Sunday, December 22, 2019

புள்ளி விபர புள்ளி ராஜாக்களிடம் ஜாக்கிரதை!! 2019

Mrinzo Nirmal Cb

#அலார்ட்டா_இருக்கனும்ங்க..

புள்ளி விபர புள்ளி ராஜாக்களிடம் ஜாக்கிரதை!!

1 இணையத்தில் வரும் செய்திகள் உங்கள் உணர்வை உலுக்கும் செய்தியாக இருந்தால் அந்த செய்தியின் நம்பிக்கைத் தன்மையை ஆராயாமல் உணர்ச்சி வசப்படாதீர்கள். 90% அது போலியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. செய்திகளிலும் போலி உண்டு .

2. முடிந்தவரை உணர்வு கொப்பளிக்கும் காட்சிகள், வீடியோக்கள், பேச்சுகளை அடுத்தவர்களுக்கு ஃபார்வர்ட் செய்யாதீர்கள். அடுத்தவர்களுக்கு அனுப்பும் பொழுது நல்லதா அனுப்பினா நல்லதுதானே. சுகி சிவம், ஹீலர் பாஸ்கர், அப்துல் கலாம், போன்றவர்களின் வீடியோ செய்திகளை ஃபார்வர்ட் செய்வதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதீக பார்வேர்ட் அதீத தீமை.
3. முக நூலிலும் வாட்ஸப்பிலும் தொடர்ந்து யாரையாவது அல்லது ஒரு குழுவினரை தாக்கி எழுதும் நபர்களை விலக்கி வையுங்கள். அவர் உங்க நண்பராக இருந்தால் தள்ளி நில்லுங்கள். அவரிடம் ஏதோ நோய் கிருமி உள்ளது என்கிற அபாய ஒலி மண்டையில் ஒலிப்பதை அசட்டை செய்யாதீர்கள். அவர் எழுதுவது உங்களுக்கு ஆதரவாக இருந்தால் கூட ஒற்றை கோணத்தில் எழுதும் நபர்களை புறக்கணியுங்கள். அது மூளையில் ஒரே ஒரு பகுதி தவிர வேறு பகுதிகள் வேலை செய்யாமல் செயலிழந்த நிலை !!  

அது ஒருவித நோய். அச்சோ, பாவம் என கடந்து விடுங்கள். இல்லையென்றால் அது வெகு சீக்கிரத்தில் உங்களுக்கும் பரவக் கூடும். நோய்கள் இணையத்தின் மூலமும் பரவும்ங்க.

4. யார் எதை செய்தியாகவோ கருத்தாகவோ முகநூலில் சொன்னால் அதை உண்மை என நம்பாதீர்கள் அது அந்த நபரின் கருத்து அவ்வளவுதான். யாராலும் உண்மையை சொல்லிவிட முடியாது. மேலும் உண்மையை உங்களுக்கு சொல்லும் அளவுக்கு பரந்த மனம் கொண்டவர்கள் யாரும் இல்லை. சொல்லும் கருத்திற்கு ஆதரவு கிடைக்கிறதா, அது வரவேற்கப் படுகிறதா என்பதே நோக்கம் - உண்மை அல்ல. சும்மா கிசு கிசு அவ்வளவுதான்.

5. அடுத்து இந்த தேசம் நாசமாக போகிறது, நம் வாழ்வே முடிய போகிறது, இந்த உலகம் அழிய போகிறது. நம் மதம் ஒடுக்கப்படுகிறது போன்ற வக்கிர சீற்றங்களை காமெடியா பாருங்க.

இப்படி சொல்வது எழுத்து முறையின் ஒரு டெக்னிக்..ஏனென்றால் உண்மை செய்திகளை உணர்வு பூர்வமாக சொல்ல அலங்காரச் சொற்கள் தமிழ் மொழியில் அவசியமில்லை. மிக அமைதியாக சொல்லியே உண்மை பறிமாறப்படும். ஓவர் அலங்காரம் பயங்கரவாதம்.

6. அடுத்து நீங்கள் செய்யப் போகும் காரியம் உங்கள் ஃபோனில் வந்த வாட்ஸாப் செய்தியை வைத்தோ முக நூல் பதிவை வைத்தோ முடிவு செய்யாதீர்கள் - அது உலகிலே மிக நல்ல விஷயமாக இருந்தால் கூட அதை பின்பற்றாதீர்கள். நல்லது செய்ய கண் முன் நடக்கும் விஷயம் போதும். இணையத்தில் பார்த்து ஓவர் நன்மை செய்தலும் கேடே!

7. சோஷியல் இன்ஜினியரிங் என ஒன்று இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதாவது உங்கள் சிந்தனைகளை செயல்களை சில பல செய்திகள் மூலம் நிர்ணியக்க முடிகிற பொறியியல் அது. மனிதன் ரொம்ப பலவீனமானவன் என்கிற உண்மை அடிப்படையில் உருவாக்கப்பட்ட பொறியியல் அது. உங்களின் புலன்களை வெகு எளிதாக ஏமாற்றி உங்கள் மண்டைக்குள் நம்பிக்கையாக கான்சர் செல் போல பரவச் செய்யும் செயல் அது. புள்ளி விபர புள்ளி ராஜாக்களிடம் ஜாக்கிரதை!!

இதை யார் வேண்டுமென்றாலும் இணையத்தில் செய்ய முடியும் என்பது முக்கியம்.

8. முக நூலில் அவர் நல்லா காட்டமா எழுதுவாப்ல, முகத்திரையை கிழித்து எழுதுவாப்ல, சமுக நீதிக்கு போர் குரல் கொடுப்பாப்ல போன்றவர்கள் டைம்பாமிற்கு ஒப்பானவர்கள். இவர்கள் போதை போல உங்களுக்கு தேவையானதை தந்து கொண்டிருக்கிறார்கள்... எட்ட நின்று ரசித்து கடந்து போங்கள். இவர்கள் டாஸ்மாக் பார் போன்றவர்கள். போதை நிச்சயம்.. அதே சமயம் அழிவும்தான் !!

9. உலகம் முழுவதும் இணையத்தில் உலவும் fake news போலி செய்திகள் பிரச்சனையாக இருக்கிறது என தெரிந்து கொள்ளுங்கள். எழுதும் திறமையும், உணர்வை தூண்டும் வசனங்களை எழுதும் திறமையும், இயல்பாக பொய் சொல்லும் திறனையும், கொண்டவர்களை வைத்து மிகப் பெரிய ஊடகமாக இணையம் இயங்கி வருகிறது என புரிந்து கொள்ளுங்கள். போலி செய்திகள் சிலர்களின் விருப்பத்திற்கு தயாரிக்கப்படுகிறது.

10. உங்கள் உற்ற நண்பர்கள் இணைய செய்தி பகிர்ந்தால் கூட அந்த செய்தியின் நம்பகத்தன்மையை சோதித்து பாருங்கள் முடிந்தால் நம்புங்கள். அல்லது நண்பருக்கு வருத்தம் வருமென்றால் நீங்களும் போலியாக நம்பியது போல வாவ் எனச் சொல்லி நழுவி விடுங்கள். பல செய்திகள் நீங்கள் நம்ப வேண்டுமென்றே எழுதப்படுகிறது . சும்மா தெரிஞ்சிக்கிடுங்க அவ்வளவுதான்.


இன்று முதல் இலவசமாக வாசிக்க கிடைக்கும்.

5 முதலாளிகளின் கதை - விமர்சனங்கள் (19) (Tamil Edition) Kindle Edition


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்...
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்...

மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி...
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி...

ஜோதிஜி said...

மெய்ப்பொருள் காண்பதறிவு.

திண்டுக்கல் தனபாலன் said...

சரி...ஈ... ஆனால் தலைப்பின் முடிவில் ஏன்...?

8 வருடம் முன்பு :-

https://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_30.html

ஸ்ரீராம். said...

சபாஷ்.....

Social Media Agency said...

This was the best information..!!! which conveys the way of se of social media Social Media Agency Singapore and helps us to develope our presence in all over the website design services singapore