Wednesday, November 09, 2022

"என் வாக்குச்சாவடி வலிமையானது"

 ஒரு மாபெரும் 

உருப்படியான 

உண்மையான 

தேவையான 

அவசியமான மாற்றத்தின் 

முதல்படியில் தமிழக பாஜக கால் எடுத்து வைத்துள்ளது என்றே நம்புகின்றேன்.  அதனை மதுரை பாஜக இன்று தொடங்கி வைக்கின்றது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு பூத் (வாக்குச் சாவடி) மாவட்ட நிர்வாகத்தின் நேரிடையான கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டர்கள் தேர்தலுக்கு மட்டுமல்லாது 365 நாட்களுக்கும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மனதில் இருக்கும்படி செயல்பட வேண்டும் என்பதன் முதல் படி இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களால் இன்று மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.  

இதனை மதுரை பத்திரிக்கையாளர் சந்திப்பில் இன்று தெரிவித்துள்ளார்.

இது இரண்டாவது பத்திரிக்கையாளர் சந்திப்பு. சச்சரவு இல்லை. சண்டை இல்லை. ஏட்டிக்குப் போட்டியான கேள்விகளும் இல்லை.  

அமைதியாகவே பத்திரிக்கையாளர்கள் அண்ணாமலை அவர்களுடன் ஒத்துழைத்துள்ளனர்.

"என் வாக்குச்சாவடி வலிமையானது" / மதுரை பாஜக தொடங்குகின்றது/K.Annamalai Press Meet/Nov 8 2022

லச்சு அக்காவும் ஷபிர் தம்பியும் எங்கேயிருந்தாலும் மேடைக்கு வரவும்.

()()()

அண்ணாமலை அவர்கள் இலங்கை சென்று வந்தவுடன் அய்யா நெடுமாறன் அவர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார்.  அதில் ஈழம் குறித்த விபரங்களுடன் கொஞ்சம் சர்வதேச அரசியல் குறித்துப் பேசினார்.

ஆனால் பாஜக மருத்துவ அணி சார்பாக கூட்டப்பட்ட கூட்டத்தில் அண்ணாமலை சர்வதேச அரசியல் குறித்து அசத்தலான பேச்சைப் பேசியுள்ளார்.  இது முழுக்க சர்வதேச அரசியல் அறிவியல் சார்ந்த எளிமையான உரையாகும்.

இந்தியாவை வெளிநாடுகள் எப்படி பார்க்கின்றது?

எப்படி பின்னுக்குத் தள்ளப் பார்க்கின்றது?

ஏற்கனவே எப்படி பார்த்தார்கள்? இன்னமும் ஏன் பழைய பார்வையை வைத்தேன் பார்க்கின்றார்கள்?

 இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன?

அமெரிக்கா உருவாக்கும் கருத்துக்கணிப்பு செய்யும் மாயங்கள்? 

போன்ற பல விசயங்களை எளிமையாக பேசி புரியவைத்துள்ளார்.

மற்ற கட்சிகளில் பல அணிகள் உண்டு. 

எப்படி செயல்படுகின்றார்கள் என்பதனை நாம் அறியோம்.  ஆனால் பாஜக தலைவராக அண்ணாமலை அவர்கள் வந்தவுடன் உருவான ஒவ்வொரு அணியும் தனக்கான பணியைச் சிறப்பாகவே செய்து வருகின்றார்கள். 

இலக்கு நோக்கி நகர்கின்றார்கள்.  

இது போன்ற பேச்சுகள் என்றாவது ஒரு நாள் இரண்டாவது மூன்றாவது (ஒன்று இரண்டு மூன்றாவது டயர் சிட்டிகள்) தமிழ்நாட்டின் நகரங்களில் வாழும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு அவர்களின் கல்வி அறிவு மட்டும் வளர்ந்து விட்டால் போதும்.  

ஆனால் இன்றைய சூழலில் பெருநகரங்களில் உள்ள மாணவர்களுக்குக் கூட இது போன்ற ஆழமான விசயங்கள் தெரியுமா? என்றே யோசித்துப் பார்க்கின்றேன்.  

அண்ணாமலை உரை - BJP Medical Cell / சர்வதேச அரசியலில் இந்தியாவை அழிக்க நினைக்கும் வல்லூறு நாடுகள்.

இப்படிப் பலரும் பேசத் தொடங்கினால் உணர்ச்சிப் பூர்வமான அரசியல்வாதிகளின் பேச்சு எடுபடாது என்றே நம்புகின்றேன்.

என் காலத்திற்குள் இது நடக்கும் என்றே நம்புகின்றேன்.

No comments: