Thursday, December 22, 2022

தமிழர்களுக்கு 23 ம் புலிகேசியும் சாராய அமைச்சரும் போதும்

அண்ணாமலை அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசுகின்றார் என்றால் எந்த செய்தி ஊடகங்கள் அதனை நேரிடையாக ஒளிபரப்பு செய்கின்றன என்பதனை ஒரு சுற்று சுற்றி வந்து பார்த்துக் கொண்டே வருவேன். நேரம் இருந்தால் வரக்கூடிய விமர்சனங்களைப் படிப்பேன்.




சமீப காலத்தில் மதம் மாறிய கிறிஸ்துவர்கள் மற்றும் வறுமை நிலையில் வாடும் இஸ்லாமியர்கள்(எப்படித் தெரியும் என்று கேட்காதீர்கள். இஸ்லாத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் விரும்பத்தகாத வெடிகுண்டு சமாச்சாரங்களுக்குப் பின்னால் இருப்பது ஒன்றே ஒன்று தான். அவர்களின் ஏழ்மை. இதனை வைத்துத் தான் கண்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் சாதிக்கின்றார்கள்) எழுதும் மட்டரகமான விமர்சனங்கள் படிக்கும் போது சிரித்துக் கொள்வதுண்டு.
நேற்று அண்ணாமலை மூன்று இடங்களில் பேசினார்.
பல கட்சிகளிலிருந்து பாஜக வந்தவர்கள் சேரும் நிகழ்வு. நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி. அய்யப்ப குருசாமி சங்கமம்.
புதிய தலைமுறையில் ஒளிப்பதிவாளருக்கு அந்த குயுக்தி மூளை வந்ததா? இல்லை அதனைக் கண்காணித்துக் கொண்டு இருந்த நாதாரிக்குத் தோன்றியதா? இல்லை கார்த்திகைச் செல்வன் வளர்த்து விட்டுச் சென்ற கள்ளிச் செடிகளில் ஏதோவொன்று உள்ளே இருந்து பாஜக விற்கு எதிராக செயல்படுகின்றதா? என்று தெரியவில்லை.
அண்ணாமலை அவர்களின் முகத்தைக் காட்டிக் கொண்டு இருந்த கேமரா அவரின் கைக்கடிகாரம் நோக்கி வந்தது. நெருங்கி வந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் கைக்கு அருகே நிலை குத்தி நின்றது.
அதாவது அந்த கிறுக்கன் அண்ணாமலை பேச்சை டைவர்ட் செய்கின்றானாம். நேற்று நடந்த பேச்சில் புதிய தலைமுறை பதிவு செய்யப்பட்ட காட்சி வடிவம் கிடைத்தால் பாருங்கள்.
அண்ணாமலை அவர்களை வைத்து பிச்சை எடுக்க வேண்டிய சூழல். ஆனால் அந்த வன்மம் உள்ளே அடங்காத வெறியை உருவாக்குவதைத் தவிர்க்கவும் முடியவில்லை.
த்தூ...

()()()

சாராயத்துறைக்கு அமைச்சராக செந்தில் பாலாஜி வந்தவுடன் டாஸ்மாக் கடைகளில் (கடந்த சில வாரங்களாக) ஒரு சிரிப்பான சமாச்சாரம் நடந்து கொண்டு இருக்கின்றது. என் எழுத்தை நேசிக்கும் நண்பர் எழுதச் சொன்னார்.
சிரிப்பு என்றாலும் ஒரு வகையில் வேதனை அல்லது துரோகம்.
தமிழகத்தில் பீர் விற்பனை என்பது எப்போதும் அதிகம். குடித்துப் பழகாதவர்கள், பழகத் தொடங்கியவர்கள், விஸ்கி, பிராந்தி உடம்பு தாங்காதவர்கள் என்று உடல் நிலையைப் பாதுகாக்க நினைப்பவர்கள் அத்தனை பேருக்கும் பீர் தான் சாசுவதம்.
இதில் மூடி வைத்து பீர் பாட்டில்களில் சென்ற ஆட்சியில் நான்கில் ஒரு பங்கு டுப்ளிகேட் ஆக வந்து கொண்டு இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் புதிய மாற்றம் நடந்தது. தொடக்கத்தில் பீர் சுவை ஓரளவுக்குத் தரத்துடன் வந்தது. படிப்படியாக மாறத் தொடங்கியது. தற்போது எது அசல் எது போலி என்பதனை கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று கலந்து விட்டது.
அத்துடன் புதிதாக அறிமுகம் ஆன மூடியை எளிதாக (ஓப்பனர் இல்லாமல்) உடைக்க ஒரு கம்பி வடிவம் கொடுத்து அதனை இழுத்தால் எளிதாக நாமே உடைத்துக் கொள்ளும் வண்ணம் பீர் வந்து கொண்டு இருந்தது. அதில் போலி வருவது கொஞ்சம் குறைவு. காரணம் அதில் உள்ள வேலைப்பாடு கண்டு அதில் ஸ்டிக்கர் ஒட்டுவது முதல் இதுபோன்ற இழுவை மூடி வைத்து கடைக்கு அனுப்புவது வரைக்கும் எல்லாமே சிக்கல் தான்.
கடந்த சில வாரங்களாக பாலாஜி அய்யா என்ன யோசித்தார் என்று தெரியவில்லை. கணக்கு வழக்குகளில் கோபாலபுரம் இறுக்கிப் பிடித்து இருப்பார்கள் போல.
இழுவை போல நவீன ரக மூடி வரக்கூடிய பீர் பாட்டில்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து விட்டனர். அதாவது எது அதிகம் விற்பனை ஆகின்றதோ அது உடனே நிறுத்தப்படும். எது டுப்ளிகேட் செய்ய வசதியாக இருக்குமோ அது தான் தற்போது மதுப்பிரியர்களை வந்து சேர்ந்து கொண்டு இருக்கின்றது.
மூத்திரத்தைப் பாட்டிலில் அடைத்து வைத்து ஒரு பாட்டில் 500 ரூபாய் என்று கொடுத்தால் வாங்கத் தயாராக இருக்கும் தமிழர்களுக்கு புலிகேசியும் சாராய அமைச்சரும் போதும் என்பேன்.

No comments: