Friday, November 04, 2022

அண்ணாமலை & ரங்கராஜ் பாண்டே காரசார நேர்காணல் - "முடிந்தால் என்னைத் தொட்டுப் பார்க்கட்டும்" 28-2022

 முதல் முறையாக பாண்டே அண்ணாமலை நேர்காணல் என்பது கால்பந்தாட்டம் இறுதி ஆட்டம் பார்ப்பது போலவே இருந்தது. மாறி மாறி கோல் போட்டுக் கொண்டேயிருந்தால் பார்வையாளனுக்கு எப்படியிருக்கும்?  

ஆராவாரம் ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கும்.

ரபி பெர்ணார்ட்,  வீரபாண்டியன் இவர்களைத் தெரியாதவர்கள் என்றால் அது வளர்ந்து கொண்டிருக்கும் தலைமுறை என்று அர்த்தம்.  

இரண்டு பேர்களும் இரண்டு பாதை.  ஆனால் ஆதரவு, எதிர்ப்பு என்பதற்கு அப்பாற்பட்டு கட்டாயம் முழுமையாக கேட்டே ஆக வேண்டும் என்பதனை இவர்கள் இருவரும் உருவாக்கினார்கள்.  காரணம் உழைப்பு.

அண்ணாமலை & ரங்கராஜ் பாண்டே காரசார நேர்காணல் - "முடிந்தால் என்னைத் தொட்டுப் பார்க்கட்டும்" 28-2022

இதற்குப் பிறகு மூவர் முக்கியமானவர்களாகத் தெரிகின்றார்கள்.

கார்த்திகை செல்வன்.  குணசேகரன், ரங்கராஜ் பாண்டே.

உங்களுக்கு வியப்பாக இருக்கும்.  காரணம் உள்ளது.

கார்த்திகை செல்வன் நக்கீரன்  வார இதழ் தொடக்க காலத்திலிருந்து தன் பத்திரிக்கை உலக பணியைத் தொடங்கியவர்.

குணசேகரன் கம்யூனிஸ்ட் சார்பு பத்திரிக்கையுலகத்திற்குள் புகுந்து வெளியே வந்தவர்.

பாண்டே மதுரை தினமலரில் தன் பணியைத் தொடங்கியவர்.

மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமையாக நான் பார்ப்பது....

மாதச் சம்பளத்திற்கு நாயாய் பேயாய் அலைந்து திரிந்து உழைத்து அத்துடன் தன் திறமையை வளர்த்துக் கொண்டது.  வறுமையுடன் வாழ்க்கையை அதன் போக்கில் சென்று இன்று வென்று நிற்பது.

இவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பாதை வேறு. எண்ணங்கள் வேறு. நோக்கம் வேறு. கடமையாற்றிக் கொண்டு இருக்கும் இடம் வேறு.  அடைந்த உயரங்களும் வெவ்வேறு விதமாக இருந்தாலும் நிச்சயம் சாதித்து உள்ளனர். சாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மற்றபடி அய்யா ஒருவர் சில தினங்களுக்கு முன் யூ டியூப் ல் வரும் மாதேஷ் என்ற பையனைப் பத்திரிக்கையாளர் என்று பட்டியலில் கொண்டு வந்தார். இல்லை. 

அந்தப் பையன் போல யூ டியூப் ல் நூற்றுக்கணக்கான பசங்க இருக்கின்றார்கள்.  இவர்கள் எத்தனை புத்தகங்கள் இது வரையிலும் படித்து இருப்பார்கள்.  எத்தனை பேர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக தெரிந்து இருப்பார்கள். தினமும் எத்தனை தினசரி பத்திரிக்கைகள் படிக்கின்றார்கள்? வாரந்தோறும் தவறாமல் எத்தனை வார இதழ்கள் வாசித்து நிகழ்கால நல்லது கெட்டதைப் புரிந்து உள்ளனர் என்று கேட்டுப் பாருங்கள்.  நிச்சயம் ஜுரோ வாகத்தான் இருப்பார்கள்.

இவர்கள் அனைவரும் சமாளிக்கத் தெரிந்தவர்கள்.  

குறுக்குக்கேள்வி கேட்கத் தெரிந்தவர்கள்.  கொச்சையாகச் சொன்னால் போட்டு வாங்கத் தெரிந்தவர்கள்.  இது லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்து முடித்து வெளியே வந்தவுடன் ஒரு பத்திரிக்கையில் கொடுப்பதைக் கொடு எதுவாக இருந்தாலும் வாங்கிக் கொள்கிறேன் என்று ஒரு வருடம் பயிற்சி எடுத்து விட்டு கிறிஸ்துவ ஆதரவுத் தளத்தில், நானும் ஈவேரா பேரனுக்குப் பேரன் என்ற அயோக்கியத்தனத்தை டேக் ஆக வைத்துக் கொண்டு சுற்றி வரும் பொறுக்கிக் கும்பலைத்தான் பாண்டே போட்டியில் அண்ணாமலை வெளுத்து வாங்கினார்.

ரங்கராஜ் பாண்டே அண்ணாமலை பேட்டி என்பது எனக்குத் தீரன் அதிகாரம் ஒன்று பார்த்தது போலவே உள்ளது. 

இந்த இடத்தில் மற்றொரு தகவலையும் கூடுதலாகச் சொல்லிவிடுகின்றேன்.

அண்ணாமலை அவர்களின் கிராமத்தில் (தொட்டம்பட்டி) உள்ள வீட்டில் உள்ள மதில் சுவர் வரைக்கும் தீயசக்தி ஆராய்ந்து பார்த்து இடிக்க முடியுமா? என்று பார்த்து உள்ளனர்.  அண்ணாமலை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். 

தன் உறவுகள், மனைவி வகையில் வரக்கூடிய உறவுகள் அத்தனை டேட்டாவும் கொலை வெறியில் இருக்கும் டேவிட்சன் ஆசீர்வாதம் கையில் வைத்திருந்து காத்திருக்கக்கூடும்.

ஓர் இன்ஞ் கூட இவர்களால் கடந்த 16 மாதத்தில் அண்ணாமலை அவர்களை அசைக்க முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?

வாழ்கின்ற வாழ்க்கைக்கும்

பேசுகின்ற வார்த்தைக்கும்

அச்சு பிறழாமல் 

அறத்துடன் 

உண்மையாக 

நேர்மையாக 

வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். 

தன்னைச் சுற்றிலும் உள்ளவர்களையும் வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றார்.

தமிழக மக்களையும் அப்படியே மாற்றி விடுவார் என்றே என்னைப் போன்றவர்கள் நம்புகின்றோம்.

No comments: