Sunday, December 01, 2019

வாசகர் கடிதம் 2

வாசகர் கடிதம் 3

அன்புள்ள ஜோ

படைப்புகளில் நல்லது கெட்டது என்று வித்தியாசம் உள்ளதா?

அன்புள்ள ஜா

தமிழ்த் திரைப்பட உலகத்தை புதிய பாதைக்கு நகர்த்திய பாரதிராஜா படங்களைப் பார்த்து விடலைக் காதல், வயல் பரப்புகளில் ஆடும் தேவதைப் பெண்கள் என்று ஏராளமாக இருந்தாலும் வடிவுக்கரசி, காந்திமதி நடித்த நடிப்பு கதாபாத்திரம் அல்ல. அவர்கள் இன்னமும் தமிழகக் கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிருள்ள ஜீவன்கள். அச்சு அசலான அவர்களைப் போன்றவர்களுடன் நான் முதல் இருபது வருடம் வாழ்ந்துள்ளேன்.

ஆனால் நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களுக்கு பாரதிராஜா படமென்பது வெறுமனே பொழுது போக்கு சமாச்சாரமாக இருக்கும். படைப்பு ஒன்று தான். ஆனால் பார்வை வெவ்வேறு.

வடசென்னை என்ற படம் ஐம்பது எழுத்தாளர்கள் நினைத்தாலும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை. ஒவ்வொரு ப்ரேமிலும் ஓராயிரம் செய்திகள்.

தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் இனி வரும் இயக்குநர்களுக்கு பெரும் உத்வேகத்தைக் கொடுக்கக்கூடிய படம்.

ஒரு திரைப்பட இயக்குநருக்கு 25 சதவிகிதம் துறை சார்ந்த அறிவு இருந்தால் போதும். ஆனால் 75 சதவிகிதம் மற்ற 30 துறைகளில் உள்ளவர்களை வேலை வாங்கத் தெரிய வேண்டும். தான் விரும்பிய, மக்கள் எதை விரும்புவார்கள்? எப்படி விரும்புவார்கள் என்று அவர்களிடம் கேட்டு வாங்கத் தெரிய வேண்டிய நிறுவன சிஈஓ வாக இருக்கத் தெரிய வேண்டும். அதைச் செய்யத் தெரிந்தவர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள்.

ஆனால் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் Joe D Cruz எழுதிய ஆழி சூழ் உலகு புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற கொற்கை படித்துப் பாருங்கள். முனைவர் பட்டம் பெற்று, தான் இருக்கும் துறையில் உயர்பதவியிலிருந்து கொண்டு காலத்தை முன்னும் பின்னும் அளந்து உங்கள் கண் முன்னால் நிறுத்தியிருப்பார். நீங்கள் உள்ளே நுழைந்து வெளியே வர சில வாரங்கள் ஆகும்.

கடல் என்றால் அலைகள், நல்ல மீன்கள் என்ற எண்ணம் மாறி அவர்களின் வாழ்க்கை மற்றும் வரலாற்றுச் சுவடுகளை உணரும் போது உள் அடங்கிப் போவீர்கள். இதுவே காட்சி வடிவில் வந்தால் சில நிமிடங்கள் தங்கும். எழுத்து வடிவம் என்னும் போது ஆழ் கடல் அமைதி போல உங்கள் எண்ணம் மாறும்.

மற்றபடி புதிதாக உருவாகி உள்ள இணைய எழுத்தாளர்கள் எழுதும் ஒவ்வொன்றும் ஆழம் இல்லாவிட்டாலும் இவர்கள் தான் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்.

இலக்கியம் என்ற பெயரில் உருவான மூடநம்பிக்கைகளை உடைத்து எந்தத் துறை சார்ந்தும் எழுதலாம். எழுத முடியும்? என்று உணர்த்திக் கொண்டிருப்பவர்கள் இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள். அவர்களைக் கோர்வையாக எழுதத் தெரிந்தவர்கள் என்றும் கூடச் சொல்லலாம்.

அவர்களுக்கு எழுத்தாளர் என்ற பட்டம் தேவையில்லை.

அவர்கள் தமிழ் மொழியை இலகுவாக்கி, சர்க்கரை பாகு போல மாற்றி வாசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை எறும்பு போல தங்கள் பின்னால் வர வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

நீங்கள் தான் சொல்ல வேண்டும்? எது நல்லது? எது கெட்டது என்று?

உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.

#5MuthalaleegalinKathai
#Amazonpentopublishl2019
#PenToPubish
#JothiGanesan
#LFPentoPublish
#5முதலாளிகளின்கதை

இன்று கீழே உள்ள இரண்டு மின் நூல்களும் இலவசம்.  

அமேசான் வழியாகப் படிக்கலாம்.


8 புத்தகங்களின் விமர்சனம்: வாசித்தே ஆக வேண்டிய புத்தகங்கள்


3 comments:

Rathnavel Natarajan said...

ஆனால் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் Joe D Cruz எழுதிய ஆழி சூழ் உலகு புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற கொற்கை படித்துப் பாருங்கள். முனைவர் பட்டம் பெற்று, தான் இருக்கும் துறையில் உயர்பதவியிலிருந்து கொண்டு காலத்தை முன்னும் பின்னும் அளந்து உங்கள் கண் முன்னால் நிறுத்தியிருப்பார். நீங்கள் உள்ளே நுழைந்து வெளியே வர சில வாரங்கள் ஆகும் - கொற்கை, என்னை அழ வைத்த புத்தகம். நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் படிப்பேன்

G.M Balasubramaniam said...

புத்தகம் படித்து அறிவது வேறு அதையே நிழற்படமாக எடுப்பது வேறு பீரியட் பிக்சர்ஸ் என்று சிலபடங்களைப்பார்க்க பொறுமை அதிகம் வேண்டும்