Saturday, December 28, 2019

கோவி கண்ணன் பார்வையில் 5 முதலாளிகள் கதை

Govindaraju Kannan .


ஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை - எனது பார்வையில் சிலவரிகள் பகிர்வு:

5 முதலாளிகளின் கதையை படித்ததும் அதன் தொடர்பில் எனது எண்ணங்களை பதிவு செய்கிறேன்

தொழில் முனைவர்களின் முறையற்ற பாலியல் சார்ந்த தனிமனித விருப்பு வெறுப்புகள் மட்டுமே அவர்களின் வீழ்ச்சியை முடிவு செய்துவிடாது, எனக்கு தெரிந்த ஒழுக்க சீலராக இருக்கும் சிலர் பண விசயத்தில் முறையற்று அதனை ஈட்டுவதில் காட்டும் ஆர்வம், எந்தவித கூச்சமும் மனத் தடைகளுமின்றி தன்னிடம் வேலையில் இருப்பவர்களின் பலவீனங்களை வைத்து அவர்களை கீழ்த்தரமாக நடத்துவதுடன் சக்கையாக பிழிந்தும் தனது திட்டமிட்ட வருவாயை பெருக்கிக் கொள்கின்றனர்.

நடுவில் அமர்ந்திருப்பவர் அமெரிக்கா நாசாவில் சீனியர் சயிண்ட்ஸ் ஆக பணிபுரியும் நா. கணேசன் அவர்களை சென்ற வாரம் சந்தித்தேன். என் வாசகர். பொள்ளாச்சியில் சந்திக்க அழைத்து இருந்தார்.தொழில் செய்வோர் இறைவனுக்கு ஒப்பானவர்கள், பல குடும்பங்களின் அடுப்புகள் அவர்களால் எரிகிறது என்ற எண்ணம் கடந்த சில ஆண்டுகளாக எனக்கு தலைகீழாக மாறியுள்ளது, தொழில் அதிபர்களின் பணத்தாசை பெருந்தீக்கு தொழிலாளர்களின் வியர்வையும் இரத்தமுமே எண்ணெய்.

மூன்று வேளை சாமி கும்பிடுவது, பண்டிகை தோறும் தெய்வாம்சமாக தோன்றுவது, வார்த்தை வழி தன்னை முழுதாக நம்பலாம் என்று வாய்சவடால் கொண்டிருப்பது, பேச்சில் அண்ணன் தம்பி என்று உறவு முறைகளாக அழைப்பது உள்ளிட்டவை ஒரு வளர்ச்சியை எட்டும் வரையில் தான், அதன் பிறகு எல்லாம் தலைகீழ், கீழே வேலை பார்பவர் தன்னைவீட பத்து வயது மூத்தவர் என்றாலும் வயது தெரியாமல் அவர் தன் முதலாளியை தம்பி என்று சொல்லாமல் அண்ணன் என்று அழைத்தால் கூச்ச நாச்சமில்லாமல் ஏற்பது உள்ளிட்டவை பெருச்சாளி முதலாளிகளிடம் உண்டு.

இப்படியெல்லாம் ஊரை அடித்து ஏமாற்றி பணமும் தொழில் அதிபர் பட்டமும் பெற அவர் எத்தனை பேர்களை ஏமாற்றி இருப்பார், நம்ப வைத்து கழுத்து அறுப்பார், குடி கெடுத்திருப்பார் என்று நினைக்க முதலாளித்துவம் பற்றிய விமர்சனங்கள் பொய்யானது இல்லை

தொடர்புள்ள சப்ளையர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்டோருக்கு நம்பிக்கை துரோகங்கள் செய்துவிட்டு, வெளியுலகிற்காக பொய்யான முகத்தில் வாழவேண்டிய அவலநிலையில் பல முதலாளிகள் இருக்கிறார்கள், எனக்கு தெரிந்து மனசாட்சி அற்றவர்கள் தான் தொழிலே செய்ய முடியும் என்று அவர்களையும் ஏமாற்றிக் கொண்டு, அதுதான் தகுதி என்று உலகையும் நம்ப வைக்கும் முயற்சிதான் 90 சதவிகித தொழில் அதிபர்களால் நடந்தேறுகிறது.

உங்கள் நூலும் அதன் தகவலும் முதல் தலைமுறை தொழில் அதிபர்களின் உண்மை முகத்தை வடித்துள்ளது. இப்படியெல்லாம் இருப்பார்களா ? என்று எனக்கு வியப்பேதும் இல்லை, பணம் அதை ஈட்டுவதின் பேராசையிலும் அதற்குண்டான திறமையும் உள்ளவர்கள் ஏனைய மனிதர்களை மனிதர்களாக நடத்துவதில்லை, இதற்கு தனிமனிதனாக ஒருவர் காலை நக்கி பிழைப்பது இழுக்கு அல்ல, அப்படி நக்குபவரால் தனிமனிதர்கள் எவரும் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.

தொழில் அதிபர்களில் பத்து சதவிகிதம் பேர் நாணயமாகத்தான் இருக்கிறார்கள், ஏனையோர்கள் நடத்தும் தொழில் கந்துவட்டி, கொத்தடிமை, உழைப்பை திருடுவது ஆகியவற்றின் கலவையாக நடந்தேறுகிறது. உங்களின் நூல் வளரும் முதலாளிகளின், வளர்ந்தபின் அவர்களது நடவடிக்கைகளை பாடமாக்கியுள்ளது.

ஏமாற்றினால் தொழில் செய்து பிழைக்க முடியுமா ? என்ற கேள்வியை யாரும் நினைத்துவிடக் கூடும் என்பதாலோ நாணயமான நல்ல மனிதர் ஒருவரையும் எடுத்துக்காட்டியுள்ளீர்கள், நல்ல மனிதர்களுக்கும் தொழில் செய்ய நம்பிக்கை ஏற்படுத்தும்.

இந்த நூலில் அறிந்து கொள்ள வேண்டியது, நாம் என்ன தொழில் செய்தாலும் அவை யாரோலோ பார்த்துக் கொண்டிருக்கக்கூடும், கவனத்தில் இருக்கும், ஒரு நாள் அவை ஆவணமாகக்கூடும் என்பதை தொழில் முனைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் நற்பெயரும் கெட்டப் பெயரும் அவரவர் நடத்தையால் ஏற்படுபவை என்பதை நூல் எடுத்துக்காட்டியுள்ளது.

நண்பர் ஜோதிஜியை பத்தாண்டுக்கு மேலாக தனிப்பட்ட முறையில் அறிவேன், இந்த நூல் அவரது அறத்தன்மையின் வெளிப்பாட்டுடன் எல்லாவற்றின் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறது. குறிப்பாக திருப்பூரின் வளர்ச்சி மற்றும் பின்னல் ஆடைகள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது, வெற்றிகரமான தொழில் அதிபருக்கு வரையறை ஏதுமில்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். நான்கு பேர் குடும்பத்தில் அடுப்பு எரிய வேண்டும் என்ற கொள்கையுடன் எவரும் தொழில் செய்ய வருவதில்லை, அளவில்லாத பணமும் அளவற்ற அதன் மீதான மோகமும் உச்ச வளர்ச்சியையும் உடனடி சரிவையும் சந்திக்க காரணம் சரியான வழிகாட்டல் இல்லாததால் நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விறுவிறுப்பான எழுத்து நடை, அருகில் இருந்து சொல்ல சொல்ல கேட்பது ஒரே மூச்சில் படித்துவிட முடிகிறது

நன்முயற்சி, நல்வாழ்த்துகள்

This Book given lot of information for who interested on startup / entrepreneur company, the author narrated his experience with his five different bosses and their success and fallen.

Through this book, we can find snap shot of Thiruppur Cotton mills, readymade cloth productions, how the corporate handle supplier, customers and the employees. He wrote every positive and negative of this type of industries, their achievements, especially first generation entrepreneur, their attitudes, behaviors etc.

Very interesting and informative writing. I could recommend for good reading.2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

(காரசாரமான அனுபவப்பட்ட ?) நல்ல விமர்சனம்... வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விமர்சனம். ஒவ்வொரு விமர்சனமும் சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஜோதிஜி.