Saturday, November 12, 2022

TIMES NOW - K.Annamalai/ஆபாச ராசா மட்டுமல்ல திமுக மக்கள் கேள்வியைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 தேசியக் கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் உண்டான ஒரே வித்தியாசம் கோஷ்டிப் பூசலின் வடிவம்.  மாநிலக் கட்சிகள் என்றால் அது பங்கு பிரிப்பது பணப் பிரச்சனைகள்  அடிப்படையில் உருவாகும்.  
திமுக  அதிமுக வில் மாவட்டம் தோறும் கலவரத்திற்குப் பின்னால் இருப்பது அனைத்தும் அதிகாரம் வேண்டும் என்பதல்ல.  "உன் அதிகாரத்தை நீ வைத்துக் கொள். ஆனால் எனக்குச் சாராயக்கடை முதல் உள்ளே கனிம வளக் கடத்தல் வரைக்கும் முறையாக பங்கு பிரித்து வாரம் தோறும் மாதம் தோறும் கொடு.  நீ எப்போதும் போலப் பதவியிலிருந்து கொள்" என்பதாக முடிப்பார்கள்.  

ஆனால் தேசியக் கட்சியில் இது வேறு விதமாக இருக்கும்.  டெல்லியின் கையில் குடுமியிருக்க சற்று நடுக்கம் எப்போதும் இருக்கும்.  

கூட இருப்பவர்கள் மூலம் எப்போது வேண்டுமானாலும் கவிழ்க்கப் படலாம் என்ற அச்சம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.  மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் தான் தாலுகா வாரியாக இருக்கும்.  வடகிழக்கு மாநிலங்கள் முதல் பாஜக ஆள்கின்ற மாநிலங்கள் அனைத்திலும் அங்கங்கே இருக்கின்ற சிறிய கட்சிகள் இந்த பண விசயங்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள். இதனைத் தேசியக் கட்சிகளால் மாற்ற முடியாது.

இந்த இடத்தில் அண்ணாமலை வருகை என்பது இங்குள்ள எவராலும் எதிர்பார்க்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது. அதிலும் புத்திசாலியாக இருப்பார் என்பதனை தொடக்கத்தில் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். தொடர்ந்து அவரின் களப்பணியை எரிச்சலுடன் கவனித்தார்கள். நிறுவன கட்டமைப்பில் அவர் காட்டிய வேகத்தைக் கலக்கத்துடன் பார்த்தார்கள். இலக்கு கொடுத்து வேலை வாங்கும் விதங்களை வேண்டா வெறுப்பாக பார்த்தார்கள்.  இதையெல்லாம் விடப் பலகீனம் இல்லாத இளைஞர் என்பதனை நம்ப முடியாமல் மறுகினார்கள்.  

கத்திப் பார்த்தார்கள். கதறித் தீர்த்தார்கள்.  கடைசியில் திரைக்கதை எழுதத் தொடங்கினார்கள்.  

ஆனால் அண்ணாமலை ஒவ்வொரு நாளும் பத்திரிக்கையாளர்களிடம் லேயர்களை பிரித்து வசனம் எழுதிக் கொடுக்க பலருக்கும் வயிற்றுப் போக்கு போக உளவுத்துறையின் உதவியை நாடினார்கள். அவர்கள் தங்கள் இறுதிக் காலம் மோசமாகி விடுவோமா என்ற அச்சத்தில் அமைதியாக இருக்கத் தொடங்கினார்கள்.  இது தான் இப்போது இங்கே நடந்து கொண்டு இருக்கின்றது.  

உழைக்க முடியாதவர்கள், திறமை இல்லாதவர்கள் அப்படி உள்ளவர்களை அங்கீகரிப்பார்களா?

குறுக்குவழிப்பூனைகள் தான் அய்யாவும் அக்காவும்.  இன்னும் பலதும் உள்ளே குறுக்கே மறுக்கே ஓடும்.  தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொன்றாக வெளியே வரும்.

அண்ணாமலை அவர்களின் எழுச்சி இங்கே பலருக்கும் எரிச்சலூட்டுகின்றது.  

ஒரு சின்ன பட்டியல் தருகின்றேன்.  நீங்கள் யோசித்துப் பார்க்கவும் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். 

செங்கல்பட்டு, விழுப்புரம், திண்டிவனம் இந்த மூன்று மாவட்டங்களில் பாஜக வில் பொறுப்பில் உள்ளவர்கள் பாமக மற்றும் விசிக இரண்டு பேர்களை மீறி ஏதும் செய்து விட முடியும் என்று நம்புகின்றீர்களா?  இவர்கள் இருவரும் சூழல் பொறுத்து திமுக அல்லது  அதிமுக வுடன் பங்கு பிரித்துக் கொள்வார்கள்.  

ஆனால் கொங்கு மண்டலத்தில் வந்து பாமக அல்லது விசிக வந்து கை வைத்தால் கொட்டையைப் பிதுக்கி விடுவார்கள்.  இது போலக் கட்சிகளில் உள்ள அல்கரிதம் மாறும். திருட்டுத்தனமாக அனுபவிக்கும் விதம் மாவட்டம் தோறும் மாறும், கூடும் குறையும்.  

காங்கிரஸ் என்ற கட்சியைத் தன் ஜட்டி போலத் தேவைப்படும் போது போட்டு கழிப்பறையில் கழட்டிப் போடும் கந்தல் துணியாக கருணா கடந்த ஐம்பது ஆண்டுகளாக வைத்திருந்ததற்குக் காரணம் இங்குள்ள பீட்டர் அல்போன்ஸ் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள்.  இவர் மட்டுமல்ல. பெரிய பட்டியல் உண்டு.  அதனால் காங்கிரஸ் கட்சியை யாரும் தேசியக் கட்சியாக கருதுவதில்லை.  

பிணம் தூக்கிக் கொண்டு போகும் மாத்து துணி விரிக்க ஒருவர் வருவார் அல்லவா? நிகழ்ச்சி முடிந்த பின்பு அவர் பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விடுவார்.  மற்றொரு பிண வீட்டில் அவரைப் பார்க்கலாம்.  

அதே போலத்தான் தங்கபாலு, அழகிரி சிதம்பரம்,

பீட்டர் போன்ற கூலிக்கு மாறாடிக்கும் வீராதி வீரர்கள் நமக்கு என்ன லாபம் என்பதனை மட்டும் கருத்தில் கொண்டு கட்சியைக் கருமாதி செய்து வைத்திருந்த காரணத்தால் உள்ளே இருக்கும் குட்டி குட்டி கட்சிகள் யாரும் காங்கிரஸ் குறித்துக் கவலைப்பட்டதே இல்லை.  இல்லை எனில் உலக மகா கேடி செல்வப்பெருந்தகை எல்லாம் காங்கிரஸ் பராம்பரியம் என்று தில்லையாடி வள்ளியம்மை போலப் பேச முடியுமா?  செத்துப் போன ஆடிட்டர் கூடப் பேயாய் வந்து பயமுறுத்தாமல் இருப்பதற்குக் காரணம் இவர்கள் இருக்கும் பக்கம் செல்லவே கூடாது என்பதாகத்தானே இருக்கும்.

ஏன் இதை அப்பட்டமாக எழுதுகின்றேன் என்றால் அய்யா தன் அண்ணனுக்கு விழா நடத்தினால் உனக்கு எங்கே வேர்க்கிறது? என்பதாக பலரும் கொந்தளிக்கின்றார்கள்.  அம்மா அவர்கள் தத்துவ முத்துக்களை உதிர்த்து கோபாலபுரம் சென்று நலம் விசாரித்தால் உனக்கு ஏன் பொறாமையாக இருக்கின்றது என்று அறிவுரை கூறி விருப்பக்குறியீட்டைத் தங்கள் இடத்தில் மானாவாரியாக பயிர் செய்கின்றார்கள்.

அடக் கிறுக்குபயலுகளா?

கருணா தமிழகம் முழுக்க அறிந்த தங்கள் கட்சியின் சின்னமான உதய சூரியனைப் புதிதாக தேர்தலில் போட்டியிடும் கட்சி போலத்தான் பாவித்து எப்போதும் பதற்றத்துடன் இருப்பார்.  எந்த விழாக்களிலும் இரட்டை இலைக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று சொல்ல மாட்டார்.  அதாவது அவர் சொன்னது என்னவெனில் எக்காரணம் கொண்டு எதிர்க்கட்சியின் சின்னங்களை எந்த வகையிலும் எந்த இடத்திலும் தெரியப்படுத்த வேண்டாம் என்பதனை பொது மேடைகளில் கோரிக்கையாகவும் வைத்துள்ளார்.  

இதைத்தான் சாப்பிட்டு முடித்து விட்டு இலையைத் தூக்கி வெளியே எறிந்து கையைக் கழுவுங்கள் என்று சொல்லிப் புரிய வைத்தார்.

சரி இங்கே தொண்டர் செல்வாக்கு இல்லாத அய்யாவும், அக்காவும் விழா நடத்தினால் என்ன? விழாக்களில் கலந்து கொண்டால் தான் என்ன? இவர்களால் என்ன தாக்கத்தை உருவாக்க முடியும்? மேலிடம் உத்தரவு கொடுத்து இருக்கலாம் அல்லவா? என்றொரு கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும்.

சில வாரங்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கோமாளியை வந்து பார்த்து கருணா இருந்ததற்குத் தங்கள் இயக்கத்தின் சார்பாக அஞ்சலி செலுத்தினோம் என்பதனை எழுத்து வடிவில் கொண்டு கொடுத்து கோரிக்கை மனுவை அளித்தார்கள்.  அதாவது ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தத் தமிழக அரசு எந்த தொந்தரவும் தரக்கூடாது என்பதற்காக.  

ஆனால் இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கின்றது?

தமிழகத்தில் எந்த துறையிலும் நியமிக்கப்பட்ட எவரும் தங்கள் கல்வித்தகுதியோ அல்லது முறைப்படியான போட்டித் தேர்வுகளில் வென்றவர்களோ இல்லை. வெவ்வேறு வழிகளில் வந்தவர்கள். இப்போது உள்ள கவரிமான்கள் அனைத்தும் அப்பேர்ப்பட்டவர்கள்.  

அதனால் தான் கிறுக்குத்தனமாக உள்ளரங்கத்திற்கு நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவிற்கு உன்மத்தம் பிடித்து அலைகின்றார்கள்.  

இவர்களை உள்ளே நுழைய விட்டால் நாம் நேர்மையாக படிக்க வேண்டும். குறுக்கு வழியில் வர முடியாது. சம்பாதிக்க முடியாது. பங்காளி, மச்சான் என்று இடம் மாறு தோற்றப் பிழையை உருவாக்க முடியாது என்ற அச்சம் இங்கே இருப்பவர்களிடம் கீழே இருந்து மேலே இருப்பவர்கள் வரை ஒவ்வொரு துறையிலும் உள்ளது என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

இந்த சமயத்தில் போராடிப் பாடுபட்டு நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைத்து பத்து சதவிகித கட்டுமானத்தை உருவாக்கியுள்ள அண்ணாமலை அவர்களுக்கு நாம் முடிந்தால் உதவலாம்.  அல்லது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம்.  

ஆனால் நாம் செய்வது என்ன? 

அரசியல் நாகரிகம் என்ற பெயரில் பன்றிக்குட்டிகள் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து சாக்கடையில் வாழும் ஜந்துக்களைத் தேர்ந்தெடுத்து வரிசையாக கட்டித் தழுவி ஆராதனை செய்தால் என்ன விளைவு உருவாக்கும்.

TIMES NOW - K.Annamalai/ஆபாச ராசா மட்டுமல்ல திமுக மக்கள் கேள்வியைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இப்போது மாவட்டச் செயலாளர்கள் கொஞ்சம் வேலை செய்யத் தொடங்கி உள்ளனர்.  அவர் நியமித்த ஆள் இவர் நியமித்த ஆள் என்ற லாபி கொஞ்சம் மறைந்துள்ளது.  வாக்குச்சாவடிக்குழு இனி உருவாக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

டெல்லி அரசியல் நாகரிகம் இங்கு எடுபடாது.  

இங்கே இந்த பன்றிக்குட்டிகளை மேய்க்க ஒழிக்க ஜெயலலிதா அரசியல் தான் எப்போதும் உதவும் என்பதனை நீங்கள் மனதில் வைத்திருங்கள்.  அதைத்தான் அண்ணாமலை செய்து கொண்டு இருக்கின்றார்.  

நீங்கள் கெடுத்தே தீருவேன்.  அதை ஆதரித்து எழுதுவேன் என்றால் 

காலம் கவனிக்கும்.

காலம் கற்றுக்கொடுக்கும்.

நானும் நீங்களும் இங்கே தான் இருக்கப் போகின்றோம். 

பார்ப்போம்.

No comments: