சுய ஊரடங்கு 3.0 - 58
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 17 வரை)
07.05.2020 அன்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.  காட்சிகள் இங்கே புகைப்படமாக.  கொரானா என்பது பெரும் தொற்று நோய். வெளியே வரக்கூடாது. தனித்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு தான் மக்களிடம் அன்போடு சொன்னது என்பதனை மனதில் வைத்துக் கொண்டு இந்தப் படங்களைப் பார்க்கவும். மற்றவற்றை மறந்து விடவும்.  நன்றி.
நாளையுடன் இந்தத் தொடர் முடிவுக்கு வருகின்றது. மேலும் அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்பதனை இந்த நிமிடம் வரைக்கும் அறிவிக்கவில்லை.  பொதுப் போக்குவரத்து மட்டும் இன்னும் தொடங்கவில்லை.  பேரூந்து, மகிழ்வுந்து, சரக்கு கட்டண வண்டிகள் தொடர்ந்து செயல்பட்டால் இயல்பான நிலைக்கு வந்து விடும்.  பத்தாம் வகுப்பு பரிட்சை வருகின்ற ஜுன் 1 முதல் 12 வரைக்கும், 11 ஆம் வகுப்பு மீதம் உள்ள ஒரு பாடப் பரிட்சை ஜுன் 2 ஆம் தேதியும் வைத்து உள்ளனர்.















2 comments:
கடைகள் திறப்பு - :( வேதனை தான் - படங்களைப் பார்த்து.
மதுக் குப்பிகளைச் சுமந்து சென்ற மாது - படம் இந்த வருடம் அதிகம் ஷேர் செய்யப்பட்ட படமாக இருக்கலாம்!
உண்மை தான்.
Post a Comment