Saturday, November 20, 2021

நீர் வழி போக்குவரத்து

2022 வருடம் என்பது இந்தியா சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் முடியப் போகின்றது.

மூன்று முக்கிய விசயங்கள்.

மோடி அரசு சாதித்த சாதனைகளில் மிக மிக முக்கியமானது.




1. நீர் வழி போக்குவரத்து 

( கன்யாகுமரி முதல் நடைபெறத் துவங்கும். இது உருவாக்கப் போகும் மாற்றங்களை நீங்கள் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. எல்லாமே தலைகீழ் மாற்றங்கள் உருவாக வாய்ப்புண்டு. குறிப்பாக மின்சாரப் பயன்பாட்டு வாகனங்கள், மின்கலம் வாகனங்கள், நீர் வழி போக்குவரத்து இவை மூன்று எரிபொருள் பயன்பாட்டு விசயத்தில் இந்தியாவில் மிகப் பெரிய பொருளாதார மாற்றங்களை உருவாக்கப் போகின்றது)

2. புதிய பாராளுமன்றக் கட்டிடம்.  

அடுத்த வருடம் மோடி அவர்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் போகின்றார்.  ஆனால் இதன் ஒருங்கிணைந்த முழுமையான திட்ட வளாகம் என்பது 2024க்குப் பிறகு உருவாகும் மூன்றாவது தடவையாக பாஜக ஆட்சியில் முழுமையாக அமரும் போது மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு என்பது இந்த புதிய கட்டிட வளாகத்தில் தான் செயல்படும். 

நவீன வசதிகள். விரைவான செயல்பாடுகள்.

3. இந்தியாவில் இனி உருவாகப் போகும், உருவாகிக் கொண்டு இருக்கும் அனைத்துச் சாலை வசதிகள் என்பது இராணுவ பயன்பாட்டுக்கும் பயன்படக்கூடியது என்பதனை முதல்முறை மோடி அரசு சாதித்துள்ளது.

இனி நீர்வழிப் போக்குவரத்து குறித்து....

கங்கை நதியில், மேற்கு வங்கத்தின் ஹால்தியாவில் இருந்து, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி இடையேயான, முதல் சரக்கு கப்பல் போக்குவரத்தை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று வரவேற்றார்.


கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், அதில் சரக்கு போக்குவரத்தை இயக்கும் திட்டத்தையும் மோடி துவக்கி வைக்கிறார். மேற்கு வங்க மாநிலம் ஹால்தியாவில் இருந்து, உத்தர பிரதேசத்தின் வாரணாசி வரையில், கங்கை நதியில், 2,000 டன் எடையுள்ள படகுகள், சிறு கப்பல்களை இயக்க முடியும். 

ஹால்தியாவில் இருந்து வரும் முதல் சரக்கு படகை, பிரதமர் வரவேற்றார்.

()()()

சாகர்மாலா திட்டத்தின் கீழ் 89 திட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. ரூ.4.32 லட்சம் கோடி மதிப்பிலான 443 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் இந்த ஆண்டில் (2021) காணப்பட்டுள்ளன. வாரணாசியில் கங்கை ஆற்றில் பல்வழி முனையம் பிரதமர் திரு. நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் முதலாவது கண்டெய்னர் சரக்கு போக்குவரத்து கொல்கத்தாவில் இருந்து இந்த ஆற்றின் வழியாக வாரணாசி வந்தடைந்தது.  

பீகாரில் உள்ள கஹல்கோவன் என்ற இடத்திலிருந்து அசாமில் உள்ள பாண்டு வரை ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. கங்கை, பிரம்மபுத்திரா, இந்தோ-பங்களாதேஷ் ஒப்பந்த மார்க்கம் ஆகிய 3 உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் உருவாக்கப்பட்டு இவை சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கு மாதிரியாக உருவெடுத்து வருகின்றன.

கப்பல் பயணியர் சுற்றுலா போக்குவரத்து மற்றுமொரு முக்கிய மேம்பாட்டு பகுதியாகும். சென்னை துறைமுகத்தில் நவீனமயமாக்கப்பட்ட சர்வதேச பயணியர் கப்பல் முனையம் திறக்கப்பட்டது, மும்பை-கோவா பயணியர் கப்பல் சேவை தொடக்கம் போன்றவை இவற்றுக்கு உதாரணமாகும். 

விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் கடல்சார் போக்குவரத்து மற்றும் கப்பல் கட்டுமான சிறப்பு மையம் அமைத்தல், சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடலோரங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் அமைத்தல் மற்றும் அனைத்து பெரிய துறைமுகங்களிலும் சாகர்மாலா திட்டத்தின் கீழ் பல்துறை திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கும் முடிவு ஆகியனவும் இத் திட்டத்தின் அம்சங்களாகும்.

&&&&

வசூலிக்க வேண்டிய வாடகை, குத்தகை பாக்கி, வர வேண்டிய தொகை என்று ஒரு பெரிய பட்டியலை ஹெச் ராஜா ஜிஅவர்கள் பட்டியல் போடுவதைக் கேட்டால் தலை சுற்றுகின்றது.  பத்து லட்சம் கோடி கடந்த 50 வருடங்களில் ஆலய சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? முழுமையாக கேட்க https://youtu.be/UqgMR1McdF4

No comments: