Thursday, November 03, 2022

நிர்வாக அறிவு

நிர்வாக அறிவு என்பது பட்டப்படிப்பு படிப்பதாலோ, குறிப்பிட்ட ஆட்களிடம் பயிற்சி எடுத்துக் கொள்வதாலோ வராது. 

கற்றுக் கொள்ளவும் முடியாது.  

25 சதவிகிதம் இதன் மூலம் புரியக்கூடும்.  ஆனால் உண்மையான நிர்வாக அறிவு என்பது

கோவை Bomb /கேஸ் சிலிண்டர் வெடிகுண்டு வெடிப்பு / முதல்வர் மெத்தனம் / அண்ணாமலை Press Meet Oct 25 2022

அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்குத் தயாராக இருக்க வேண்டும்.

24 மணி நேரம் உழைத்து முடித்து விட்டு ஓய்வு எடுக்க வேண்டும் என்று தோன்றாத வண்ணம் அடுத்தடுத்த வேலைக்கும் நம் மனமும் உடலும் தயாராக இருக்க வேண்டும்.

உடல் ஆரோக்கியத்துடன் உள்ள ஆரோக்கியம் மிக முக்கியம்.

கட்சி அரசியல் என்பது வேறு. எட்டு கோடி மக்களுக்கு பொதுவான ஒருவராக இருந்து நிர்வாக அரசியல் செய்ய வேண்டியது வேறு.

கோப்புகளைத் தினமும் பார்க்க ஐந்து மணி நேரமாவது உட்கார்ந்து பொறுமையாக அலசி ஆராயத் தெரிய வேண்டும்.

கேள்வி கேட்டுப் புரிதலை உருவாக்கிக் கொள்ளக் குறிப்பிட்ட விசயங்களைப் பற்றி அடிப்படையாவது புரிந்து இருக்க வேண்டும்.

உளவுத்துறை ஆட்கள் என்பது நிர்வாகத்தின் உயிராயிதம். அவர்களைக் கையாளத் தெரியாத பட்சத்தில் கருமாதி செய்தி பின்பு ஒரு பெண்மணியை இன்னும் தமிழர்கள் இட்லி கதையைப் பேசி தூற்றுவது போலவே எதிர்காலம் பேசப் போகின்றது?

வாசிப்பு அனுபவம் இல்லாவிட்டால் அப்படிப்பட்ட பலரிடம் உறவாடி அனைத்தையும் உடனே கிரகிக்க அறிவு வேண்டும்.

ஓட்டரசியலுக்கு ஓராயிரம் காரணம் சொல்லச் சுற்றிலும் ஆட்கள் இருப்பார்கள்.  ஆனால் வாழ்நாளுக்குப் பிறகும் நம் நிர்வாகம் எப்படி இருந்தது என்பதனை சுட்டிக் காட்டக் காலம் வழங்கிய வாய்ப்பு என்று நாம் பணிபுரிகின்ற பதவியை நினைக்க பெரிய மனது வேண்டும். 

மக்கள் நலன் மீதி பற்றுதல் வேண்டும். 

ஒவ்வொரு நாளும் பயம் கலந்த அணுகுமுறை வேண்டும்.  

இவற்றை   எல்லாம் விட தேசத்தையே துண்டாட நினைக்கும் அழிவுச் சக்திகளுக்கு அகோரத்தலைவனாகவும் மாறியிருக்க தெரிந்து இருக்க வேண்டும்.

இவையெல்லாம் இருக்கின்றதா?

No comments: