Saturday, November 13, 2021

ஜெய்பீம் த.செ.ஞானவேல்

கடந்த பத்து வருடங்களில் எவனெல்லாம் இயல்பாக பொத்துனாப்ல நல்லவன் போல அமைதியாக இருந்தானோ அவனின் உண்மையான முகத்தை இப்போது தொடர்ந்து பார்த்து ரசித்து வருகின்றேன்.. 

அவனுக்குள் இருந்த அகங்காரம் எனக்குப் பலவற்றைப் புரியவைக்கின்றது.


வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எதை எதையோ எழுதி கடைசியில் திருட்டுக் கோமாளிக்கு முட்டுக் கொடுப்பதையும் பார்த்து வருகிறேன். இவர்களுக்கு வெட்கம் என்பதே இருக்காதோ என்று யோசித்துள்ளேன். கடைசியில் அவர்களின் அஜண்டா வேறொரு வகையில் தெரிந்து விடுகின்றது. அமைதியாக அவர்களின் சந்தைப்படுத்தல் தந்திரம் உணர்ந்து கவனித்து வருகிறேன்.

சாதி வெறியில் வன்மம் மிக்கவன் என்று அடையாளம் காணப்பட்டவன் இன்று சூர்யா நடிப்பைச் சிலாகித்து எழுதுகிறான். "தமிழ்த் திரை உலகம் இது போன்ற பூக்களால் மலர வேண்டும்" என்கிறான்.

()()()

இந்த பேச்சுகளை அவசியம் கேட்டுப் பாருங்கள்.  5000 கோடி திருடி இன்று சென்னையின் அவல நிலை புரியும். கட்சி அரசியலை நீக்கி வைத்து விட்டு கருத்து அரசியல் பக்கம் வாங்க.


ஒரு படத்துக்கு எத்தனை எத்தனை விளம்பரத் தூதர்கள்? 

சூர்யா, ஜோதிகாவே இதனை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.  

இயக்குநர் ஞானவேல் தம்பிக்கு ஆயுளுக்கும் இது போதும் என்ற எண்ணம் வந்து இருக்கும்.

சீமான் "அதிகாலையில் வந்து சேர்ந்தேன். முழுமையாகப் பார்த்த பின்பே தூங்கினேன்" என்று சிலாகிக்கின்றார்.

இரண்டு கம்யூ களும் மாறி மாறி சிலாகித்து விமர்சனம் எழுதித் தள்ளிக் கொண்டே இருக்கின்றார்கள். அப்படி இருந்தவர்கள் இப்போது ஏன் தெருப் பிச்சைக்காரன் போலக் கையேந்தும் நிலைமை வந்தது என்பதனைப் பற்றி எந்த இடத்திலும் எவரும் எழுதுவதே இல்லை.

கம்யூ அதிகாரப்பூர்வமான ட்விட்டர் தளம் இப்போது 2டி நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமற்ற பிஆர்ஓ வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்றது. வியப்பாக உள்ளது.

தமிழக அரசுக்கு முல்லை பெரியார் அணையை விட ரிவ்யூ எழுதுவது தான் முக்கியம் என்கிற நிலைக்கு வந்து சேர்ந்ததுள்ளது. அணைக்கு அதிர்வு முக்கியமா? படம் உருவாக்கும் அதிர்வு  முக்கியமா?  

படங்களைப் பார்த்து நான்கு நாள் கழித்து இயல்பு நிலைக்கு வந்தால் போதும் என்று அரசே அறிவித்து விட்டது.

ஒரு விசயத்தை எப்படி சந்தைப்படுத்தல் செய்து வெற்றி பெறுவது எப்படி? என்பதனை கடந்த இரண்டு நாட்களாக வியப்புடன் கற்று வருகிறேன்.

வன்னியர் என்பதனை மாற்றி விட்டார்கள்?

அந்தோணி என்பவர் பெயரை பயன்படுத்தவில்லை?

ஐந்து மொழிகளில் வெளியிட்டு உள்ளனர்.

இந்த மூன்று விமர்சனங்களும் இன்னமும் அதிக அளவு பார்வையாளர்களைக் கொண்டு வந்து சேர்ந்துள்ளது என்பது தான் உண்மை.

சொன்னவர்கள் அத்தனை பேர்களையும் கிறுக்கர்களாக மாற்றிவிட்டார்கள்.

இயக்குநர் ஞானவேல் மற்றும் மரியாதைக்குரிய கல்யாணி அய்யா அவர்களைக் கடந்த 15 வருடங்களாக நான் அறிவேன். இவர்களின் செயல்பாடுகளை ஓரளவுக்கு அறிந்தவன் என்ற முறையில் இந்தப் படத்திற்குப் பின்னால் உள்ள உழைப்பு குறித்து சொல்ல வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று தான்.  

கொள்கை மற்றும் சித்தாந்த மொழியை வணிக மொழியாக மாற்றி வசூல் சாதனையாக மாற்றியதில் இதில் தொடர்புடைய ஒவ்வொருவரும் நூறு சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளனர் என்பேன்.  

ஆனால் படத்தை எதிர்க்கும் நம்மவர்களின் உலகம் எப்படி உள்ளது.

வித்யா கர்வமும், வினோத சிந்தனைகளும், வீபரித ஆசைகளும், தான் என்ற அகங்காரமும், நான் யார் தெரியுமா? என்ற மமதையும் சேர்ந்த ஒவ்வொரு மனிதர்களும் தமிழ் இணையத்தில் எப்படிச் செயல்படுகின்றார்கள்? 

தாங்கள் விரும்பும் கொள்கைகளை எப்படிப் பரப்புகின்றார்கள்? அப்படிப் பரப்பிக் கொண்டு இருப்பவர்களுக்கு எந்த வகையில் ஆதரவு அளிக்கின்றார்கள்?

இவர்கள் சொந்த வாழ்க்கை முதல் இணைய வாழ்க்கை வரை ஒழிந்து மறைந்து வாழும் கலையை கற்று உள்ளார்கள்.

ஆனால் அவர்கள்? 

தாங்கள் விரும்பும் கொள்கைகளைப் பரப்புவதுடன் நிற்காமல் தங்கள் பக்கம் ஒவ்வொருவரையும் இழுப்பதில் முழு வெற்றி அடைந்து கொண்டே வருகின்றார்கள் என்பதனையும் கவனித்தே வருகின்றேன்.

மூன்று வாரத்தில் மாரி தாஸ் யூ டியூப் ல் வெளியிட்ட சிஎஸ்ஐ தேவாலயம் மூலம் பரவும் பணம் என்பது 75 ஆயிரம் பார்வையாளர்கள் தாண்டிச் செல்லத் தடுமாறுகின்றது. அவர் 4 லட்சம் சந்தாதாரர்களை வைத்துள்ளார் என்பதனையும் நீங்கள் கவனத்தில் வைத்திருங்கள்.

சவுக்கு சங்கர் மேல்மருவத்தூர் அடிகளார் குறித்துப் பேசிய பேச்சு அதே மூன்று வாரத்தில் 14 லட்சம் பேர்களின் பார்வையாளர்களைத் தாண்டி அடுத்த கட்டத்திற்குச் செல்வதையும் பார்த்த போது நான் மனதில் நினைத்தது.

அவர்கள் சரியாகவே செல்கின்றார்கள். செய்கின்றார்கள்.

உங்கள் வாரிசுகள் நிச்சயம் கிறிஸ்துவ அய்யங்கார், கிறிஸ்துவ அய்யர் என்ற இரண்டு சக்கரத்திற்குள் சிக்கப் போவதை உங்களால் நிறுத்த முடியாது.

இதைப் படித்தவுடன் உங்களுக்கு கோபம் வந்தால் நாளை காலை வந்து விமர்சனம் எழுதவும்.

குறைந்தபட்சம் நீங்கள் நம்பும் கொள்கைகளுக்காவது உறுதியாக நம்பிக்கையுடன் இருங்கள். சூர்யா இருந்தார். இன்று வென்றுள்ளார். எதிர்க் கருத்து கொண்டவர்களை திட்டுவதற்கு முன்னால் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்த்து விட்டு வாருங்கள். மோடி, அமித்ஷா, அண்ணாமலை மட்டும் நீங்கள் விரும்பும் வெளிச்சத்தை கொண்டு வர முடியாது. அதற்கு நீங்கள் கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும்.

இனியாவது கண்களை திறக்க முயலுங்கள்.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முருகா...

வணக்கம் கந்தா...

காதன்மை கந்தா...

அப்படியென்றால்...?

அன்புடைமை காரணமாக...!

அப்புறம்...

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

என்ன தேறுதல்...?

அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித் தெளிந்தவர்க்கு...?

என்ன அதனால்...?

பேதைமை எல்லாம் தரும்...

என்னது...?

எல்லா அறியாமையையும் கொடுக்கும்...

அப்படியா...?

அதோடு அனைத்து மடமையான விளைவுகளையும் உண்டாக்கும்...!

ஓ... அறிந்தேன்...! என்ன அதிகாரம்...?

தெரிந்து தெளிதல்

குறள் எண்:507
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்

அறிந்து தெரிந்து புரிந்து...

புரியுமா...?

பேதைமை உடையவர்களுக்கு புரிய வாய்ப்பே இல்லை...

நன்றி தாத்தா...

திண்டுக்கல் தனபாலன் said...

காதன்மை

வேறு எங்கு...?

மொத்தமே இரண்டு இடம்...! அடுத்து பேதைமை அதிகாரத்தில் வருகிறது...

குறள்...?

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்

பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமை என்ன...?

தனக்குக் கைவராத பொருளின்கண் விருப்பங் கொள்ளல்...

அது என்ன பொருள்...?

ஒழுக்கம் உட்பட பல உண்டு...

நன்றி தாத்தா...