக் குறியீட்டை வழங்குங்கள். உங்கள் விமர்சனங்களை ஆங்கிலத்தில் தாருங்கள். நல்ல ஒரு புத்தகத்தை நீங்களும் நான்கு பேருக்குச் சொல்லுங்கள். உங்கள் அனுபவங்களைப் படையுங்கள் படைத்து இது போன்று மற்றவர்களும் பயன்படும் வண்ணம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அதற்கு உங்களை ஊக்கப்படுத்தும், தொழில் முனைவோராய் மாற்ற உற்சாகப்படுத்தும் உன்னத வேலையைச் செய்யும் இப்புத்தகம்.

அன்புடன்,
கொல்லால் எச். ஜோஸ்

இன்று (31.12.2019 முதல் 01.01.2020 அதிகாலை வரை) ஐந்து நாட்கள் இந்தப் புத்தகத்தை இலவசமாக பெற முடியும்.  வாசித்து விமர்சனம் அளிக்க வேண்டுகிறேன்.  அமேசான் தளத்தில் ஆங்கிலத்தில் விமர்சனம் எழுத வேண்டும்.  ஐந்து நட்சத்திரம் வழங்க வேண்டும்.  (ஸ்டார் ரேட்டிங்)

இதுவரையிலும் மனத்தடையுடன் இருந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் டிஜிட்டல் வாசிப்பை இந்தப் புத்தகத்தின் மூலம் தொடங்கவும். நன்றி. வாழ்த்துகள்.


கணினி வழியே தரவிறக்க செய்ய  இந்த இணைப்பில் சென்று இந்த செயலியை உங்கள் கணினியில் நிறுவவும். அதன் பிறகு இந்தப் புத்தகத்தை தரவிறக்கம் செய்யலாம். உங்களுக்கு அமேசான் கணக்கு இருக்க வேண்டும். உருவாக்கிக் கொள்ளவும். மற்ற பல விசயங்களுக்கும் இந்தக் கணக்கு உதவும்.

அலைபேசி வழியே தரவிறக்கம் செய்ய இந்த செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவிய பின்பு புத்தகத்தை தரவிறக்கம் செய்யவும்.

9 comments:

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள்

நரசிம்மன் said...

ஐயா வணக்கம்
நீங்கள் கூறிய படி அமேசான் கின்டிலில் கணக்கு தொடங்கி தங்கள் புத்தகத்தை தேடினேன் அப்போது 2 ரூபாய் மட்டும் ரீபன்ட் அடுத்த மாதம் முதல் 169 ரூபாய் சார்ஜ் என வருகிறது இம் மாதம் மட்டும் ப்ரி என கூறுகிறது மேலும் கடன் அட்டை விவரங்களை கேட்கின்றது

நரசிம்மன் said...

அடுத்த மாதம் நான் பனம் கட்டினால் படிக்க முடியும் அப்படித்தானே இல்லை ஆட்டோமேட்டிக்காக கழிந்து விடுமா

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த ஐந்து நாட்களின் முடிவில், வெற்றி வசப்படும்...

ஜோதிஜி said...

அய்யா மன்னிக்கவும் இப்போது தான் இணையம் பக்கம் வர முடிந்தது. நீங்க இந்தமாதம் 2 ரூபாய கட்டுங்க. பத்து புத்தகங்கள் இத்துடன் சேர்த்து படிக்கலாம். முடிந்ததும் 30 நாட்களுக்குள் நீங்கள் உங்கள் கணக்கை கேன்சல் செய்து விடலாம். அமேசான் மிக மிகநம்பிக்கையான தளம். பயம் வேண்டாம். நான் பல தடவை பொருட்கள் வாங்கியுள்ளேன். எல்லாவிதங்களில் நேர்மையை கடைபிடிக்கின்றர்கள்.

ஜோதிஜி said...

உங்கள் உழைப்பு. உங்கள் பொறுப்பு.

ஜோதிஜி said...

நன்றி

வெங்கட் நாகராஜ் said...

இணையம் பக்கம் மிகவும் குறைவாகவே வர முடிகிறது நண்பரே. தனபாலன் வாட்ஸப் வழி செய்தி அனுப்பியிருந்தார் தரவிறக்கம் பற்றி. வெற்றி பெற வாழ்த்துகள்.

நரசிம்மன் said...

தங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி