Saturday, December 31, 2022

31.12.2022

 கலங்காதே மகளே

செயற்கை முறையில் விந்தணு வங்கியில் முன் பதிவு செய்துள்ளேன்.

கணவன் என்ற பெயரில் ஆண் துணை உன்னுடன் இருப்பான்.

அவன் உதவாக்கரை என்று கத்தி விடாதே

சுபவீ கோஷ்டி உள்ளே புகுந்து விடும்.

குலம், கோத்திரம், சாதி, மதம், ஆண், பெண், ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம்
அவையெல்லாம் இனி தேவையிருக்காது.

கட்டிங் வாங்கு

கலக்காமல் முழுங்கு.


()()()()()

அண்ணாமலை அவர்கள் இப்போது கொடுத்த பேட்டியில் திருவாரூர் கொள்ளைக்கூட்டம் குறித்து ஊழலின் பரிணாமம் குறித்துப் பேசியது அனைத்தும் சிறப்பு என்ற போதிலும்
திமுக என்ற தனியார் நிறுவனத்தில் இருப்பவர்கள், அதனைச் சார்ந்து செயல்பட்டுக் கொண்டு இருப்பவர்கள், மறைமுகமான ஆதரித்த ஆதாயம் பெற்றவர்கள்,
இந்த மூன்றுக்குள்ளும் இருக்கும் பல்வேறு கிளை பிரிவுகள்
இதன் தொடர்பாக உலகம் முழுக்க பரவியுள்ள அடி ஆழ வேர்கள்
இவற்றை ஒன்று சேர்த்துப் பட்டியலிட வேண்டும்.
1970 முதல் படிப்படியாக பிரிக்க வேண்டும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்த, வளர்க்கப்பட்ட நிதி ஆதாரங்களை வரைபடமாக மாற்ற வேண்டும்.
அரசு ஆவணங்களில் காட்டப்பட்டதை ஒன்று சேர்க்க வேண்டும்.
(இதில் உள்ள முக்கியமான சவால் என்னவெனில் சசிகலா கும்பல் வைரமாக, தங்கக்கட்டிகளாக, பிஸ்கெட் வடிவம் என்று பலவிதங்களில் சேர்த்தது. இப்போது புதிதாக கிரிப்டோ நாணயம் என்றொரு நவீனத் தொழில் நுட்பம் வேறு நுழைந்துள்ளது. இவற்றை எல்லாம் கணக்கிட வேண்டும்.)
ஜனவரி 1 முதல் ஏப்ரல் 1 வரை மூன்று ஷிப்ட் பணிபுரிந்தாலும் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 380 குழு அமைத்துச் சேகரித்தாலும் இவற்றைச் சுமாரான கணக்குக்குக் கொண்டு வரக் குறைந்த பட்சம் ஒரு வருடம் ஆகும். அப்பவும் கால் பங்கு தான் கண்டு பிடிக்க முடியும்.
எலி, பெருச்சாளியை விட மோசமான அசிங்கமான மிருகங்கள் வைத்துள்ள கணக்கு என்பது உங்களால் கற்பனையில் கூடக் கொண்டு வர முடியாது.
அண்ணாமலை இந்த விசயத்தில் முழு மூச்சாக இறங்குவாரா?

()()()()()

2022
இந்த வருடம் ஆச்சரியப்பட்ட விசயங்கள்.....
1. மகிழ்ச்சி, சந்தோஷம், கொண்டாட்டம், ஃபன் என்று பல பெயர்களில் சொன்னாலும் திரைப்படப் பாடலுக்கு வாயசைத்து ஆத்தா, அப்பன், மகள், பேரன், பேத்தி என்ற உறவு முறை வரம்பு எதுவுமில்லாமல் உடல் அசைவுகள் மூலம் நடனம் என்ற பெயரில் அங்க உறுப்புகளை உலகம் முழுக்க பலரும் பார்க்க வைத்த கூட்டம். தங்களிடம் இருப்பது அதுவொரு உறுப்பு என்கிற ரீதியில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அதை எப்படி வேண்டுமானாலும் இயக்கலாம். முக்கலாம். முணங்கலாம் என்கிற அளவுக்குத் தரம் தாழ்ந்து ரீல்ஸ் வழியாக ஸ்டோரிஸ் வழியாக நம்மை வந்தடைந்த பல காட்சி வடிவம் என்னை அதிக அளவு யோசிக்க வைத்தது. பிற்போக்குவாதி என்பார்களோ?
2. விபரம் தெரிந்தவர்கள் கூடப் பள்ளி முதல் வங்கி வரை தனியார் என்றால் அது பக்கா என்று நம்புகின்றார்கள். அது சார்ந்து நாம் பேசினால் நம்மை கன்சர்வேட்டிவ் என்று அழைக்கத் தயாராக இருக்கின்றார்களே?
3. அரசாங்கம் தொழில் செய்யக்கூடாது என்பது உண்மை. ஆனால் தொழில் செய்பவர்கள் லாபம் என்பதற்காக மட்டும் வரைமுறை எதுவுமின்றி ரத்தக் காட்டேறி போல ரத்தம் உறிஞ்சக்கூடியதாக இருக்கும் நிறுவனங்களைப் பற்றி நாம் பேசலாமா? பேசக்கூடாதா?
4. வட இந்தியர் நடத்தும் மொத்தத் துணி கொள்முதல் மற்றும் விற்பனை கடையில் ஏன் ஜிபே இல்லையா? என்றதும் அடிக்க வராத குறையாக கடித்து வைத்தார். முதல் முறையாக ஆச்சரியமாக இருந்தது. மற்றொரு தமிழர் நடத்தும் கடையில் நுழைவு வாயிலில் எழுதியே வைத்து உள்ளனர். இரண்டு இடங்களிலும் பணம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று தைரியமாக எழுதி வைத்து உள்ளனர்.
(இரண்டு இடங்களிலும் ஒரு நாள் வியாபாரம் குறைந்தபட்சம் பத்து லட்சம்)
ரசீது இல்லாத வியாபாரங்கள் தான். அவர்கள் வழங்கும் ரசீது குழந்தைகள் ஆய் துடைக்க உதவும் காகிதம் போலவே இருந்தது. ஆனால் மீன்கடை முதல் கிராமத்துப் பாட்டி வைத்துள்ள தெருவோரக் கடை வரைக்கும் யூபிஐ சக்கைப்போடு போடுகின்றது. ஒரு பக்கம் தினகரன் மற்றும் சன் குழுமம் தற்போது ஆன் லைன் பணப் பரிவர்த்தனையை வைத்துக் கொண்டு மத்திய அரசு தடை கொண்டு வரப் போகின்றது என்ற அக்மார்க் புரளியைக் கிளப்பிக் கொண்டே இருக்கின்றார்கள். சம்பந்தப்பட்டத் துறையினர் அனைத்து மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
5. மின்சார வாகனமும் பேட்டரி வாகனமும் என் கண் முன்னால் அதிகம் தென்படுகின்றது. ஒரு லட்சம் என்கிற அளவுக்கு வரம்பு உள்ளது.
6. கற்று களத்தில் இறங்கு யூ டியுப் சேனல் மூலம் இந்த வருடம் மட்டும் 1,37,548 views பேர்களைச் சென்று அடைந்துள்ளோம்.
7. விலைவாசி உயர்வைப் பற்றி யாராவது பேசினால் சிரித்துக் கொள்வதுண்டு. சந்துக்குள் இருக்கும் சிறிய மளிகைக் கடைகளில் விற்கும் விற்பனை விலைக்கும் டி மார்ட் போலப் பெரிய கடைகளுக்கும் 30 சதவிகிதம் விலை வித்தியாசம் உள்ளது. அதாவது அடக்க விலையில் உள்ள லாபத்தை விடத் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் அவரவர் விரும்பும் வண்ணம் தான் இங்கே தங்கள் விலை என்று ஒன்றை நிர்ணயம் செய்கின்றார்கள். உணர்ந்த மக்கள் விழித்துக் கொள்கின்றார்கள்.
8. நண்பருக்காக முதல் முறையாக நாயுடு ஹால் என்ற கடைக்கு (இங்கு திறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது) சென்ற போது அங்குள்ள துணிகளின் விலையை வைத்துப் பார்த்த போது அவர்கள் விரும்பும் லாபம் என்பது ஆயிரம் மடங்கும் என்பதாக புரிந்து கொண்டேன். அதே போல ட்ரெண்ட்ஸ் லாப அளவு 400 மடங்கு. சமீப காலமாக ஜியோ கண்ணன் மார்ட் உடன் சேர்ந்து திறந்துள்ளனர். துணி வகைகளைப் பார்த்து போது அவர்கள் வைத்துள்ள லாப அளவு சிலது 300 சிலது 600 (குறிப்பாக குழந்தைகள் ஆடைகள்). இதில் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒன்று என்னவென்றால் இவர்கள் அனைவரும் தைத்துக் கொடுக்கும் உற்பத்தியாளர்களுக்கு 90 முதல் 120 நாட்கள் கழித்துத் தான் பணம் கொடுக்கின்றார்கள்.

முழுமையாக கொடுப்பார்களா? என்பது இறைவனுக்கு மட்டும் தான் தெரியும். என்ன குறை சொல்வார்கள்? எதில் பிடித்தம் செய்வார்கள் என்பது முதலாளிகளால் யூகிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

2022 இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்பது நடுத்தரவர்க்கத்திற்கு மேலே உள்ள அத்தனை பிரிவுகளும் கஞ்சப் பிசினாறியாக மாற்றிக் கொண்டு கையில் இருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்து எப்படி மேலும் மேலும் பெருக்குவது என்பதில் கவனம் செலுத்துகின்றார்கள்.

ஆனால் நடுத்தரவர்க்கத்திற்குக் கீழே உள்ள ஒவ்வொரு பிரிவும் தெருத் தெருவாக அலைந்து எங்கே ருசியாக திங்க முடியும் என்பதில் தொடங்கி கடன் வாங்கி செவழித்து தங்களை அமெரிக்கனாக ஐரோப்பியனாக காட்டிக் கொள்ளத் துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

()()()()()
2022 பின்னோக்கி
இந்த வருடம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்பட்டவர்கள் எனில்......
அருகே வாருங்கள்.
உங்களுக்குப் பிடித்த பிடிக்காத செய்தித்தாளை அல்லது வார இதழை எடுத்து முழுமையாக ஆழ்ந்து உங்களால் வாசிக்க முடிகின்றதா? என்று பாருங்கள்?
சமீபமாக ஏதாவது 100 பக்கம் உள்ள அளவில் உள்ள புத்தகங்கள் ஏதாவது படித்து உள்ளீர்களா? சோதனை முயற்சியாக சுவாசம் பதிப்பகத்தில் ஏதாவது ஒரு புத்தகத்தை வரவழைத்துப் படிக்க முடிகின்றதா? என்று பாருங்களேன்.
எனக்குத் தெரிந்து பலரும் புத்தக வாசிப்பை விட்டு வெளியே வந்து விட்டனர். இந்த வருடம் முழுக்க ஒரு புத்தகம் கூட முழுமையாக படிக்கவில்லை என்கின்றார்கள். செய்தித்தாள்களும் எங்களுக்கும் தொடர்பே இல்லை என்கிறார்கள். அண்ணாமலை பேசிய ஒரு மணி நேரப் பேச்சை எங்களால் முழுமையாக கேட்க முடியவில்லை. பொறுமை இல்லை என்கிறார்கள்.
ஆம் பொறுமையில்லை என்ற வார்த்தை தான் 2024 உங்கள் வாழ்க்கையைப் பெருமளவு மாற்றப் போகின்றது.
மன ஆரோக்கியத்துடன் உடல் ஆரோக்கியம் இரண்டும் சரி சமமாக இருந்தால் மட்டுமே 2024 ல் உங்களால் மற்றவர்களுக்குப் பிரச்சனை இல்லாத ஆண்டாக இருக்கும்.
வாசிக்கத் துவங்குங்கள்.
அவன் சரியில்லை. இவன் சரியில்லை. அவன் அந்தச் சார்ப்பு. இவன் இந்தச் சார்பு.
இந்தக் கதையெல்லாம் விட்டு ஒதுக்கி விட்டு உங்கள் மனச்சார்ப்பு எதிலும் ஒட்டாமல் உண்மை பக்கம் இருக்கட்டும்.
தக்கார் என்ற புத்தகத்தைச் சென்ற மாதம் படித்தேன். ஒரு இரவு முழுக்க என்னைத் தூங்க விடாமல் பயமுறுத்திய ஆச்சரியம் நிறையத் தகவல் நிறைந்த ஆவணப்புத்தகத்தை வாய்ப்பு இருந்தால் வாசிக்கவும். கூகுளில் தேடிப் பாருங்கள். தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தின் தொடர்ச்சி இது.

No comments: