Friday, November 05, 2021

கு. அண்ணாமலை எனும் நான்/ ஜோதி கணேசன்

குடும்பம், தேசம், அரசாங்கம் ஆகிய அமைப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதற்கு இத்தகைய பிணைப்பு சார்ந்த பிரக்ஞை அவசியம். இத்தகைய புரிதலைக் கொண்டே இயற்கையையும் பூமியையும் கூட நாம் பேரழிவிலிருந்து காக்க முடியும். (உலக அளவில் சுற்றுச்சூழல் இயக்கமே பெரிதாகத் தொடங்கியிராத 1960களில் தீன்தயாள்ஜி இக்கருத்தை வைத்தது குறிப்பிடத் தக்கது.)  

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் மதிப்பிற்குரிய கு. அண்ணாமலை அவர்கள் முன்னால் இருக்கும் சவால்கள். இதுவரையிலும் செய்த சாதனைகள். அதிகாரத்தை அடைய நாம் செய்ய வேண்டிய முயற்சிகள்.
 
இந்தியாவின் பொருளாதார அமைப்பு அறத்தின் அடிப்படையில் பாரதியப் பண்பாட்டை அடியொற்றி அமையவேண்டும். மையத்தில் அதிகாரம் குவிக்கப்படாததாகவும் (decentralized), 
பஞ்சாயத்துகள் போன்ற அமைப்புகள் சுதந்திரத்துடன் இயங்க வழிசெய்வதாகவும் இருக்கவேண்டும். 

அடிப்படைத் தேவைகளுக்கும் வசதிகளுக்கும் அப்பால், மேற்கத்திய பாணியிலான அதீத நுகர்வுக் கலாசாரம் ஊக்குவிக்கப்படக்கூடாது. 

****

பாரதிய ஜனதாக் கட்சியின் அரசியல் அமைப்பு சட்டத்தில் (BJP Party Constitution) அதன் அதிகாரபூர்வக் கொள்கையாக ‘ஒருங்கிணைந்த மானுடவாதம்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தீனதயாள் உபாத்யாவின் ஏகாத்ம மானவ வாதம் எனப்படும் ஒன்றுபட்ட மனிதநேயம் என்ற கோட்பாடு இந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதுவே தங்கள் தனித்துவ சித்தாந்தம் என இன்றைய பாஜக தலைவர்களும் பெருமையுடன் கூறுகின்றனர்.

அரசின் சலுகைகள் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் தன்னிறைவு அடையச் செய்வதுடன் அவர்கள் யாரையும் நம்மி இருக்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வழி காட்டுதல்.


No comments: